வட்டுக்கோட்டை மாணவர்களுக்கு ஜேர்மன் தோழர்கள் உதவி-

vaddukottai (2) vaddukottaisஜேர்மனியில் வசிக்கும் தோழர் ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் ஜெர்மன் தோழர்களின் நிதிப் பங்களிப்பின்கீழ் மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள் கல்விக்கு கைகொடுப்போம் என்ற உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் நிகழ்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்வில் யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வட்டு இந்து நவோதய பாடசாலையின் உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கடந்த 21.03.2014 வெள்ளிக்கிழமை அன்றுமாலை வட்டுக்கோட்டையில் வைத்து இப்பொருட்கள் வழங்கிவைப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள், எமது மாணவர்களின் விளையாட்டுத்துறையை வளர்ப்பது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். இவ்வாறாக விளையாட்டுத் துறையை வளர்ப்பதன் ஊடாக ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க முடியும் என தெரிவித்தார். அத்துடன் இவ் உதவித்திட்டத்தினை முன்னெடுக்கும் ஜேர்மனி வாழ் புலம்பெயர் தோழர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம், கல்விழான் சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-

kalvilan news (2)kalvilan (2)யாழ். சுழிபுரம் கல்விழான் பகுதியில் உள்ள கல்விழான் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை (23.03.2014) அவ் நிலையத் தலைவர் அன்னலிங்கம் தலைமையில் தமழி; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.சபாநாயகம் மற்றும் த.சசிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின் நிலையத்தின் தலைவர் தலைமை உரையாற்றும்போது, ஏற்கனவே எமது பகுதி மாணவர்கள் கல்வியில் உயரவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்.ஈ.சரவணபவன் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் அயராது பாடுபடுகின்றனர். இதனை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. இருளால் சூழ்ந்திருந்த இக் கட்டிடத்திற்கு தமது சொந்த நிதி மூலமாக மின்சாரம் வழங்கி சிறார்கள் கல்வியில் மேம்பட உதவிய வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு தடவை நன்றிகளை தெரிவித்துக் கௌ;கின்றேன் இவ்வாறே கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் நாம் முன்வைத்த கோரிக்கையை நிவர்த்தி செய்துள்ளார் இந்த வகையில் மாணவர்களுக்கான மாலைநேர கற்றல் மண்டபம் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், கல்வியே எமது அழியாத சொத்து. இதை பாதுகாப்பது எமது கடமை. இவ் உதவித்தி;ட்டம் தொடர்ச்சியாக முண்னெடுக்கப்படும். இப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மாணவர்களினதும் கல்விக்hன வசதிகள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.