Header image alt text

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

mannar_1மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
முதற்கட்டமாக குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் மற்றும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
13ஆவது தடவையாகவும் நேற்று வெள்ளிக்கிழமை  குறித்த மனித புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெற்றது. ஆனால்  எதுவித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை. எனினும் அடையாளப்படுத்தப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இது வரை 10 பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெட்டிகளில் அடைக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை நீதவானின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் வைத்தியசாலையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 44 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று சனிக்கிழமை 14வது தடவை புதைகுழி தோண்டும் பணிகள் இடம்பெறும்.

திமுகவின்  உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்.

 140124081433_azhagiri_624x351_pti_nocredit‘கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்சியின் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கட்சி அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க அழகிரி முயற்சித்ததாக’ குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கட்சிக்காரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் – அது திமுகவின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் – , தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஒருபக்கம் திமுகவின் கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை கொண்டுவரும் முயற்சியில் கருணாநிதியும் அவரது மற்றொரு மகனும் திமுகவின் பொருளாளருமான மு க ஸ்டாலினும் பகிரங்கமாக முயன்றுவரும் நிலையில், விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து மு க அழகிரி அளித்திருந்த சமீபத்திய பேட்டியும், அதன் தொடர் நிகழ்வாக அவரது ஆதரவாளர்கள் செய்த சில செயல்களுமே இன்றைய அழகிரியின் தற்காலிக நீக்கத்தில் முடிந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மேலும் கருணாநிதி காலத்துக்குப் பிறகான காலகட்டத்தில் அவரது அரசியல் வாரிசாக யார் வருவது என்பது தொடர்பில் அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கு இடையில் நிலவும் பதவிக்கான பனிப்போரும் இருவருக்கும் இடையிலான மோதலுக்கான மூலவேராகவும் பரவலாக பார்க்கப்படுகிறது.

எல்லையை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்வோம்- அமைச்சர் ராஜித சேனரட்ண

140113133823_fishermen_release_trincomalee_304x171_bbc_nocreditஇலங்கை கடற்பரப்பிற்குள் யார் அத்துமீறி மீன்பிடித்தாலும் அவர்களைக் கைது செய்வோம். இந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்திய மீனவர்கள் சுமார் 500 பேர்வரை இலங்கை கடற்பகுதிக்கு வந்ததாகக் கூறும் இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள்,  (21-01-14) 25 பேரையும் முதல் நாள்; தாங்கள் 5 பேரையும்  கைது செய்ததாகவும். அதனைத் தாம் நிறுத்தப்போவதில்லை என்றும். இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் தாம் கைது செய்வோம் பேச்சு வார்த்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லை- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

140123144112_gotabaya_rajapaksa_batticaloa_512x288_bbcமட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக நேற்று வியாழனன்று சென்ற கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார். Read more

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி இது வரை 12 தடவைகள் தோண்டப்பட்டது. 

mannar_1மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 42 எழும்பு கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன இவவற்றில் 36 முழுமையான எலும்புக்கூடுகள் என்று மீட்பு குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரியொருவர் தெரிவித்தார். மற்றும் சிறுவர்களின் பற்கள், பெண்கள் அணியும் முத்துமாலைகளின் முத்துகள், உடைந்த வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த மனித புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதிலிருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக் கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும்  குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரிய அளவிலான தடையப்பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை என்றும தெரிவிக்கப்பட்டுளளது. இந்த புதைகுழி இன்று வியாழக்கிழமை 13 ஆவது தடவையாக தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆவா குழுவில் மேலும் இருவர் கைது

messerஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஏழாலை வடக்கு மயிலங்காடு பகுதியைச்; சேர்ந்த சிவலோகநாதன் ஜெயகிருஸ்ணா (வயது 33), ஈவினை கிழக்கைச்  சேர்ந்த வரதராஜா அன்பரசன் (வயது 28) ஆகிய இருவரை மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை அச்சுவேலி பொலிஸ் அதிகாரி கே.எம்.சி.பிரதீப் செனவரத்தின தலைமையிலான குழுவினர் கைதுசெய்துள்ளனர். கைதான இருவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இதேவேளை யாழ். கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்  தொடர்பில்  கோப்பாய் பொலிஸில் அந்த வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவின் தலைவரான ஆவா வினோத் உட்பட 09 பேரை கடந்த 6ஆம் திகதி கோப்பாய் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இதன் பின்னர் மேலும் 04 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் இந்த 13 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இந்தக் குழுவிலிருந்து 02 கைக்குண்டுகள், 12 வாள்கள், 06 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ஆவா குழுவைச் சேர்ந்த ஏனையவர்களை பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

மாகாண சபைக்கு  எதுவுமே வழங்கமாட்டோம் என்று ஜனாதிபதி அடம்பிடிக்கின்றார்.ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது –முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் .

