கோபிதாஸின் இறுதிக் கிரியைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு-

unnamed1unnamedபுதிய மகசின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கோபிதாஸின் அஞ்சலி நிகழ்வும், இறுதிக் கிரியைகளும் யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இன்றுமுற்பகல் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் மாகாணசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதன்படி கோபிதாஸின் இறுதிச் சடங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன், சுகிர்தன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஜீவன் ஆகியோரும் இன்னும் பல அரசியல்வதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். unnamed3இதேவேளை கோபிதாஸின் மரணத்தைக் கண்டித்தும் இம் மரணம் தொடர்பில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றுகாலை வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

unnamed3இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கான அனந்தி சசிதரன், பா.கஜதீபன், சுகிர்தன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஜீவன் ஆகியோரும் இன்னும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.