புளொட்’ அமைப்பால் ஊன்றுகோல் வழங்கி வைப்பு-

2014-02-14 13.39.532014-02-14 13.40.01யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கின் ஒரு அங்கமாக இன்று மதியம் முல்லைத்தீவு தண்ணீரூற்று ‘சாய்’ இல்லத்தில் அதன் பொறுப்பாளர் திரு தவராஜா தலைமையில் புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், புளொட் நிதிப் பொறுப்பாளருமாகிய கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களினால் ஊன்றுகோல்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி ஒரு தொகை ஊன்றுகோல்களை புளொட் அமைப்பின் ஜெர்மன் கிளைத் தோழர்கள் சேகரித்து அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்- இந்தியா

_salman_kurshid_indiaகொழும்பிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை புதன்கிழமை டில்லியில் சந்தித்து பேசியபோது சல்மான் குர்ஷித் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு சர்வதேச சமூகத்தில் நிலவ வேண்டுமாயின், இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்  அதற்கு ஏற்ற வகையில் திருப்திகரமான முன்னேற்றங்களை இலங்கை காண்பிக்க வேண்டியது அவசியம். அதே வேளை சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தபடுவதற்கு இந்தியா இடமளிக்காது இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்வுக் குழு அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெறும் வகையில் இருக்க வேண்டும். அந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்து இறங்கியவுடன் விசாவைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் இலங்கையர்களுக்கு வழங்குவதில் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன .என்று இந்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ளத் தீர்மானம் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தெரிவக்கப்படவில்லை.. இந்தக் கூட்டத்தில் இருநாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை. 

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி தொழில் முறைகளை யாழ் மீனவர்கள் கைவிடவேண்டும்.

imagesஇலங்கையில் அதிகாரபூர்வமாகத் ‘ட்ரோலிங் தொழில், தங்கூசி வலை, சுருக்கு வலைகளைப் பயன்படுத்துதல், குழைபோட்டு கணவாய் பிடித்தல், வெடிபோட்டு மீன்பிடித்தல், கம்பியால் குத்தி மீன்பிடித்தல் போன்ற தொழில் முறைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றை, பல மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள். எனவே தான் அவற்றைக் கைவிட்டு ஏனைய தொழில் முறைகளைப் பயன்படுத்துமாறு கோரியிருக்கின்றோம்’. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசித்துப் பயன்படுத்துவதனால், இருநாட்டு மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இன்றைய காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் தடைசெய்யப்பட்டுள்ள தொழில் முறைகளை யாழ் மீனவர்கள் கைவிட வேண்டும். அவ்வாறு கைவிடாவிட்டால், கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், காவல்துறையினர், கடற்படையினர் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எதிராகக்கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மீனவர்களுக்கு மட்டுமே, இந்த எச்சரிக்கை, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது என்பதே தமது கோரிக்கை. ‘அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர்களின் ஒப்பந்தத்தில், கைது செய்யப்படுகின்ற இருநாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே, ஜனவரி மாதம் 9 ஆம் தேதி இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்திருக்கிறார்.