16(254)ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு  அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது  ஜனாதிபதி  யாழ்ப்பாணத்திற்கு  வந்தபோது நான் சந்தித்தேன். அன்று என்னிடம் கேட்பதை கொடுப்பேன், பிரதம செயலாளரை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். வலி. தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரப் பரிசளிப்பு விழா அப்பிரதேச சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், Read more

பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள் -சகோதரர் மனோகரன்

imagesCARTOE9H

கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே?

மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.  

கேள்வி:-உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது?

மனோகரன்:- பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள்.ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள்.இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள்.அனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை .அந்த தேடலுக்கு பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டுபிடிக்க வேண்டும். www.asrilanka.com/2014/01/21/

சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கம்

untitledசமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேரில் சென்று கேட்டுள்ளார். இதேபோல், கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களையும் தமது பிரதிநிதிகளை ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார். இந்த கூட்டத்தை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இந்த கூட்டம் பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது. தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றை வரைய முக்கியஸ்தர்களின் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளனர்.

இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம்

03(563)23(27)மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதுடன் விளையாட்டு, திறன் அபிவிருத்தி மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக போராடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

பிறரிடம் கையேந்தும் நிலைமையை மாற்றி தம்மையும் தமது சமூகத்தையும் வலுவாக்கும் சக்தியாக தமிழ் பேசும் சமூகம் மாற்றமடைய வேண்டுமென்றும் சிவனேசத்துரை சந்திரகாந்தன்.

chandra‘நாம் கிழக்கு மாகாணத்தை 2008ஆம் ஆண்டு பொறுப்பெடுத்ததிலிருந்து  2012வரை பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். ஏனைய மாகாணங்கள் உற்றுப் பார்க்குமளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்துடனான நல்லாட்சியை  நடத்திக்காட்டினோம். Read more

யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

1(3750)அமெரிக்காவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிக்கப்பட்டன.
இந் நூல்களை த ஏசியன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆர்.மகோர்ஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பொதுநூலக சிறுவர் பிரிவில் வைத்து இன்று கையளித்தார்.
இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், த ஏசியன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டினேசா விக்கிரமநாயக்க, த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதிகள், யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் மற்றும் பொதுநூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபுதாபிக்கு விஜயம்

02(759)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியை நேற்று மாலை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைது

unnamed10யாழ். காங்கேசன்துறை கடற் பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் ஜனதாப்பட்டினம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வந்த 26 மீனவர்கள் காங்கேசன்துறை கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர்

இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியம்

300(533)இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சாட்சியமளித்து வருகின்றனர்.  
இவ் ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார். Read more

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழா.-

unnamedஇராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை 20-01-14 கல்லூரி அதிபர் திருமதி கமலாராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வடமாகாண அஞ்சல்மா அதிபர் என்.இரட்ணசிங்கம் நூற்றாண்டு நினைவு முத்திரையினை வெளியிட்டு வைக்க விஞ்ஞான தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

20140120_14002120140120_14050820140120_14051620140120_14241520140120_14251220140120_15074820140120_15081520140120_15091220140120_15592320140120_16140920140120_16581420140120_172841

இலங்கை அரசின் உயர் ஸ்தானிகராகள் மாற்றம்

harsha-abeywickramaஇந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போது கடமையாற்றும் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக விமானப் படை தளபதி எயார் மார்ஷல ஹர்ச அபேயவிக்ரம நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானப்  படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதனையடுத்தே இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார்.
எனினும், ஜாலியவின் நியமனம் குறித்த அறிவித்தலை கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற கருணாதிலக அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி வாசல் தாக்குதல் விவகாரம் பௌத்தர்களுக்கு முஸ்லிம்கள் மன்னிப்பு

1(3737)கண்டி, அம்பதென்னை முல்லேகம மஸ்ஜிதுல் பலா முஸ்லிம் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  ஆஜர்செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குதற்கும் அது தொடர்பிலான வழக்கை வாபஸ் வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இருசாரருக்கும் இடையில முல்லேகம் பிரியதர்ஷனாராம விஹாரையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  கூட்டத்திலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.   ‘இவ் இளைஞர்கள் அறியாத்தனமாக இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு சிங்களவரோ, பௌத்த தேரரோ இச் செயலை ஆதரிக்கவில்லை. பலநூற்றாண்டு காலமாக முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாரான ஒரு செயல் இடம்பெற்றுள்ளதை வண்மையாக கண்டிக்கின்றோம்’ என இக்கூட்டத்தில்; கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பௌத்த தேரர்கள் சுட்டிக்காட்டினர பள்ளிவாயலுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு தேவையான செலவுகளை வழங்க பௌத்த தரப்பினர் முன் வந்தபோதும் முஸ்லிம் தரப்பினர் அதனை மறுத்துவிட்டனர்.;. இரு சாராரும் இச் சம்பவத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வரவும் இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம்பெறாதிருப்பதற்கு தேவையான நடவக்கைளை மேற்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் 21ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதால் அன்றைய தினம் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக கடிதம் ஒன்றில் இருசாரரும் கைச்சாத்திட்டனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாஸா ஆனந்தவை கட்சியிலிருந்து நீக்க தடை

