வலிமேற்கு பிரதேச சபையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்-
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் 08.03.2014 அன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் யாழ்ப்பாணம், கிளிநெச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் தற்போதய சழூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள்கள் கலந்து சிறப்பித்திருந்தார் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி உமா தங்கவேல் அவர்களும் கௌரவ விருந்தினராக மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரனி செல்வி காயத்திரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு வலக்கம்பரை முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆரம்பமாகியது. பிரதேச சபையின் முன்னாள் உள்ள தழிழ் அன்னைக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இந் நிகழ்வின் வரவேற்புரையை சட்டத்தரணி செல்வி சாருஜா நிகழ்த்தினார் இதன் பின்னர் ஆசியுரைகளை சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவக் குருக்கள் மற்றும் தென்இந்திய திருச்சபை வன பிதா அன்டனி அடிகளார் அவர்களும் வழங்கினர். தொடர்நது.
தலைமை உரையினை வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ நாகரஞ்சினி ஐங்கரன் உரையாற்றினார்,
இதன்போது அவர், இன்றைய நாள் மகளிர்களுக்கான ஒர் மகத்தான நாள். இந் நாளில் பெண்களின் மகத்துவத்தை போற்றுவது அனைவரினதும் முக்கிய கடமையாகும். பெண்களுக்கான சமத்துவம் வழங்கப்பட்டதாக வெறும் எழுத்து வடிவத்திலேயே கூறப்படுகின்றது இவ் விடயத்தை நிஜமான வாழ்வில் காணமுடியாது உள்ளது. இவ் விடயம் தொடர்பில் சரியான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களும் பெண்களே குறிப்பாக நடைபெற்று முடிந்த யுத்தத்தில் அதிக அளவான பாதிப்பு பெண்களுக்கே ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்து பிள்ளைகளை இழந்து கொடிய யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் மாறாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களது வாழ்வாதாரத்திற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் தொடர்ச்சியாக இவர்கள் தங்கிவாழும் நிலை மாற்றப்படவேண்டும். இதற்கும் மேலாக அண்மைக்காலமாக பெண்கள் மீதான வண்முறைகள் அதிகரித்து செல்வது மிக கேவலமான ஓர் நிலை ஆகும் இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் பெண்கள் மீது பாதுகாப்பற்ற ஓர் நிலையினை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த வாரப்பகுதியில் எமது பிரதேசத்தை சேர்ந்த 10000 பெண்களது கையொப்பத்தினை பெற்றுள்ளேன். இந்த நகலை இந் நாட்டின் முதற் பெண் மணியான கௌரவ சிராந்தி ராஜபக்ச அவர்களுக்கு சமர்ப்பிப்பதன் ஊடாக இத் தினத்தினை பொது விடுமுறை நாளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை களை இன்று மேற்கொள்ள உள்ளேன் இவ் 10000 எமது பிரதேச பெண்களது கையெப்பத்தினையும் எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களிடம் இன்று கையளிக்கின்றேன் இவ்வாறு பொது விடுமுறை ஆக்குவதன் வாயிலாக பெண்கள் மீதான விளிப்புனர்வை ஏற்படுத்த முடியும் என்றே கருதுகின்றேன் என கூறினார் இந் நிகழ்வையொட்டி மகளிர்களுக்கு 47 வகையான போட்டிகள் நடாத்தப்பட்டது இந் நிகழ்வில் ஏறத்தாள 600 மகளிருக்கு பரிசுகள் வழங்கப்ப்டது. இதற்கும் மேலாக ஒவ்வெரு கிராமசேவகர் பிரிவிற்கும் ஒருவர் என்ற வகையில் 25 கிராம சேவகர் பிரிவிலும் 25 பெண்களுக்கு ஆற்றல் மிகு பெண்மணி என்ற விருதும் 15 வருடங்களுக்கு மேல் முன்பள்ளி சேவையாற்றியவர்களுக்கு ஆசிரிய மணி என்ற கௌரவ விருதும் வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதே வேளை மிக நீண்ட கால சேவைக்காக திருமதி இமெல்டா சுகுமாருக்கு மாதரசி என்ற கௌரவத்தினையும் தவிசாளர் வழங்கி கௌரவித்தார். இன் நிகழ்வில் பிரதேச பெண்களது பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
