யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

1(3750)அமெரிக்காவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிக்கப்பட்டன.
இந் நூல்களை த ஏசியன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆர்.மகோர்ஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பொதுநூலக சிறுவர் பிரிவில் வைத்து இன்று கையளித்தார்.
இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், த ஏசியன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டினேசா விக்கிரமநாயக்க, த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதிகள், யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் மற்றும் பொதுநூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபுதாபிக்கு விஜயம்

02(759)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியை நேற்று மாலை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைது

unnamed10யாழ். காங்கேசன்துறை கடற் பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் ஜனதாப்பட்டினம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வந்த 26 மீனவர்கள் காங்கேசன்துறை கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர்

இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியம்

300(533)இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சாட்சியமளித்து வருகின்றனர்.  
இவ் ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்.
ana‘கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எனது கணவருடன், நானும் எனது பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணமடைந்தோம். என்னையும் பிள்ளைகளையும் வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர் எனது கணவரை விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்வதாகக் கூறி, எங்களை மனிக்பாம் முகாமுக்குக் கூட்டிச் சென்று அங்கு தங்க வைத்தார்கள்’ ‘ஆனால் எனது கணவரை அவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை. என் கணவருக்கு இராணுவத்தினரே பொறுப்பு கூற வேண்டும்’ என்றும் அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
 ‘இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை’தனது கணவரைப் பொறுப்பேற்ற இராணுவ உத்தியோகத்தர்கள் யார் என்பதை நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னால் இப்போது அடையாளம் காட்டமுடியாது. என்றும்  ‘காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சனைக்கு உள்ளூரிலேயே தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதற்காக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.  
‘ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்பட்டாலொழிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்கிறார். 
இந்த விசாரணைகளுக்குச் சென்ற காணாமல் போனவர்களின் உறவுகளை இப்பதிவுகள் நடைபெற்ற நிலையங்களுக்கு வெளியில் காத்திருந்த அரசாங்க ஆதரவாளர்களும், இராணுவப் புலனாய்வாளர்களும் காணாமல் போனவர்களை மரணமடைந்தவர்களாக் கருதி மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்- கொள்ளுமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.
இத்தகைய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு இரணைமடுவில் வைத்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளையும் வழங்கியுள்ளனர். மேலும், இவ்வாறு மரணச்சான்றிதழ்களைப் பெறுகின்றவர்களுக்கு பணமும் வேறுவகையான உதவிப் பொருட்களையும் பெற்றுத்தருவதாகவும் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். சிலரை நிர்ப்பந்தித்துமுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.  இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் த.தே.கூ. பா.உறுப்பினர் சிறிதரன்.