பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள் -சகோதரர் மனோகரன்

imagesCARTOE9H

கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே?

மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.  

கேள்வி:-உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது?

மனோகரன்:- பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள்.ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள்.இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள்.அனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை .அந்த தேடலுக்கு பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டுபிடிக்க வேண்டும். www.asrilanka.com/2014/01/21/

சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கம்

untitledசமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேரில் சென்று கேட்டுள்ளார். இதேபோல், கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களையும் தமது பிரதிநிதிகளை ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார். இந்த கூட்டத்தை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இந்த கூட்டம் பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது. தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றை வரைய முக்கியஸ்தர்களின் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளனர்.

இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம்

03(563)23(27)மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதுடன் விளையாட்டு, திறன் அபிவிருத்தி மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக போராடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

பிறரிடம் கையேந்தும் நிலைமையை மாற்றி தம்மையும் தமது சமூகத்தையும் வலுவாக்கும் சக்தியாக தமிழ் பேசும் சமூகம் மாற்றமடைய வேண்டுமென்றும் சிவனேசத்துரை சந்திரகாந்தன்.

chandra‘நாம் கிழக்கு மாகாணத்தை 2008ஆம் ஆண்டு பொறுப்பெடுத்ததிலிருந்து  2012வரை பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். ஏனைய மாகாணங்கள் உற்றுப் பார்க்குமளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்துடனான நல்லாட்சியை  நடத்திக்காட்டினோம். இந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தாம் துணை நிற்பதாகக் குறிப்பிட்டு, முதலமைச்சு உட்பட அனைத்து அமைச்சுக்களையும் நீங்களே நிர்வகியுங்களென அன்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இனத்துரோகம் இழைத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு மகஜர்களை அனுப்பிவைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இது முஸ்லிம்களுக்கு எதிரான கோரிக்கையல்ல எனவும் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது’  இன்றொரு பேச்சு, நாளையொரு பேச்சு என்று நாளுக்குநாள் தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டு வெறும் பத்திரிகை அரசியல் செய்வதால் மாத்திரம் தமிழ்ச் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லையெனவும். கட்சிக்குள்ளேயே நிலையான கோட்பாடு இல்லாது மாற்றுக் கருத்துக்களுடன் பயணிப்பவர்கள் எவ்வாறு மக்களை வழிநடத்தப் போகின்றனர் என மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்தில் அரசடித்தீவு பொது மைதானத்தில்  புறநெகும திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன