Header image alt text

  ஜ. நா. நவநீதம்பிள்ளை, இலங்கை ஜனாதிபதிக்கு  த.வி.கூ. ஆனந்தசங்கரி கடிதம்- 

imagesCAMXH5OLஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர், நவநீதம்பிள்ளை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், திரு. வீ.ஆனந்தசங்கரி தனித்தனியாக இரண்டு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். நவநீதம்பிள்ளைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் தீர்மானம் – திருத்தத்துக்கான வேண்டுகோள்  ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் அணியில் ஒரு கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நான் செயற்படுகின்றேன். ஆனால் தமிழ் மக்கள் சம்பந்தமான எந்த விடயத்திலும் என்னுடன் கலந்தாலோசிக்காமல் அரசியலில் அனுபவமற்ற சிலருடன் இணைந்து சிலர் மட்டும் தனித்து தீர்மானித்து செயற்படுகின்றனர். Read more

அமெரிக்க பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு-

imagesCA4LGNKJஅமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள பிரேரணைக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பிரதமர் டேவிட் கெமரூன் இதனைத் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இந்த கருத்தை வெளியி;டடுள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த காலங்கள் தொடர்பாக பொறுப்புக்கூற தவறியுள்ள அதேநேரம், மறுசீரமைப்பு விடயங்களிலும் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளதற்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசார குறுந்தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை-

Mதொலைபேசிகளூடாக தேர்தல் பிரசாரம் தொடர்பில் குறுந்தகவல்கள் அனுப்பும் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தொலைத் தொடர்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரால் சட்டவிரோத பிரசாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷா பலப்பிட்ட தெரிவித்துள்ளார். இந்த வியடம் தொடர்பில் கையடக்க மற்றும் நிலையான தொலைப்பேசிகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் தனிப்பட்ட ரீதியில் குறுந்தகவல் ஊடாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது-

imagesCA5PZGM2யாழில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக் கோட்டையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து, சந்தேகநபர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நாளை மறுதினம் இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை-

fishermen talksஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் கொழும்பில் நடத்துவதற்கு இந்திய மீனவர் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்திய மீனவர் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மீனவர் பேச்சுவார்த்தைக்கு 18 இந்திய மீனவர் பிரதிநிதிகளும் 11 அதிகாரிகளும் பங்கேற்றவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதே அளவான பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இலங்கை மீனவர் சங்கங்களில் இருந்து பங்கேற்கவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகு அகதிகளை மெனஸ்தீவில் தங்கவைக்க ஏற்பாடு-

manus_island1படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகள் எதிர்வரும் காலங்களில் மெனஸ் தீவில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி எபட் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பசுபிக் திட்டத்தின் கீழ், மெனஸ் மற்றும் பப்புவா நியுகினி ஆகியவற்றில் முகாம்களை அமைத்து, அங்கு செல்லும் அகதிகள் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து மெனஸ் தீவுக்கு உடனடியாக மாற்றப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்று ரொனிஎபட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.