Header image alt text

அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு-

uma illam 19uma illam 20uma illam 22uma illam 23uma illam 24uma illam 25uma illam 18uma illam 17uma illam 16uma illam 15Uma illam 14uma illam 13Uma illam 10Uma illam 9Uma illam 8Uma illam 7Uma illam 6Uma illam 4Uma illam 3uma illam 2Uma illam 1Uma illam 0uma illam 21தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட நிலையில் காட்சி தருகின்றது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பு மற்றும் மேற்பார்வையின்கீழ் வவுனியா உமா மகேஸ்வரன் வீதி, கோயில்குளம் பகுதியில் அமைந்துள்ள மேற்படி நினைவு இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி உமாமகேஸ்வரன் சமாதி, வளாகம், உமா மகேஸ்வரன் ஞாபகார்த்த வாசிகசாலை, நினைவில்லத்தின் சுற்றுமதில், பூந்தோட்டம் ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சிதருகின்றது. 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் மேற்படி நினைவில்லத்திலேயே இடம்பெற்று வருகின்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி என்பன இடம்பெறுவதுடன், இரத்ததானம், சிரமதான், அன்னதானம் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை மாணவர்களுக்கு ஜேர்மன் தோழர்கள் உதவி-

vaddukottai (2) vaddukottaisஜேர்மனியில் வசிக்கும் தோழர் ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் ஜெர்மன் தோழர்களின் நிதிப் பங்களிப்பின்கீழ் மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள் கல்விக்கு கைகொடுப்போம் என்ற உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் நிகழ்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்வில் யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வட்டு இந்து நவோதய பாடசாலையின் உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கடந்த 21.03.2014 வெள்ளிக்கிழமை அன்றுமாலை வட்டுக்கோட்டையில் வைத்து இப்பொருட்கள் வழங்கிவைப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள், எமது மாணவர்களின் விளையாட்டுத்துறையை வளர்ப்பது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். இவ்வாறாக விளையாட்டுத் துறையை வளர்ப்பதன் ஊடாக ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க முடியும் என தெரிவித்தார். அத்துடன் இவ் உதவித்திட்டத்தினை முன்னெடுக்கும் ஜேர்மனி வாழ் புலம்பெயர் தோழர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம், கல்விழான் சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-

kalvilan news (2)kalvilan (2)யாழ். சுழிபுரம் கல்விழான் பகுதியில் உள்ள கல்விழான் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை (23.03.2014) அவ் நிலையத் தலைவர் அன்னலிங்கம் தலைமையில் தமழி; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.சபாநாயகம் மற்றும் த.சசிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின் நிலையத்தின் தலைவர் தலைமை உரையாற்றும்போது, ஏற்கனவே எமது பகுதி மாணவர்கள் கல்வியில் உயரவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்.ஈ.சரவணபவன் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் அயராது பாடுபடுகின்றனர். Read more

மன்னார் எல்லை பலவந்தமாக கைப்பற்றப்படுவதாக குற்றச்சாட்டு-

வில்பத்து சரணாலயத்தின் வடக்கிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்;து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியே இந்த செயற்பாடுகளுக்கு பின்னால் இருப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது. வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜஸஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டம் அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோபியின் தாயாரும் மற்றொரு பெண்ணும் கைது-

imagesCA5PZGM2பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கூறப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை-மத்திய அரசு

india maththiya arasuராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 07 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என இந்திய மத்திய அரசு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த தகவலை தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 07 பேரையும் விடுதலை செய்வதற்கு கடந்த மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை நியாயப்படுத்திய தமிழக அரசுக்கு பதில் மனுவின் ஊடாக மத்திய அரசு இவ்விடயத்தினை தெரிவித்திருந்தது. இக் குற்றமானது நன்கு திட்டமிடப்பட்ட, கொலை சதி முயற்சி எனவும் மத்திய அரசு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்-பவ்ரல்

பொலிஸார் இம்முறை தேர்தலில் பக்கச்சார்பாக செயற்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸார் பக்கசார்பாக செயற்படுகின்றமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட சிலர், பொலிஸாரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சட்டவிரோத பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பொலிசாரை இம்முறை தேர்தலில் காணமுடியாதுள்ளதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன முற்றாக நிராகரித்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இம்முறை தேர்தலிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமே சட்டத்திற்கு மாறாக நடந்துகொள்வதாகவும், தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவது பொலிஸாருக்கு மாத்திரம் உள்ள கடமையல்ல என்பதுடன், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது-

G8_Summit-இந்த வருடத்திற்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார். முன்னர் திட்டமிட்டது போல ரஷ்ய நகரான சோச்சியில் இந்த மாநாடு இடம்பெறாது எனவும், உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரேனிலிருந்து க்ரைமியாவை பிரித்தற்கு எதிராக, ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடையினை விதிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹேக்கில் இடம்பெற்ற அணு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டேவிட் கமரோன், பராக் ஒபாமா மற்றும் ஏனைய ஜ7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்-

alagiriமு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த மு.க.அழகிரியிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் கட்சியையும் தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அறிவித்துள்ளார்.