இந்திய மாநில முறைமை  அமுல்படுத்தப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

untitledதனி ஈழம் ஒன்றை நிறுவ வேண்டுமென கோரவில்லை, இந்திய மாநில முறைமை இலங்கையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தினார் எனவும், தற்போது தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும்;. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு தமிழ் மக்களின் 500 ஏக்கர் காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருவகிறார்கள் என சுட்டிக்காட்டி. ஒரே நாட்டுக்குள் எவ்வித பேதமும் இன்றி வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (இந்திய முறையிலான தீர்வே சிறந்தது, பொருத்தமானது நாம் விரும்புவது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நீண்ட காலமாக கூறிவருகின்றார் என்பதும்.. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் இ;வகையான ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வாய்பாய் அமைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.)

வாள், சீருடையுடன் நால்வர் கைது- யாழில்

imagesCA2C7RO4யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் ஆலய நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலையும் மீறி இருந்த 4 பேரை தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வைத்து 07.02.14 இரவு கைது செய்துள்ளதாகவும். அத்துடன், அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாவும். நான்கு பேரும் தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கும் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலக்கு இடையில் மனிதாபிமானப்பணி-சிரியாவில் ஜநா

140208131451_homs_304x171_reuters_nocreditசிரியாவின் ஹோம்ஸ் நகரில் மோதலில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க ஐநா ஆயத்தமாகிவரும் சூழலில், இவ்வூரில் கடந்த மூன்று நாட்களாக இருந்துவருகின்ற போர்நிறுத்தம் குலைய மற்ற தரப்பே காரணம் என சிரியாவின் அரச படையினரும் கிளர்ச்சிக் குழுக்களும் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டிவருகின்றனர். கடந்த வெள்ளியன்று ஐநாவின் அனுசரணையில் நிவாரணப் பணிகள் ஆரம்பித்திருந்த இடங்களில் மோர்டார் குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன. உதவிப் பொருட்களை சுமந்துசெல்லும் வாகனத் தொடரணியால் அப்பகுதிக்கு செல்லமுடியுமா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களாக எண்பதுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக அரச படைகளின் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட மக்கள் மிகுந்த பலவீனமாக காணப்படுகிறார்கள். தாங்கள் அனுபவித்த அளவுக்கதிகமான கஷ்டங்களை இவர்கள் விவரித்துள்ளனர் என செய்திகள் தெரிpக்கின்றன.

மக்கள் சுதந்திரமாக வாக்குமூலம் அளித்தனர்- மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditஇலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவருபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் பற்றி தங்களுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் நடந்த விசாரணை அமர்வுகளின்போது, ‘மக்கள் சுதந்திரமாக, சுயவிருப்பத்துடன்’ தங்களின் வாக்குமூலங்களை அளித்துச் சென்றதாகவும் மக்கள் அச்சுறுத்தப் பட்டதாகவோ, பலவந்தப் படுத்தப்பட்டதாகவோ தமக்குத் தகவல் வரவில்லை என்றும் அவர் கூறினார். 131213143816_lanka_disappeared__304x171_bbc‘நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை. எங்களுக்கு அருகில் பொலிஸார் வரவும் இல்லை. ஊடகவியலாளர்கள் வந்துபார்க்கவும் அனுமதி இருக்கிறது. மிகவும் வெளிப்படையாகத் தான் நாங்கள் இயங்குகிறோம்’ என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். ஆணைக்குழுவுக்கு சுமார் 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் வரையில் வடக்கு கிழக்கு சிவில் மக்களிடமிருந்து வந்தவை என்றும் 5 ஆயிரம் முறைப்பாடுகள் காணாமல்போன இராணுவவீரர்கள் தொடர்பான முறைப்பாடுகள் என்றும் மெக்ஸ்வெல் பரணகம கூறுகிறார். காணாமல்போன பொதுமக்களில் 75 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என்றும் 20 வீதமானவர்கள் வரையிலேயே இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் காணாமல்போனவர்கள் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்த ஆணைக்குழு 1990 முதல் 2009 வரையான காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இறுதிப் போரில் காணாமல்போனோர் பற்றி இன்னும் ஆராயவில்லை 75 வீதமான நபர்கள் விடுதலைப் புலிகளாலேயே காணாமல்போயுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறுகிறார்

இறுதிக் கட்டப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்கள் பற்றிய தகவல்களுக்கு என்ன ஆனது என்று வினாவியபோது. ‘நாங்கள் கிளிநொச்சியில் இதுவரை விசாரணை நடத்தியுள்ள 9 கிராமங்களில் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை. அந்த மக்கள் இறுதிக் கட்டப் போரில் சிக்கவில்லை. வேறு பிரதேசங்களுக்குப் போனால் சிலநேரம் அந்தத் தகவல்கள் கிடைக்கலாம்’ என்றார் பரணகம. ‘காணாமல்போனவர்கள் இன்னும் உயிர்வாழ்கிறார்களா, அல்லது இறந்துவிட்டார்களா, எப்படி உயிரிழந்தார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து- பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்யுமாறு ஜனாதிபதி எங்களைக் கோரியுள்ளார்’ என்றும் கூறினார் ஆணைக்குழுவின் தலைவர். இந்த ஆணைக்குழு எல்எல்ஆர்சி பரிந்துரைகளுக்கு ஏற்ப செயற்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதுபற்றி வினவியபோது, ‘எல்எல்ஆர்சி ஆணைக்குழு பரிந்துரையின் படிதான் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது’ என்றார் அவர். காணாமல்போனவர்களுக்காக மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்று ஜனாதிபதி ஆணைக்குழு தலைவரிடம் கேட்டபேபாது. ‘இல்லை’ என்று அதற்குப் பதில் கூறிய மெக்ஸ்வெல் பரணகம, காணாமல்போனவர்களின் சடலத்தை பார்க்காமல் அவர்களின் மரணச் சான்றிதழை ஏற்க உறவினர்கள் விரும்பாது போகலாம் என்பதற்காக ‘இல்லாதநபருக்கான சான்றிதழ்’ (ஊநசவகைiஉயவந ழக யுடிளநnஉந) ஒன்றை பரிந்துரையாக முன்வைப்பது பற்றி ஆலோசித்துவருவதாகவும் கூறினார் (பிபிசி)