Header image alt text

காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு-

red cross 1இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடனேயே இதை தாம் செய்வதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறுஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. 16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருமொழிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகம்-

NIC New (1)சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார். இதன்கீழ் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையிலோ அல்லது கட்டணங்களிலோ மாற்றம் ஏற்பட மாட்டாது என்றும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். மொழி ரீதியான பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சிங்கள மொழியில் உள்ள தகவல்களை தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்த்து உள்ளடக்கிய முதல் அடையாள அட்டை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதல் அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இரா. சம்பந்தனுக்கு டெலோ கடிதம் அனுப்பிவைப்பு-

teloதமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு-

தேர்தல் சட்ட மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்டமை குறித்து 392 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும் தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களுடன் கைவிடப்பட்ட படகு கரையொதுங்கியது-

unnamed265 இலங்கையர்களுடன் நடுக்கடலில் கைவிடப்பட்ட படகு ஒன்று கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து ஒரு லட்சம் ரூபா முதல் மூன்று லட்சம் ரூபா வரையில் அறவிட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இவர்கள் படகில் ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை-

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றிவரும் 250 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த உத்தியோகத்தர்கள் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதன்படி இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளது. இவ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செல்லிடத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் சிறைக்குள் எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வைத்தியரின் வாகனம்மீது துப்பாக்கிச்சூடு-

ஜனாதிபதியின் வைத்தியர் எலியந்த வைட்டின் வாகனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பிலான விசாரணைகளுக்காக, பொலீஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இரண்டு பொலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வைத்தியரின் வீடு அமைந்துள்ள மிரிஹானை எதிரிசிங்க வீதியில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படும்போது, வைத்தியர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும், அவரது சாரதி மாத்திரமே இருந்ததாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படையின் புதிய தளபதி பதவிப் பிரமாணம்-

vimanapadai thalapathiவிமானப்படையின் புதிய தளபதியாக எயார் மாஷல் கோலித அரவிந்த குணதிலக இன்று பதவி ஏற்றுள்ளார். விமானப் படையின் 14ஆவது தளபதியாக இவர் நியமனம் பெற்றுள்ளார். பண்டாரவளை புனித தோமஸ் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்ற கோலித குணதிலக, கெடட் அதிகாரியாக 1980ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார். 1982ஆம் ஆண்டில் அவர் விமானியாக பதவியுயர்வு பெற்றார். இவர் ‘ரணவிக்ரம’ மற்றும் ‘ரணசூர’ பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். சரக்கு விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்களின் விமானியான இவர், சுமார் 4ஆயிரம் மணிநேரம் வானில் சஞ்சரித்துள்ளார்.

முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் மீட்பு-

mannarமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்னரும் மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் 56 பக்க அறிக்கை-

2013ம் ஆண்டு வரையில் தீர்க்கப்படாத இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான 56 பக்க அறிக்கை ஒன்றை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தல்கள் எவையும் முறையாக இடம்பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சிவில் பிரதிநிதிகள் கைது செய்யப்படுகின்றமை, Read more

அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை-

unnamedunnamed (1)அகில இலங்கை சிவாலய தரிசன சைக்கிள் யாத்திரை சிவராத்திரி தினமான இன்று (27.02.2014) சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தானத்திலிருந்து வாழ்நாள் சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தேவஸ்தான குரு சிவஸ்ரீ.சபா வாசுதேவக்குருக்கள் அவர்களால் யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சைக்கிள் யாத்திரையானது இலங்கை மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் குறித்து 408 முறைப்பாடுகள் பதிவு-

தேர்தல் சட்டமீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டவிதிகள் மீறப்பட்டமை தொடர்பில் 392 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் குறித்து 96 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 240 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் 156 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

நளினி உட்பட நால்வரின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை-

Indiaராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 4 பேரின் விடுதலை தொடர்பில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த 18ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு மீளாய்வு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என மத்திய அரசு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவர்கள் 4 பேரின் விடுதலைக்கு எதிராக இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.

இரணைமடு நீர் விநியோகத்திட்டம்; குறித்து கூட்டமைப்பு விசேட கூட்டம்-

untitledதமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்; யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல்வரை நடைபெற்றுள்ளது. இந்த விசேட பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றையதினம் கூட்டமைப்பின் நாடாளுனமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

