தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜோன் ரங்கின் சந்திப்பு-

download (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கினை நேற்றையதினம்  சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.  நேற்று  பகல் யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைமைகள், வட மாகாணசபையின் செயற்பாடுகள், வடக்கு மக்களின் தேவைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமிர்தலிங்கம் பகீதரன் – ஜனாதிபதி சந்திப்பு 

1aa(43)தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். கோடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன்  நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் இனம்,மதம் மற்றும் மாகாண பேதமின்றி முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல் எதிர்ப்பு.

imagesCAWZ1WWKஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டுப்பட்டு தண்டனை குறைக்கப்பட்டிருந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகுலின் தந்தையான ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் 23ஆண்டுகாலம் சிறையில் கழித்ததால் அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு பேரறிவாளன் மற்றும் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க 3 நாள் கெடுவை மத்திய அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது. இது குறித்து அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவன். என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில் சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.