இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மோசடி; வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

vavuniya-protest_ vavuniya-protest_1-626x380 vavuniya-protest_2 vavuniya-protest_3-1024x575இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவுள்ள நிலையிலும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது அமைச்சரொருவரின் சிபாரிசில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி. சிவமோகன், முன்னைநாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்களான க.பரமேஸ்வரன், எஸ்.பார்த்தீபன், பிரஜைகள் குழு தலைவர் எஸ். தேவராஜா உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

யாழில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை-

kaanaamt ponavarkal saatsiyamimagesCAOD1KU1காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்திலும் சாட்சியங்களை பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை காணாமல்போனவர்களின் உறவினர்கள் தகவல்கள், சாட்சியங்களை வழங்க முடியுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு, கிழக்கில் 6,500 பேர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடந்த மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்ததாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது. கிளிநொச்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதலாவது இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திலும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இரு மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முதலாவது அறிக்கை தயாரிக்கப்படுமென காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் -அமைச்சர் வாசுதேவ-

irumozhi uthavu......தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்றுப் பிற்பகல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டிலுள்ள பாரதூரமான பிரச்சினை ஒற்றுமையின்மையாகும். இதற்கு இருமொழி கொள்கையென்பது அவசியமானதாகவுள்ளது. நாம் வௌ;வேறு மதங்களினை மதித்து புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் சட்டமீறல்களை தெரியப்படுத்த குழு நியமனம்-

mahinda-deshapriyaதேர்தல் சட்ட திட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் ஆராய்ந்து பொலீசாருக்கு தகவல் வழங்குவதற்காக சகல பொலீஸ் பிரிவுகளிலும் பொது அதிகாரி உட்பட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்திட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக காவற்துறையினர் மாத்திரமே செயற்பட முடியும் எனவும், எனினும், சில காரணங்கள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு விஜயம்-

Pisvalதெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இவர் எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் இங்கு தங்கியிருப்பார். அத்துடன் அரச பிரதிநிதிகளை அவர் சந்திப்பதுடன் யாழிற்கும் விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடமாகாண பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதுடன் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகேதீஸ்வரத்தில் 16 தடவைகளில் 53 எலும்பு கூடுகள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து 16 தடவைகளில் 53 எலும்புப்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்டபோது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகளுடன் எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் இணைந்தே குறித்த எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர். இதேவேளை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு வருகைதந்த குற்றப் புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) நான்காவது நாளாகவும் இன்று தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர். கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை 16 பெட்டிகளில் 18 எலும்;புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனித புதைக்குழி புதன் கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம்-

GL Peiriesவெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். புதுடில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது மீனவர் பிரச்சினை, இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் மாநாட்டில், போர்க் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்த வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த தீர்மானம் குறித்தும், அதற்கு இந்தியா ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் சல்மான் குர்ஷித்தை, பீரீஸ் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது.

மரண தண்டனை கைதிகளை ஆராயும் குழுவுடன் நீதியமைச்சர் ஹக்கீம் சந்திப்பு-

hakeem met 1மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பொறுத்தவரை அத் தண்டனையை சில விதிமுறைகளை அனுசரித்து ஆயுள் தண்டனையாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு விதந்துரைப்பதற்காக அத்தகைய குற்றவாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் உரிய ஆலோசனைகளைத் தமக்கு வழங்குமாறு நீதியமைச்சரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அது சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரஸ்தாப குழுவினரின் அமர்வு நீதியமைச்சில் இடம்பெற்ற போது அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 424 சிறைக்கைதிகள் உள்ளனர். அரசியலமைப்பின் 34(1) உறுப்புரைக்கு அமைவாக மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்வதற்கு சம்பந்தப்பட்ட கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்களை தனித்தனியாக அலசி ஆராய்ந்து தமக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளார். கொலைக் குற்றவாளிகளாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறை வாசம் அனுபவித்து வருபவர்கள் ஒவ்வொருவரினதும் வயது, மனநிலை மற்றும் அவர்கள் புரிந்த குற்றச்செயலின் பாரதூரத் தன்மை என்பவற்றின்மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் பற்றிய ஆலோசனை வழங்குமாறும் அமைச்சர் குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நீதியமைச்சர் நியமித்துள்ள இக்குழுவில் நீதி, சிறைச்சாலை துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன், உளநல மருத்துவ நிபுணர் ஒருவரும், சமூகவியல் பேராசிரியர் ஒருவரும், குற்றவியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.