திருவனந்தபுரம் உதவி உயர்ஸ்தானிகரகம் திறந்துவைப்பு-

imagesCA5MP3F3கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஜொய்மன் ஜோசப்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு காணப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு சர்ச்சை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ரமேஸ் சென்னித்தாலா மற்றும் கேரளாவின் முதலமைச்சர் ஓமன் செண்டிலா ஆகியோரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தாக இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-

mahinda manmohan meetஇந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மியன்மாரில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்பு நடைபெறும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியான பதிலை வழங்காத சுஜாதா சிங், அமெரிக்காவின் பிரேரணையை எழுத்து வடிவில் பாராமல் இந்தியா எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெண்ணை கடத்திய மூவர் கைது-

malaysiaஇலங்கைப் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் மலேசியாவில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூரில் உள்ள வங்கசா, மெலாவிட்டி பகுதியில் வைத்து குறித்த பெண் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட 20 வயதுடைய இலங்கை பெண் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அப்பெண்ணை மீட்டுள்ளதாகவும் மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவென குறித்த பெண்ணின் மைத்துனர் முறையான ஒருவர் 8,500 ரிங்கிங் பணத்தை கோரியுள்ளார். எனினும் அந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் இக்கடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முற்பகல் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து இரு இலங்கையர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின் மூன்றாவது சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

சீன மீனவர்களால் தொல்லை, வடக்கு மீனவர்கள் கவலை-

china fishermenimagesCA9OSPE3வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன மீனவர்களும் தமது கடற்பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more

அமரர் கந்தையா சபாரத்தினம் அவர்களின் நினைவாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு உதவி-

kadaiahkandaiahdkandaiahskandiaah.யாழ். சித்தன்கேணியில் சித்தன்கேணியூர் அமரர் கந்தையா சபாரத்தினம் (இளைப்பாறிய இறக்குவானை ஓவசியர்) அவர்களின் 100ஆவது பிறந்த தினத்தை ஒட்டி அவரது குடும்பத்தினரால் அப் பகுதியைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் 10 மாணவர்களுக்கு இரண்டு வருடத்திற்கான கல்விக்கான உதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா வாசுதேவக் குருக்களின் ஆசியுடன் 25.02.2014 நேற்று நடைபெற்றது. இதன்போது முதலாவது மாணவருக்கான அறக்கொடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் வழங்கி வைத்து ஆரம்பித்தார் இதனைத் தொடர்ந்து புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தாத்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன், பிரதேச சபை உறுப்பினர் சபாநாயகம் சசிதரன் ஆகியோர் அறக்கொடையை வழங்கி வைத்தனர்.

 

 

அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திரை

 அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திர நாளையதினம் 27.02.2014 அதிகாலை சித்தங்கேணி சிவ சிதம்பரேஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்பு வழிபாட்டுடன் பிரம்மசிறி ஞான. சபாரட்ண சர்மாவின் ஆசியுடன் ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்வில் பல துவிச்சக்கரவண்டி ஓட்டங்களில் கலந்து பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்ற ஜேர்மனியில் இருந்து வருகை தந்துள்ள இராஜா. இரத்தினசிங்கம். குணசேகர மற்றும் சுழிபுரத்தை சேர்ந்த வைத்திலிங்கம் கைலைநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இந் நிகழ்வானது 27.02.2014 நாளை காலை 5.30 மணியளவில் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி மானிப்பாய் வீதி ஊடாக மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலய முன்றலூடாக நல்லூரை சென்றடைந்து Read more

ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தபட்டுள்ளவர்கள் குறித்த விவகாரம், சிறபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள், வடக்கின் இராணுவ குறைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை வரவேற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பளை வரையில் யாழ் தேவி பயணிக்க ஏற்பாடு-

கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய இர்கொன் நிறுவனத்தினால் வடபகுதிக்கான ரயில் பாதை துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது கொழும்பிலிருந்து யாழ் தேவி கிளிநொச்சிவரை சேவையில் ஈடுபட்டுள்ளது. எனினும் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோமீற்றர் தூர ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரந்தன், ஆனையிறவு ரயில் நிலையங்களும் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோகபூர்வமான பளைவரை சேவை இடம்பெறவுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இந்திய உயர் ஸ்தானிகர் சிங்ஹா ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு-

அரச இருதய சத்திர சிகிச்சை உத்தியோகத்தர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.ரி.தர்மரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த பணி ப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது. இதனால் இருதய மாற்று அறுவை சிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சையும், மாற்று அறுவை சிகிச்சையும் இடம்பெறவில்லை எனவும், சத்திர சிசிக்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியில் உள்ள நோயாளர்களுக்கு வேறு திகதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் பேச்சுவார்த்தை-

இந்தியா மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவுள்ளதாக இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருமலை மற்றும் நீர்கொழும்பு பகுதி மீனவர்கள் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கவள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில், தமது மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என, இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கையின் கடல் எல்லையை மீறி பிரவேசித்த 91 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்திய கடல் எல்லையை மீறிய 25 இலங்கை மீனவர்களும், 5 படகுகளும் இந்திய பாதுகாப்பிரிவின் பொறுப்பிலுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு கூறியுள்ளது.

