கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய மெய்வல்லுநர் போட்டி-

hhhhhயாழ். மல்லாகம், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய வருடாந்த மெய் வல்லுநர் போட்டி. கடந்த 19.02.2014 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. சோ.சுகிர்தன், தெல்லிப்பளை கேட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சு.சண்முககுலகுமாரன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற யாழ். இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு. எஸ். விக்னராஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். வித்தியாலயத்தின் அதிபர் திரு. சிவகுமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர் திரு சிவகுமார் அவர்கள் உரையாற்றும்போது, இப்பாடசாலைக்கான மைதானத்தினை அமைப்பதற்கு உரிய காணியினை வாங்க வேண்டியிருக்கின்றது. இந்த காணிக்காக ஓய்வுபெற்ற யாழ் இலங்கை வங்கி முகாமையாளர் திரு. எஸ்.விக்னராஜா அவர்கள் 10 லட்சம் ரூபாவினை வழங்கி உதவியிருக்கின்றார். இருந்தபோதிலும் இப்பணியினை மேற்கொள்வதற்கு பெருமளவு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. ஆகையினால் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களிடமும் இதற்கு தங்களாலான உதவிகளை வழங்க முன்வருமாறு விண்ணப்பிக்கின்றேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மைதானம் அமைவதற்கு புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களும், பழைய மாணவர்களும் மாத்திரமல்லாது நன்கொடையாளர்களும் நிதியுதவியளிக்க வேண்டுமென்றும், இந்த மைதாத்தினை அமைப்பதற்கு உதவுவதன் மூலம் மாணவர்கள் கல்வியில் மாத்திரமல்லாது அவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களிலும் தம்மை ஈடுபடுத்தி உடல் ரீதியிலும் திறமை கொண்டவர்களாகவும், வலிமை பெற்றவர்களாகவும் விளங்க ஏதுவாகவிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நவிப்பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம்;-அமெரிக்க அதிகாரி-

navneethamஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அமையும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை உள்ளிட்ட பன்னிரண்டு முக்கிய பரிந்துரைகளை அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அமெரிக்கா, தன்னால் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடியொற்றியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை அடிப்படையாக கொண்டே அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கும். ஆனால், முழுமையாக அதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இரு மண்டையோடுகள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் இந்த புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த மண்டையோடுகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ளது. மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது முதல் 29 ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 30 பேர் கைது-

LK policeதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை 9 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பேரணி சென்றமை, பதாதைகள் ஒட்டியமை மற்றும் பிரதான வீதிகளில் தேர்தல் இலக்கங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

afkhan1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின்போது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம்மீது தாக்குதல்-

vavuniya blastவவுனியாவிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றை இலக்கு வைத்து மணியளவில் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இப்பத்திகை நிறுவத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளே வெடித்துள்ளதாகவும், எனினும் பத்திரிகை நிறுவனத்தின் முன்பாக இப் பொருள் வீழ்ந்து வெடித்தமையினால் நிறுவனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பில் 21 முறைப்பாடுகள் பதிவு-

imagesCAB3LJ2Hமாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 21 முறைபாடுகள் இதுவரை தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றுள் தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான 7 முறைபாடுகளும், தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 14 முறைபாடுகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறிப்பாக அச்சுறுத்தல்கள் மற்றும் தேர்தல் பிரசார அலுவகம்மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுளும் கிடைத்திருப்பதாகவும், தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் 74ஆம் விதிமுறையைப் பின்பற்றி நடக்குமாறு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு-

untitled6தமிழகம் மதுரையில் உள்ள இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது திருவாரூர் அகதி முகாமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த முகாமில் கடந்த நான்கு வருடங்களில், சிறுநீரக கோளாறினால் நோயால் 9 அகதிகளின் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. முகாமிற்கு விநியோகிக்கப்படுகின்ற தரமற்ற நீர் விநியோகமே இதற்கான காரணம்என்று த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு இராணுவம் அழுத்தம்;

srilankan refugeesதாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக அந்த முகாமில் உள்ள வலி. வடக்கு மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். வலி.வடக்கில் சொந்தக் காணியில்லாதவர்களையே மாவை கலட்டியில் உள்ள அரச காணியில் குடியேறுமாறு நலன்புரி நிலைய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு, பலாலியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கடந்த 24 வருடங்ளாக உடுப்பிட்டியிலுள்ள தனியார் காணியில் நலன்புரி நிலையம் அமைத்துத் தங்கியுள்ளனர். தற்போது 14 குடும்பங்கள் அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன. குறித்த குடும்பங்களுக்குக் கடந்த வாரம் மாவை கலட்டியில் அரச காணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு, குறித்த காணியை அரச அதிகாரிகள் கொண்டு சென்று காண்பித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 2 பரப்பு வீதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் தற்போது உடுப்பிட்டியில் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திலிருந்து 14 குடும்பங்களையும் வெளியேறுமாறு அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் நிர்ப்பந்தித்து வருவதாக நலன்புரி நிலைய மக்கள் குறிப்பிடுகின்றனர். மாவை கலட்டியில் அடையாளம் காட்டப்பட்ட காணியில் குடியேறுமாறு அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் கடந்த சில தினங்களாகத் தம்மை வற்புறுத்தி வருவதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். தாம் தமது சொந்த நிலங்களிலேயே குடியமர்வோம் என்றும் அவர்கள் தெரிவித