திருகோணமலையிலும் மனித எச்சக் குழியென சந்தேகம்

trincomalee_mass_graveஇலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றின் குழியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புகள் காணப்படுவது குறித்து காவல் துறை தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. நகரசபை நிர்வாகத்திலுள்ள மெக்கசர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களினால் இவை கணடு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மைதானத்தில் குறிப்பிட்ட பகுதி துப்பரவு செய்யப்பட்ட போது 5 அடி ஆழத்தில் காணப்பட்ட குழியொன்றில் இந்த எலும்புகள் காணப்பட்டதாக கூறினார். காவல் துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹன. இந்த எலும்புகள் மனித எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையால் திருகோணமலை நீதிமன்றத்தில் இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை மாலை மஜிஸ்திரேட் டி. சரவணராஜா அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். எதிர்வரும் புதன்கிழமை வரை அந்த பகுதிக்குள் வெளியார் நடமாட்டத்திற்கு தடை விதித்த அவர், பாதுகாப்பு உறுதிப்படுத்தல் தொடர்பிலும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

காணாமல் போனவர்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில்

missing_people_enquiry_jaffnaஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் மருததுவ பிரிவில் பணியாற்றிய ரேகா என்றழைக்கப்படும் மகேந்திரராசாவை இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது இராணுவத்தினரிடம் கையளித்த அவரது மனைவி மற்றும் உள்ளுர் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் சாட்சியமளித்திருக்கின்றனர். Read more