யுத்த அழிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட நடவடிக்கை-

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களின் சேதம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் இறுதி அறிக்கையை, அடுத்தமாதம் வெளியிடவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை தற்போது நிறைவுபெற்றுள்ளதாக திணைக்களப் பணிப்பாளர் டி.சி.எ.குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறவுள்ளன. கொழும்பில் இருந்து தம்புல்லை வரையில் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டு, தம்புல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ஏ9 வீதியுடன் இணைக்கப்படும். இதற்கு 600 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மரணத்துக்கு மாரடைப்பே காரணம்-சிறைச்சாலை ஆணையாளர்-

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அரசியல் கைதியின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42வயதான விஸ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானிய பிரஜையாவார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது நேற்றுமுன்தினம் சிறைக்குள்ளிருந்து கோபிதாஸின் சடலம் மீட்கப்பட்டது இதன்பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டது என்பது தெரியவந்தது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல்-

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமங்கள் மற்றும் சிறு நகர மேம்பாட்டு திட்ட (புற நெகும) வேலைத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இக்குழு இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய உள்ளுராட்சி சபைகளின் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படுகின்றது. இக் கலந்துரையாடலில் ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலிருந்தும் தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப அலுவலர் பெறுகை நிதி உதவியாளர் திட்டம் தொடர்பான உத்தியோகத்தர் சமூக கண்காணிப்புக் குழு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இக் கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வளவாளர்களால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினைக்கு 90 நாட்களுள் தீர்வு-பாரதீய ஜனதா கட்சி-

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று 90 நாட்களுக்குள் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும், மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே முரண்பாடில்லை என்றார்.

நாளை மறுதினம் வாக்காளர் அட்டை விநியோகம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் 28ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு மார்ச் 13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 125,000 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருமலையில் ஆயுதங்கள் மீட்பு-

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியிலிருந்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரி-56 ரக துப்பாக்கிகள் 05, ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய அறிவித்துள்ளார்.

க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆதரவு-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.  Read more

ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலய மெய் வல்லுநர் போட்டி-

யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கு சைவ சனமார்க்க வித்தியாசாலையின் 2014ஆம் ஆண்டுக்கான மெய் வல்லுநர் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையின் அதிபர் பிரதா கிரிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.

08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (12)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (10)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (1)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (2)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (3)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (4)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (5)08.02.2014 news put on 25.02.2014 Elaalai  (9)

விசேட சட்டக்குழுவை நியமிக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை-

இலங்கைமீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா சபையின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமித்தல் தொடர்பான சர்வதேச சட்டத்தை ஆராய்ந்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் வகையில் விசேட சட்டக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 6 அமைச்சர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளுக்கு அமைய இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமாயின் அதனை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொருளாதார விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றையும் நியமிக்குமாறு அவ்வமைச்சர்கள் கோரியுள்ளனர். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இலங்கையில் நீண்ட காலங்களுக்கு முன் சேவையாற்றிய இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இவ்வமைச்சர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துளளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை பரிந்துரை-

இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளை வெளியிட்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில், தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது. 18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் இலங்கையில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சில முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதிசெய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்க இலங்கை உரிய பதிலளிக்கவில்லையெனவும், வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத் தொடர்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பின்னணியில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை-

இலங்கைமீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேசம் சமூகம் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம்கெட்ட செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டல் ஆகுமெனவும் இனியும் தாமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பதில்

ஜெனீவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள மனிதவுரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான முன்கூட்டிய அறிக்கை குறித்த தமது கருத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் பற்றிய சர்வதேச விசாரணையை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் குறித்து சர்வதேச விசாரணையொன்று பாரபட்சமின்றி இடம்பெறவேண்டும் என்று நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், உள்நாட்டில் செயற்படுத்தப்படும் பொறிமுறையை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் நவிபிள்ளையின் அறிக்கை, பக்கசார்பானதாகவும், இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையீடு செய்வதாகவும் அமைந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் விசாரணை-

கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுக்காலை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாரடைப்பினால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவரின் மரணவிசாரணை அறிக்கை இன்றுபிற்பகல் கிடைக்குமெனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைதி நேற்றுக்காலை உயிரிழந்த நிலையில், சிறைச்சாலையின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்டார். யாழ். மந்திகையை பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜையான இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைதுசெய்யப்பட்டதுடன், நீண்டகாலம் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 2012இல் நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து, வரகக ஐந்துவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகின்றது.

