ஐ. நா. சபையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில் ஹர்த்தால்.

trinco aarpaattam (3)trinco aarpaattam (1)trincohartalgenevatrinco aarpaattam (2)ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளை முறியடிப்போம் என்ற தலைப்பில் சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்கள் ஓன்றியம் என குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றின் மூலம் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது திருகோணமலை நகரப் பிரதேசத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக நகரிலும் அண்மித்த பகுதிகளிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் போக்குவரத்து சேவை வழமை போல் ஆரம்பமான போதிலும் ஆங்காங்கே இடம். பெற்ற கல் வீச்சுக்கள் மற்றும் தாக்குதல்களையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் சில பேருந்து வண்டிகளின் முன் பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன. அரசாங்க தனியார் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. திருகோணமலை நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐ. நா மனித பேரவை உட்பட சில நாடுகளுக்கு எதிரான வாசக அட்டைகளையும் தமது கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர். இந்த பேரணியில் பௌத்த பிக்குகள் உட்பட சிங்கள மக்களே பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. பேரணி முடிவில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐ .நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. குறிப்பாக தமிழர்களை பொறுத்தவரை ஒரு வித அச்ச உணர்வு காரணமாக இன்று தங்களது வெளிநடமாட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தமது வீடுகளிலே முடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் அழைப்பு விடுத்த அமைப்பு ஒரு அநாமேதய அமைப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்க ஆதரவு செயல்பாட்டாளர்களினாலே பின்புலத்திலே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்திருக்கின்றார். அநுராதபுரம் சந்தியிலிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை கண்டனப் பேரணியொன்றும் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கைதான மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை

ruki_praveenகிளிநொச்சியில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைதான அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிற்கமைய விடுதலை. அவர்கள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் குலைக்க முயன்றதான சந்தேகத்தில் கைதானதாக அதிகாரிகள் கூறினர். இந்த இருவரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, ஜெயக்குமாரி பாலேந்திரன் தொடர்பாக தகவல்களை சேகரிக்க சென்றிருந்தபோது கைதாயினர். ஜெயக்குமாரி இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்

140319102621_crimea_base_304x171_bbc_nocreditக்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது. ரஷ்ய கொடிகள் அங்குள்ள கட்டிடங்களில் பறக்கின்றன. க்ரைமியாவில் ஒரு ஆயுத மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அங்கு இரு அரசாங்க அமைச்சர்கள் செல்வதாக யுக்ரெய்ன் கூறுகின்றதுஆனால், அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்ய ஆதரவிலான அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். க்ரைமியாவில் கடந்த ஞாயிறன்று 96 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்த, மக்கள் கருத்தறியும் வாக்களிப்பில், யுக்ரெய்னில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவது என்று பெரும்பாலானோர் வாக்களித்ததை அடுத்து  ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கான ஒரு கோரிக்கை ஆவணத்தில், க்ரைமியாவின் நாடாளுமன்றம், தம்மை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது. ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைவதற்கான 140317100040_crimea_referendum_512x288_ap_nocreditமுறையான கோரிக்கையை விடுப்பதற்காக க்ரைமியாவின் பிரதமர் முயற்சித்துள்ள நிலையில். மேற்கு நாடுகள் அதிருப்திக்கு இடையே, க்ரைமியா யுக்ரெய்னில் இருந்து பிரிவதற்கு முடிவெடுத்த பின்னணியில், இது தொடர்பில் ரஷ்யா மீது எப்படியான தடைகளை விதிக்கலாம் என்று  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஆராய்கிறார்கள். க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானதாகப் பார்க்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான பதிலடி குறித்து ஆராய்கின்றன.

மலேசிய விமான மர்மம் நீடிக்கின்றது தேடுதல் தொடர்கிறது-

malaysian airlinesபத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான தாய்லாந்து கூறுகிறது. இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதாக அது கூறியது. தாய்லாந்தின் இந்தத் தகவல், முன்னர் மலேசிய ராணுவம் தெரிவித்த உறுதிப்படுத்தப்படாத தகவலுக்கு வலு சேர்க்கிறது.. தேடும் முயற்சியில் மேலும் 9 சீனக் கப்பல்கள் சுமார் மூன்று லட்சம் சதுர கிமீ பரப்பளவுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தச் சென்றிருப்பதாக, சீன அரசு தெரிவித்தது._australia_malaysiaஇந்தக் கப்பல்கள் வங்களா விரிகுடாவுக்கு தென்கிழக்குப் பகுதிக்கும், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. மற்றுமொரு திருப்பமாக, மாலத்தீவில் சிலர் இந்த விமானம் காணாமல் போன நாளில், குடா {ஹவாதோ தீவில் வானில் மிகவும் குறைவான உயரத்தில் ஒர் விமானம் பறந்துகொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறியதை அடுத்து, மாலத்தீவு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர் ஆனால் இது போன்று முன்னர் கிடைத்த பல தகவல்கள் சரியானதல்ல என்று பின்னர் தெரியவந்தது. இந்த விமானத்தைத் தேடும் பணியில் இப்போது 26 நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.தேடும் பணி இப்போது ஆஸ்திரேலியா அளவுள்ள ஒரு பகுதியில் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, நியுசிலாந்து, கொரியா, ஜப்பான் , ஐக்கிய அரபு எமிரேட்டுகள் உட்பட பல நாடுகள் விமானங்கள் மற்றும் கப்பல்களை இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தியிருக்கின்றன. விமானத்தைத் தேடும் இந்த முயற்சி இப்போது உலகம் முழுவதும் சுமார் 2.24 மிலியன் சதுர கடல் மைல்கள் பகுதியில் நடப்பதாக மலேசிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்த விமானத்தில் பயணித்த 153 சீனப் பயணிகளின் உறவினர்கள் தங்களுக்கு சரியான தகவல்கள் தரப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். பிந்திய செய்தி.- காணாமல் போன விமானத்தின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில்? விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் இரண்டு பொருட்கள் அஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சுமார் 2500 கிமீ தொலைவில் காணப்பட்டன. இவை கணிசமான அளவு பெரியவை, அவை கடல் நீரின் மேற்புறம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் தெளிவற்ற சூழ்நிலை காரணமாக தேடுதல் வேட்டை தடைபடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.