கௌரவ சிராந்தி ராஜபக்ச நாட்டின் முதற் பெண்மணி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு, ஜனாதிபதி செயலகம், கொழும்பு -01. சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தல் பேருமதிப்புடையீர், மேற்படி விடயம் தொடர்பாக தங்களிடம் எனது தாழ்மையான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன். சர்வதேச மகளீர் நாள் உலகம் எங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற மகளீருக்குரிய ஓர் மகத்தான நாள் ஆகும். இச் செயற்பாட்டின் வாயிலாக மகளீர் மீதான விழிப்புணர்வு மட்டுமல்லாது மகளீருக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை நோக்காக உள்ளது. இதுவே உலக பொதுமையாகவும் உள்ளது. இவ் விடயம் தொடர்பில் இலங்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை மிக முக்கியமாக உள்ளது.அண்மைக்காலமாக பெண்கள் மீதான வன்முறைகளும் ஒடுக்கு முறைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளமை அவதானிக்க கூடியதாய் உள்ளது. இவ் விடயம் தொடர்பில் இந்த நாட்டுக்குள்ளேயும் சரி இந்த நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் சரி அடக்கு முறைகளும் ஒடுக்கு முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறானதோர் நிலை பெண்கள் அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு மீது எதிர்கால சூழலில் மிக நம்பிக்கை அற்ற நிலையை உருவாக்கும் என்பது மிக தெளிவான ஒன்றாகும். இதற்கும் மேலாக நடைபெற்று முடிந்துவிட்ட யுத்தத்திலும் அதிகம் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் பெண்களே என்பதும் யாபேரும் அறிந்த உண்மை.இதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த பாதிப்புக்கு உட்பட்ட 90000 விதவைகள் உள்ளதாகவும் இவர்களில் 40 வயதிற்கு உட்பட்டவர்களே பெரும்பாலானவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதிலும் யாழ்ப்பாணத்தில் ஏறத்தாள 20000 பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.இது மட்டுமல்லாமல் யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் கிறீஸ் பூதம் போன்ற பல சம்பவங்களும் பெண்களுக்கான பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது.இதற்கும் மேலாக அண்மைக்காலம் வரை பெண் சிறுமிகள் மீதான வன்புணர்வுகள்,கற்பழிப்புகள்,கடத்தல்கள்,கொலைகள் மற்றும் தற்கெலைகள் அதிகரித்து வருவதை பத்திரிக்கைகள் வாயிலாக அறியக்கூடிய சூழ் நிலை காணப்படுகின்றது. இதே வேளை மொத்தச்சனத்தொகையில் 50 வீதத்திற்கு மேலாக பெண்கள் காணப்படுகின்ற நிலையில் உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்டதும் ஜனாதிபதியாக ஒரு பெண் ஆண்டதுமான இந் நாட்டில் பெண்கள் மீதான விழிப்புணர்வு போதுமான நிலை காணப்படவில்லை என்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் மகளீர் மீதான விளிப்புனர்வினை ஏற்படுத்தவும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் பெண்களுக்கான சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்வும் இந்தநாட்டினுடைய முதற் பெண்மணி என்ற வகையில் சர்வதேச மகளீர்தினமான மார்ச் 8ம் நாளினை தேசிய விடுமுறை தினமாக பிரகடணப்படுத்துவற்காண நடவடிக்கையினை மேற்கொண்டு உதவுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதோடு இவ்விடையம் தெடர்பில் 10000 பெண்களது கையொப்பத்தினை பெற்று தங்களிடம் சமர்ப்பி;க்கின்றேன் தாங்கள் இவ்விடையம் தெடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்தநாட்டில் உள்ள பற்றுருதியை வெளிப்படுத்தும் மேற்படி விடயம் தெடர்பில் தங்களது பரிபுரனமான ஒத்துளைப்பினை எதிர்பார்து நிறைவு செய்கிறேன்………………………………… திருமதி.நா.ஐங்கரன், தவிசாளர். வலிகாமம் மேற்கு பிரதேச சபை பிரதி கௌரவ ஈ.சரவணபவன் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்மாவட்டம் திருமதி இமல்டா சுகுமார்