Header image alt text

ஐ. நா. சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில் ஹர்த்தால்.

trinco aarpaattam (3)trinco aarpaattam (1)trincohartalgenevatrinco aarpaattam (2)ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை முறியடிப்போம் என்ற தலைப்பில் சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்கள் ஓன்றியம் என குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றின் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது திருகோணமலை நகரப் பிரதேசத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக நகரிலும் அண்மித்த பகுதிகளிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் போக்குவரத்து சேவை வழமை போல் ஆரம்பமான போதிலும் ஆங்காங்கே இடம். பெற்ற கல் வீச்சுக்கள் மற்றும் தாக்குதல்களையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் சில பேருந்து வண்டிகளின் முன் பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன. அரசாங்க தனியார் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. திருகோணமலை நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐ. நா மனித பேரவை உட்பட சில நாடுகளுக்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர். இந்த பேரணியில் பௌத்த பிக்குகள் உட்பட சிங்கள மக்களே பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. பேரணி முடிவில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐ .நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. குறிப்பாக தமிழர்களை பொறுத்தவரை ஒரு வித அச்ச உணர்வு காரணமாக இன்று தங்களது வெளிநடமாட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தமது வீடுகளிலே முடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் அழைப்பு விடுத்த அமைப்பு ஒரு அநாமேதய அமைப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்க ஆதரவு செயல்பாட்டாளர்களினாலே பின்புலத்திலே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்திருக்கின்றார். அநுராதபுரம் சந்தியிலிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை கண்டனப் பேரணியொன்றும் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கைதான மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை

ruki_praveenகிளிநொச்சியில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிற்கமைய விடுதலை. அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான சந்தேகத்தில் கைதானதாக அதிகாரிகள் கூறினர். இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாக தகவல்களை சேகரிக்க சென்றிருந்தபோது கைதாயினர். ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்

140319102621_crimea_base_304x171_bbc_nocreditக்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது. ரஷ்ய கொடிகள் அங்குள்ள கட்டிடங்களில் பறக்கின்றன. க்ரைமியாவில் ஒரு ஆயுத மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அங்கு இரு அரசாங்க அமைச்சர்கள் செல்வதாக யுக்ரெய்ன் கூறுகின்றதுஆனால், அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்ய ஆதரவிலான அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். க்ரைமியாவில் கடந்த ஞாயிறன்று 96 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த, மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில், யுக்ரெய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று பெரும்பாலானோர் வாக்களித்ததை அடுத்து  ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், க்ரைமியாவின் நாடாளுமன்றம், தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது. ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைவதற்கான 140317100040_crimea_referendum_512x288_ap_nocreditமுறையான கோரிக்கையை விடுப்பதற்காக க்ரைமியாவின் பிரதமர் முயற்சித்துள்ள நிலையில். மேற்கு நாடுகள் அதிருப்திக்கு இடையே, க்ரைமியா யுக்ரெய்னில் இருந்து பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான தடைகளை விதிக்கலாம் என்று  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஆராய்கிறார்கள். க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான பதிலடி குறித்து ஆராய்கின்றன.

மலேசிய விமான மர்மம் நீடிக்கின்றது தேடுதல் தொடர்கிறது-

malaysian airlinesபத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான தாய்லாந்து கூறுகிறது. இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதாக அது கூறியது. தாய்லாந்தின் இந்தத் தகவல், முன்னர் மலேசிய ராணுவம் தெரிவித்த உறுதிப்படுத்தப்படாத தகவலுக்கு வலு சேர்க்கிறது.. தேடும் முயற்சியில் மேலும் 9 சீனக் கப்பல்கள் சுமார் மூன்று லட்சம் சதுர கிமீ பரப்பளவுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தச் சென்றிருப்பதாக, சீன அரசு தெரிவித்தது. Read more

