வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள்-

vali metku pradesa sabai etpaadu (5)யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரனது அழைப்பின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் 18.02.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வட்டு இந்து நவோதய பாடசாலைக்கு அவர் விஜயம் செய்து அப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினருடன் ஆராய்ந்தார். இக் கலந்துரையாடலில் பாடசாலை அதிபர் சிவஞானபோதன் தனஞ்சேயன், வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இராஜதுரை, கௌரவ சபாநாயகம், கௌரவ சசிதரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்பின்னர் பாடசாலையின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல இடங்களையும்; அவர்கள் பார்வையிடப்பட்டதுடன் தொடர்ந்து வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்கத்திற்கும் விஜயம் மேற்கொண்டு 2013ம் ஆண்டில் ஒதுகீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக கொள்வனவு செய்யப்பட்ட பாத்திரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் வழங்கினர். இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இராஜதுரை, கௌரவ சபாநாயகம், கௌரவ சசிதரன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் இதேவேளை யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரனது அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் (18.02.2014) சம்பில் துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது 2013ம் ஆண்டில் ஒதுகீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக மேற்கௌ;ளப்பட்ட மயான திருத்தப்பணிகளை அவர் பார்வையிட்டார். இதன்போது வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இராஜதுரை, கௌரவ சபாநாயகம், கௌரவ சசிதரன ஆகியேர் கலந்துகொண்டிருந்தனர் இதன் பின்னர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரனது அழைப்பின்பேரில் சம்பில் துறையில் அமைந்துள்ள சம்புநாதேஸ்வரர் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன் விஜயம் மேற்கொண்டிருந்தார். இங்கு அண்மையில் திறந்து வைக்கப்ட்ட 20அடி உயரமான சிவலிங்கத்தையும் அவர் பார்வையிட்டார். வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இராஜதுரை, கௌரவ சபாநாயகம், கௌரவ சசிதரன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

vali metku pradesa sabai etpaadu (6)unnamed4unnamed 1unnamed3vali metku pradesa sabai etpaadu (9)vali metku pradesasabai etpaadu (3)