இந்திய மீனவர்கள் 29 பேரின் விளக்கமறியல் நீடிப்பு-

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த 29 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் நேற்றுமாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை மார்ச் 10ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி கூறியுள்ளார். இதனையடுத்து, 29 தமிழக மீனவர்கள் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 13ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக இராமேஸ்வரம், மண்டபம் புதுக்கோட்டை, கோட்டைப்பட்டிணம் பகுதிகளைச் சேர்ந்த 29மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

மீசாலையில் பால் அபிவிருத்தி நிறுவனம் திறந்து வைப்பு.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் இலங்கையும் ஜேர்மன் நாட்டின் அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து பால் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை திறந்துவைத்துள்ளன. இந்நிகழ்வு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஜர்கன் மொஹாட் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் றூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையம் திறக்கப்பட்டதனூடாக சாவகச்சேரி மற்றும் மீசாலை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைந்துள்ளன.

பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை-தேர்தல் ஆணையாளர்-

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர பிரதிநிகளுடன் தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்விடயத்தை அவர் கூறியுள்ளார். அரச வாகனங்களை தம்வசம் வைத்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் அவற்றை மீளளிக்காத பட்சத்தில் அபராதத் தொகையை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கூறியுள்ளார். இதேவேளை, அரச அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார்களாயின் ஒழுக்காற்று அதிகாரிகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நேரடி விமான சேவை தொடர்பாக விளக்கம்-

பலாலி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களிலிருந்து இந்தியாவிற்கான வானூர்தி சேவைகளை மீண்டும் நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் இதற்கான விளக்கத்தை கடிதம்மூலம், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவிற்கு அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கோரிக்கை மட்டுமே என்றும் அவர் தமது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இத்தீர்மானம் குறித்து கடந்த அமைச்சரவை தீர்மான செய்தியாளர் சந்திப்பின்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, ஒரு நாட்டிற்கு வானூர்தி சேவையினை ஆரம்பிக்க 13ஆம் அரசியல் திருத்த சட்டத்தின்கீழ் மாகாண சபை ஒன்றிற்கு அதிகாரமழல்லை என குறிப்பிட்டிருந்தார். எனினும், அமைச்சரின் இந்த கருத்து உரிய விளக்கமின்றி வழங்கப்பட்டது. ஏற்கனவே 1960ஆம் ஆண்டுகளில் பலாலி திருச்சி வாநூர்தி சேவைகள் நடத்தப்பட்டதை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்றே மாகாண சபை வலியுறுத்தியது என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு நட்டஈடு-

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 265பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நட்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும் வகையில் நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. யுத்தகாலத்தில் வன்முறையால் கடும் பாதிப்புக்குள்ளான 177 பேருக்கும் சொத்து அழிவு (வீடுகள்) ஏற்பட்ட 44 பேருக்கும் வீடுகளை இழந்த அரச உத்தியோகத்தர்கள் 44 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புனர்வாழ்வு அதிகாரசபையால் 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் சரத் சந்திரசிறி முத்துகுமாரண, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ.சமரசிங்க, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டுபிடிப்பு-

கல்முனை பொலிஸ் பிரிவின் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் இன்றுபகல் மர்ம வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மீனவர்களால் இப்பொருள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிசாரும் விசேட அதிரடிப் படைடினரும் புலனாய்வுப் பிரிவினரும் அங்கு விரைந்து சென்று மர்மப்பொருள் குறித்து ஆராய்ந்துள்ளனர். எனினும் அது குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மேலதிக நடவடிக்கைக்காகவும் அம்பாறையில் உள்ள விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த மர்மப்பொருள் இந்தியாவில் பாவிக்கப்படும் கண்ணீர்ப் புகைக்குண்டாக இருக்கலாம் என்று அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

க.மு தம்பிராசாவின் போராட்டத்திற்கு காணாமற் போனோரைத் தேடியறியும் குழு, வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கம் ஆதரவு-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு ஐந்தாவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் காணாமற் போனோரை தேடியறியும் குழுவும், வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கமும் க.மு. தம்பிராசாவின் போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளன.  Read more

நான்காவது நாளாக தொடரும் தம்பி க.மு தம்பிராசாவின் சத்தியாக்கிரகப் போராட்டம்-

thampi..வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசாவ அவர்களின் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 21.02.2014ஆம் திகதியன்று காலை 6.45மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு நான்காவது நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இங்கு இணைக்கப்படுகின்றது:-

வலி வடக்கு மற்றும் சம்பூர் மக்களின் தற்போதைய தேவை நிவாரணமும், மீள்குடியேற்றமும், வேலைவாய்ப்புமே. இவற்றைக்கூட நிறைவுசெய்ய முடியாத அரசு எமது மக்களுக்கு எந்த உரிமைகளை எப்படித் தரப்போகின்றது?  Read more