மன்னாரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு அழைப்பு-

imagesமன்னாரில் நாளை நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஆகியன இணைந்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துகின்றன. இப் போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டியும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், மீள்குடியேறி நான்கு ஆண்டுகளாகியும் முறையாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதனைக் கண்டித்தும், இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள்குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதையும், கிளிநொச்சி தர்மபுரம் ஜெயக்குமாரியையும் அவரது மகளினதும் கைதை கண்டிப்பதுடன் அதற்கு நியாயம் கேட்பதுடன் வன்னிப் பிரதேசம் எங்கும் திடீர்ரென தொடங்கிய இராணுவ சோதனையை கண்டித்தும் திட்டமிட்ட நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத்தை தடுக்கக் கோரியும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் இடம்பெறவுள்ளது. மன்னார் பொது விளையாட்டரங்கில் நாளை காலை 9.30முதல் மாலை 3.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு-நிமல்கா பெர்னாண்டோ-

nimalka fernandoஇலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் பிரதிநிதி கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இது குறித்து தெரிவித்ததாவது, ‘இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ குழுக்களுக்கு எதிரான வன்முறைகளில் எம்மால் அதிகரிப்பைக் காண முடிகின்றது. குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளது. எனவே அமைப்பின் சிபாரிசுகளை கவனத்திற் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள முடிவை வழங்குவதற்கு நிர்வாகத்தினரால் சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்,’ என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறை தொடர்பில் அதிகளவு முறைபாடுகள் பதிவு-

cafeமேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பிலான் முறைபாடுகள் இம்முறை அதிகளவில பதிவாகி இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெற்கு மேல் மாகாண சபைகளிலேயே ஊடகத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளும் அதிக அளவில் மத்திய நிலையங்களை கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அதிகளவான முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதை காட்டிலும், மதுபோதையின் காரணமாக ஏற்படுகின்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் தினத்தில், பாதுகாப்பின் தற்போதிருப்பதை விட மூன்று மடங்காக அதிகரிக்குமாறு காவற்துறையிடம் கோரி இருக்கிறோம். வாக்களிப்பை குழப்பியடிக்கும் முயற்சிகள் தொடர்பான முறைபாடுகளும் கிடைத்துள்ளநிலையில், அவற்றை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

தூக்கு தண்டனை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு-

alugusuதூக்குத் தண்டனை தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை உள்ளடங்கிய அறிக்கை நீதியமைச்சுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்காள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஷந்ராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். கண்டி, போகம்பர சிறைச்சாலைக்கு வந்த 90சதவீதமான மக்கள் தூக்குத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தவிர தற்போது கிருல பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தூக்குமேடையை பார்வையிட்ட பெரும்பாலோனோர் தூக்கு தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை நீதியமைச்சிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கானோர் சாட்சியமளிப்பு-

mattakalappil saatsiyamகாணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் இன்று சாட்சி விசாரணைகள் நடைபெற்றன. இன்று சாட்சியமளிப்பதற்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் நூற்றுக்கும் அதிகமானோர் சமூகமளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு – வாகரை, தெற்கு கிரான் ஆகிய பகுதிகளில் சாட்சி விசாரணைகள் பதிவுசெய்யப்படவுள்ளன. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்கள், இந்த 03 நாட்களில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 74 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது-

indian fishermen arrestஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட, மேலும் 74 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 53 மீனவர்கள், 13 மீன்பிடி படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாகவும், ஏனைய 21மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டதாவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்-

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததாவது, ‘பல விடயங்களைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்குள் நாட்டு மக்களை தள்ளிவிட அரசாங்கம் தயாரில்லை. அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்திற்கு ஆயுதம் எவ்வாறு வந்தது? இதனுடன் யார் தொடர்புபட்டுள்ளார்கள், என்பது தொடர்பில் பரந்த அளவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 30 ஆண்டுகால மோதல்களில் இருந்து மீண்ட மக்களை மீண்டும் அந்நிலையிலேயே வைத்திருக்க நாங்கள் தயாரில்லை. ஆகவே, ஜெனீவா தீர்மானத்திற்கு பயந்து நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை.’ என்றார்.

ஜெயக்குமாரி ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் சந்திப்பு-

missing_peopleகிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மாவட்டத்தின் பூஸா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இன்றையதினமும் நேற்றுமே அவர்கள் ஜெயக்குமாரியை சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் பாலேந்திரன் விபூசிகா (13) நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

தேர்தல் தொடர்பில் 898 முறைப்பாடுகள் பதிவு-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 898ஆக உயர்வடைந்துள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது. இதில் 854 சம்பவங்கள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பானது என கபே இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேல் மாகாணத்தில் 515 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 320 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் கபே சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்-

sivasakthi ananthanவவுனியாவில் உள்ள கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக சிவில் உடை தரித்த இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு, தேடுதல் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வவுனியாவின் பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல்வரை அதனைத் தொடர்கின்றனர். இவ்வேளை வீடுகளில் பட அல்பங்களும் சோதிக்கப்படுகின்றன. இன்றுகாலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். Read more