Header image alt text

கட்டைவேலி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மெய் வல்லுநர் போட்டி-

kattaiveli school 16.02 (14)யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி திரு. பொன்னையா. முகாமைக்குரு கட்டைவேலி சேகரம், அருட்திரு செ.பிரின்ஸன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பாடசாலையின் அதிபர் திரு. புஷ்பாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கிராமப் பாடசாலை என்று இப்பாடசாலையை புறக்கணித்து, தமது பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் சேர்க்க வேண்டுமென்று பெற்றோர்கள் நினைக்காமல் தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்ப்பதன் மூலம்தான் பாடசாலையும் முன்னேறும், மாணவர்களும் முன்னேறுவார்கள். எங்களுடைய சமுதாயத்தின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது. ஏனைய எல்லா வளர்ச்சிகளைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி கூடினால்தான் சமுதாயம் முன்னேறும். எனவே மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சியுறும் வகையில் தங்களுடைய கல்வியிலே மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

kattaiveli school 16.02 (12)kattaiveli school 16.02 (15)kattaiveli school 16.02 (13)kattaiveli school 16.02 (8)kattaiveli school 16.02 (2)kattaiveli school 16.02 (4)kattaiveli school 16.02 (5)kattaiveli school 16.02 (6)kattaiveli school 16.02 (7)

போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: நவநீதம்பிள்ளை-

navneethamஇலங்கை தொடர்பான போர் குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார். இலங்கையில், 2009ல், புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. சரணடைவதற்குச் சென்ற ஏராளமான புலிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர் குற்றங்கள் குறித்து, தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையக தலைவர், நவநீதம்பிள்ளை, இலங்கை போர்க் குற்றம் குறித்து, சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக, அவர், 74 பக்க அறிக்கையையும் சமர்பித்துள்ளார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மாலைதீவில் ஆரம்பம்-

SAARC VELIVIVAKARAசார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு மாலைத்தீவில் இன்று ஆரம்பமாகியுள்ளது.  இம்மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. வலய ஒத்துழைப்பு, உணவுப் பாதுகாப்பு, சூழல் மாற்றும், கல்வி மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு இராணுவ உதவி கிடைக்காது-நரேந்திர மோடி-

NARENDRAMODIதாம் பதவிக்கு வந்தால் இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவப்போவதில்லை என பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இந்த உறுதிமொழியை அவர் அண்மையில் தமிழகத்தில் வைத்து தமக்கு வழங்கியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை கோபாலசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் பதவியில் இருந்தபோது இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவிகளை வழங்கவில்லை. எனினும் அக் கொள்கையை காங்கிரஸ் அரசாங்கம் மீறிவிட்டது. இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமர் நிலைக்கு தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் என வை கோபாலசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக்கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டதாக வை கோபாலசாமி குறிப்பிட்டுள்ளார்.

சுழிபுரம் கசிப்பு உற்பத்தியை தடுக்குமாறு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை-

Valikamam_West_Divisional_Councilயாழ். சுழிபுரம் குடாக்கனைப் பகுதியில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடந்த 13.02.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பலருக்கும் அறியத்தந்தும் இதுவரை பொருத்தமான எதுவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. இப் பகுதியானது சனத்தொகை அதிகமாக உள்ள பகுதியாகும். இதேவேளை தொடர்ச்சியாக இப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வரும் நிலையில் சழூகவிரேத நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடிய வாய்ப்பான சூழல் இடம்பெறலாம். எனவே மேற்படி விடயம் தொடர்பில் எமது பிரதேச மக்களது நலனை கருத்திற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மக்களது நல்வாழ்வுக்கு உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கௌ;கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதிவு செய்வதற்கு தவறியோர்க்கு சந்தர்ப்பம்-

யாழ். வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் கடந்த 5ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பிரகாரம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியமர்வுக்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட கேணல் ஈஸ்வரனுடன் கடந்த வெள்ளிக்கிழமை மீளவும் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கமைய மீள்குடியமர்வு தொடர்பிலான விவரங்களைத் திரட்டுவதற்காக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுவரை பதிவு செய்யாதவர்களை நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் மற்றும் மருதனார் மடம் பாரதி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அராலி வடக்கு சில்வெஸ்டர் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்டப் போட்டி-

யாழ். அராலி வடக்கு சில்வெஸ்டர் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 15.02.2014 அன்று பிற்பகல் 4மணியளவில் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சங்கானை பிரதேச செயலர் திரு சோதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர் 

தடுப்பு முகாமிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்-

manus_island1அவுஸ்திரேலியா, மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமிலிருந்து சுமார் 35பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும் உடனடியாக அவர்களை மீண்டும் கைதுசெய்து தடுப்பு முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளாக அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர் இவர்களில் சிலர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைக்கவென மனூஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமுகாமிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமினதும் நவ்று தீவிலுள்ள முகாமினதும் நிலைமை குறித்து ஐ.நா சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் விமர்சனங்களை தெரிவித்துவருகின்றன. இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் பணியாளர்கள் சிலர்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கச்சத்தீவு விடயத்தஜல் மத்திய அரசின் நிலைப்பாடு மாறவேண்டுமென வலியுறுத்தல்-

KACHCHATIVEதமிழக மீனவர்கள் அனைத்து நலத்திட்டங்களையும் காப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் நாள்தோறும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற அடிப்படை பிரச்சினையை மையமாகக் கொண்டே இரண்டு நாட்;டு மீனவர்களுக்கு இடையிலும் முறுகல் ஏற்பட்டு வருகிறது எனினும் இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தை கொண்டிருக்கிறது இந்நிலையில் மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தமது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை-

elections_secretariat_68சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் 30 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அத்தகைய பிரசார அலுவலகங்களை அகற்றுவதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.