யாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 37 ஆவது நினைவு தினம் யாழ் குருநகரில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியடியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தர்த்தன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.