யாழில். மக்கள் ஆர்ப்பாட்டம்; மன்னார் மக்கள் மிரட்டப்பட்டு தடுக்கப்பட்டனர்

140215174059_jaffna_protest_sri_lanka_304x171_bbcஇலங்கையின் வடக்கே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் நிலைமை, பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியறுத்தி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. ‘ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்துவதற்குக் கூட தடைகள் விதிக்கப்படுகின்றன’  ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நிலைமையில் உள்நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீரவு காணமுடியாது. ஆகவே, இதனை சர்வதேசம் கவனத்திற்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு காணும் வகையில் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற நடவடிக்கைகளின் மூலம் அபிவிருத்தியின் ஊடாக இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த அபிவிருத்தி உதவப் போவதில்லை. ஏன்று கூறினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து மக்கள், மூன்று பஸ் வண்டிகளில் இலுப்பைக்கடவைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சிலநபர்கள் அந்த பஸ் வண்டிகளின் சாரதிகளுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும். மக்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் அந்த பஸ் வண்டிகள் எரிக்கப்படும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து குறித்த சாரதிகள் தமது பயணத்தை நடுவழியில் நிறுத்திக் கொண்டு மன்னாருக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சோதி குரூஸ் தெரிவித்தார்.  

அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்

missing_people_enquiry_jaffnaகாணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  தொடர்ந்து சாவகச்சேரியில் நேற்று நடைபெற்றது. இதன்போது காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மனைவி தனது கணவரை, அல்லது தாய் தனது மகன்கள் தொடர்பாக அதிகமாக சாட்சியமளிக்க வந்திருந்தனர். இந்நிலையில் காணாமற்போன முருகன் சிவராஜா, முருகன் ஜெயரட்ணம் என்ற தனது இரண்டு மகன்கள் சார்பாகவும் சாட்சியமளித்த  சாவகச்சேரியினைச் சேர்ந்த முருகன் என்ற முதியவர் வந்திருந்தார். அவர் சாட்சியமளிக்கையில்,  ‘எனக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு ஆண்பிள்ளைகள் அவர்கள் இருவரும் வயலில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை மீட்க நான் தேடாத இடங்கள் இல்லை. இருந்தும் எனக்கு என் மகன்கள் கிடைக்கவில்லை. நானும் ஒரு கூலி வேலை செய்து பிழைப்பவன் பிழைப்பினைப் பார்ப்பதா? எனது ஏனைய மூன்று பிள்ளைகளையும் பார்ப்பதா அல்லது எனது காணாமற்போன 2 மகன்களைத் தேடுவதா என வினவினார். இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் ‘ உங்கள் மகன்களை பிடித்துச் சென்ற இராணுவத்தினரை அடையாளங்காட்ட முடியுமா எனக்கேட்டனர். அதற்குப் பதிலளித்த முதியவர் ‘ போங்கய்யா, என்ர பிள்ளைகள் பிடிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை என்னால் எவ்வாறு அந்த இராணுவத்திரை ஞாபகம் வைத்திருக்க முடியும். எனக்கும் வயதாகிவிட்டது. இதேமாதிரியாக பல தடவைகள் பல இடங்களில் கேட்டுவிட்டார்கள். நீங்களும் இதேதான் கேட்கின்றீர்கள் இருந்தும் என் பிள்ளைகள் மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்கின்றேன். நீங்கள் மட்டும் அந்த நேரம் இங்கு இருந்திருந்தால் அன்றைக்கு நீங்களும் காணாமற்போயிருப்பீர்கள்’ என்றுகூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். தேவாலயத்தில் வைத்து எனது அண்ணாவையும் மேலும் 23 பேரையும் கொண்டு சென்றனர்  நாவாற்குழியில் 1996 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 19 ஆம் திகதி துமிந்த என்கிற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது, தேவாலயத்திலிருந்த எனது அண்ணன் மற்றும் மேலும் 23 பேரை இராணுவத்தினர் கொண்டு போயினர்.  ஆதற்கு பின்னர் அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லi என காணாமற்போன பிரேமதாஸ் ஸ்ராலின் ஜீவாவின் தங்கையான பிரேமதாஸ் ஜுவா சாட்சியமளித்தார்.

கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு 

140215110458_srilankavalachenai_paper_factory_srilanka_304x171_bbc_nocreditகடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 25வது நாளாக தொடர்வதையடுத்து ஆலையின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. 60 வருடங்களுக்கு முன்னர் வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் தற்போது கழிவு கடதாசிகளை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்தி நடைபெறுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வரும் காகித இறக்குமதி, இயந்திரங்கள் பராமரிப்பின்மை மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஏற்கனவே ஆலை நஷ்டமடைந்துள்ள போதிலும் சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் குறிப்பிட்ட வகை கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யுப்படுகின்றது.

ஏற்கனவே ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றிய இந்த தொழிற்சாலையில் தற்போது சில நூற்றுக் கணக்கான ஊழியர்களே பணியாற்றினாலும் மாதாந்த சம்பளத்திற்காக அவ்வப்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தாம் ஈடுபபட வேண்டிய நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இழப்பீட்டுத் தொகை வழங்கி தங்களை சேவையிலிருந்து விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் ஆலை ஓப்படைக்கப்பட வேண்டும் என என்று கோருகின்றனர். ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் ஆலை பூட்டப்பட்டுள்ள வேளையில் தீப்பிடித்து பெரு நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இது தெடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.