இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்-

un manitha urimai peravaiஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. பிரேரணைக்கு ஆதரவாக ஆஜர்ன்டினா ஒஸ்ரியா, பெனின், பொட்ஸ்வானா, பிரேஸில், சிலி, கொஸ்டாரிகா, கோர்டிவோரின், செக்குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, மொன்டிநீக்ரோ, பெரு, கொரியா, ருமேனியா, மாக்கடோனியா, சியாரா லியோ, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய 23 நாடுகளும், எதிராக அல்ஜீரியா, சீனா, கொங்கோ, கியூபா, கென்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், வெனிசூலா, வியட்னாம் ஆகிய 12 நாடுகளும் வாக்களித்துள்ளதுடன், புருக்கினோ பாசோ, எத்தியோபியா, காபன், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், கஸகிஸ்தான், குவைத், மொரோக்கோ, நமீபியா, பிலிப்பைன்ஸ் தென்னாபிரிக்கா ஆகிய 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்துள்ளன. ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதப்படி ஆபிரிக்க நாடுகள் 13, ஆசிய பசுபிக் நாடுகள் 13, இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் 8, மேற்கு ஐரோப்பிய நாடுகள் 7, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 6 ஆகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.