கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்-
கிளிநொச்சி, திருமுறிகண்டி, பகுதியில் நேற்று (03.03.2014) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்பு குவியலில் இருந்து இரும்புகளை எடுக்க முற்பட்டபோது அதனுள் இருந்த வெடி பொருளொன்று வெடித்ததனால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் ஒரே குடுமம்பத்தைச் சேர்ந்தவர்களாவர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளனர். அழகர் இராமநாதன் (வயது 53), அழகர் இராசந்திரன் (வயது 51), இராமசந்திரன் அல்லிநாயகி (வயது 45), மற்றும் ஜெயராம் கிருஷ்ணவேணி (வயது 27) ஆகியோரே காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.