imagesCAWC5LK5இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்துவத்திலிருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கட்சி அங்கத்துவ நீக்கத்திற்கு எதிராக அமரதாஸா ஆனந்த கல்முனை மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். கட்சியின் தீர்மானத்திற்கு பதில் நீதவான் தாஹா செய்னுதீன் இன்று இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளார்.’ தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவென தெரிவிக்கப்படாமலும் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் குறித்த கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்தார். அத்துடன் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளராக அமரதாஸா ஆனந்த செயற்படுவதற்கு எந்தவித இடையூறு விளைவிக்கக்ககூடாது எனவும் பதில் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தமிழரசுக் கட்சி, அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுலவகர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவி மரணம்

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

போலி நோட்டுக்கள் அச்சிட்ட இருவர் கைது-

D50454_014 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 289 போலி ஐயாயிரம் ரூபா  நோட்டுக்களுடன் நீர்கொழும்பு தளுபத்தையில் பல்லன்சேனை வீதியில், இன்டர்சீட் வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து தியாக மூர்த்தி நிதர்சன் (25 வயது), முருகேசுப்பிள்ளை வசீகரன் (22 வயது),  ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாணயத்தாள்களை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்;கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஜயந்த லியனகே தெரிவித்தார். பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், உப-பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஜி. விஜேசிறிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முதலில் ஒரு சந்தேக நபர்  தளுபத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரின் மணிப்பேர்ஸில் ஐயாயிரம் ரூபா  போலி நோட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது. வீடொன்றில் வைத்து டிஜிட்டல் கனிணி இயந்திரம், கடதாசி வெட்டும் இயந்திரம், கனிணி, லெப்டொப், விசைப்பலகைகள் இரண்டு, பணம் அச்சடிக்கும் தாள் 34, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ரூபா தாள்கள் இரண்டு, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்று, பிரின்டர், ஐயாயிரம் ரூபா  போலி நோட்டுக்கள் 289,  என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ப்பட்டுள்ள சந்தே நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் குற்றச் செயல்களின் பேரில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டவர்கள் எனவும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. சந்தே நபர்கள் இருவரும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தே நபர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், திருக்கேதீஸ்வர மனிதப் புதை குழி 09 ஆவது தடவையாக தோண்டப்பட்டது

mannar_1மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக 2013, டிசெம்பர், 20 ஆம் திகதி குழி தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட, மனிதப் புதை குழி 09 ஆவது தடவையாக தோண்டப்பட்டது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக சனிக்கிழமை  காலை குறித்த மனித புதைகுழி அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண முன்னிலையில் தோண்டப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசையும் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த மனித புதைகுழி எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

சிறார் பாலியல் துஸ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்
 
imagesCATKGCE6சிறார் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. வத்திக்கான் ஆரம்பத்தில் இந்த தகவலை மறுத்தது. ஆனால் பின்னர் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது
முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. தொடர்புடைய விடயங்கள் துஸ்பிரயோகம், கத்தோலிக்கம், ஊழல், மனித உரிமை, ஒருபாலுறவு
கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது. ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.
பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.
பாதிரிமாரின் பாலியல் துஸ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஜனாதிபதியினால் புற்றுநோய் வைத்தியசாலை திறந்துவைப்பு:-

10(1477)‘வடக்கு – தெற்கின் இணைப்பிற்கு பாலமாக ‘கலர்ஸ் ஒப் கரேச்’ நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டில் 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக 19.01.14 ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர். Read more

கிளிநொச்சியில் உழவர் பெருவிழா:-

untitled32013ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களையும் பாற்பண்ணையாளர்களையும் தெரிவு செய்வதற்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவிக்கும் முகமாக வடமாகாண விவசாய,கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா நேற்று 18.01.14 சனிக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவுக் கலாசாரமண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் க.வி விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். தழிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கவிஞர் யுகபாரதி தலைமையில் உழவே எங்கள் உயிர் என்ற தலைப்பில் கவியரங்கமும், வவுனியா நிருத்திக நிகேத கலாமன்ற மாணவ மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மண்டபம் கொள்ளாத அளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயப் பெருமக்கள் பார்வையாளர்களாக ஆர்வத்தோடு பங்கேற்றிருந்தனர். 2008ஆம் ஆண்டுக்;குப் பிறகு கிளிநொச்சியில் மிக அதிக எண்ணிக்கையானோர் திரண்டிருந்த ஒரு பெருவிழாவாக இது கருதப்படுகிறது

ulavar-vizha1ulavar-vizha18pongal-4pongal-1