தேசிய சுகாதார வாரம் 2014-
பொது அலுவலர் தொடர்பு மற்றும் துப்பரவு செய்யும் தினம் என்ற கருப்பொருளின் கீழ் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ் யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 10.03.2014 இன்று ஊர்காவற்றுறை பிரதேச செயலக சுற்றாடலை சுத்திகரித்து முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
11.03.2014 நாளை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், ஊர்காவற்றுறை பிரதேச சபை உத்தியோகத்தர்களும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களும்; ஊர்காவற்றுறை பொலிசாரும் இணைந்து ஊர்காவற்றுறை நகர்புற பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். 13.03.2014 அன்று அன்றைய தொனிப்பொருளான சிறுநீரக, புற்று நோய் போன்ற தொற்றா நோய்களை தடுக்கும் கருப்பொருளின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு கருத்தரங்கு காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது. 14.03.2014 அன்று ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள உணவு கையாளுபவர்களுக்கான போதைப்பொருள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை மண்டபத்தில் பிற்பகல் 2.00மணியளவில் ஊர்காவற்றுறை பிரதேச சபையினருடன் இணைந்து ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் அனைத்துலக மகளிர் நாள் அனுஷ்டிப்பு-
அனைத்துலக மகளிர் நாள் கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இன் நிகழ்வில் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது பெண்கள் தமிழர்கள் தம் வரலாற்றில் தனித்துவமான இடத்தைக் கொண்டவர்கள். தமிழ்ப் பெண்கள் கடந்த கால எமது வரலாற்றிலே பல களங்களை கண்டு களமாடியவர்கள் இவ்வாறான சிறப்புமி பெண்கள் கௌரவிக்கப்படவேண்டும் போற்றப்பட வேண்டும் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது திட்டமிட்டே ஏற்படுத்தப்படுவது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இவை பெண்களுக்கான பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது. இன் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் பெண்கள் என்ற நிலையில் இரண்டாம்தர பிரயைகளாக நோக்கப்படுவது மிக வேதனைக்குரிய விடயம் இவ்வாறான நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றார்.