இலங்கை அரசின் உயர் ஸ்தானிகராகள் மாற்றம்

harsha-abeywickramaஇந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போது கடமையாற்றும் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக விமானப் படை தளபதி எயார் மார்ஷல ஹர்ச அபேயவிக்ரம நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானப்  படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதனையடுத்தே இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார்.
எனினும், ஜாலியவின் நியமனம் குறித்த அறிவித்தலை கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற கருணாதிலக அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி வாசல் தாக்குதல் விவகாரம் பௌத்தர்களுக்கு முஸ்லிம்கள் மன்னிப்பு

1(3737)கண்டி, அம்பதென்னை முல்லேகம மஸ்ஜிதுல் பலா முஸ்லிம் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  ஆஜர்செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குதற்கும் அது தொடர்பிலான வழக்கை வாபஸ் வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இருசாரருக்கும் இடையில முல்லேகம் பிரியதர்ஷனாராம விஹாரையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  கூட்டத்திலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.   ‘இவ் இளைஞர்கள் அறியாத்தனமாக இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு சிங்களவரோ, பௌத்த தேரரோ இச் செயலை ஆதரிக்கவில்லை. பலநூற்றாண்டு காலமாக முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாரான ஒரு செயல் இடம்பெற்றுள்ளதை வண்மையாக கண்டிக்கின்றோம்’ என இக்கூட்டத்தில்; கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பௌத்த தேரர்கள் சுட்டிக்காட்டினர பள்ளிவாயலுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு தேவையான செலவுகளை வழங்க பௌத்த தரப்பினர் முன் வந்தபோதும் முஸ்லிம் தரப்பினர் அதனை மறுத்துவிட்டனர்.;. இரு சாராரும் இச் சம்பவத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வரவும் இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம்பெறாதிருப்பதற்கு தேவையான நடவக்கைளை மேற்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் 21ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதால் அன்றைய தினம் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக கடிதம் ஒன்றில் இருசாரரும் கைச்சாத்திட்டனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாஸா ஆனந்தவை கட்சியிலிருந்து நீக்க தடை

imagesCAWC5LK5இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்துவத்திலிருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கட்சி அங்கத்துவ நீக்கத்திற்கு எதிராக அமரதாஸா ஆனந்த கல்முனை மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். கட்சியின் தீர்மானத்திற்கு பதில் நீதவான் தாஹா செய்னுதீன் இன்று இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளார்.’ தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவென தெரிவிக்கப்படாமலும் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் குறித்த கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்தார். அத்துடன் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளராக அமரதாஸா ஆனந்த செயற்படுவதற்கு எந்தவித இடையூறு விளைவிக்கக்ககூடாது எனவும் பதில் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தமிழரசுக் கட்சி, அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுலவகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவி மரணம்

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

போலி நோட்டுக்கள் அச்சிட்ட இருவர் கைது-

D50454_014 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 289 போலி ஐயாயிரம் ரூபா  நோட்டுக்களுடன் நீர்கொழும்பு தளுபத்தையில் பல்லன்சேனை வீதியில், இன்டர்சீட் வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து தியாக மூர்த்தி நிதர்சன் (25 வயது), முருகேசுப்பிள்ளை வசீகரன் (22 வயது),  ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாணயத்தாள்களை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்;கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஜயந்த லியனகே தெரிவித்தார். பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், உப-பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஜி. விஜேசிறிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முதலில் ஒரு சந்தேக நபர்  தளுபத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரின் மணிப்பேர்ஸில் ஐயாயிரம் ரூபா  போலி நோட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது. வீடொன்றில் வைத்து டிஜிட்டல் கனிணி இயந்திரம், கடதாசி வெட்டும் இயந்திரம், கனிணி, லெப்டொப், விசைப்பலகைகள் இரண்டு, பணம் அச்சடிக்கும் தாள் 34, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ரூபா தாள்கள் இரண்டு, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்று, பிரின்டர், ஐயாயிரம் ரூபா  போலி நோட்டுக்கள் 289,  என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ப்பட்டுள்ள சந்தே நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் குற்றச் செயல்களின் பேரில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டவர்கள் எனவும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. சந்தே நபர்கள் இருவரும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தே நபர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், திருக்கேதீஸ்வர மனிதப் புதை குழி 09 ஆவது தடவையாக தோண்டப்பட்டது

mannar_1மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக 2013, டிசெம்பர், 20 ஆம் திகதி குழி தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட, மனிதப் புதை குழி 09 ஆவது தடவையாக தோண்டப்பட்டது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக சனிக்கிழமை  காலை குறித்த மனித புதைகுழி அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண முன்னிலையில் தோண்டப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசையும் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த மனித புதைகுழி எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.