கீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு-

யாழ். கீரிமலையில் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இயங்கும் சிவபூமி அறக்கட்டளை, அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன இணைந்து கட்டமைத்த கலைக் கூடத்துடன் கூடிய கலாச்சார மண்டபம் இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டது. இந்து மாமன்றத்தின் முன்னைநாள் தலைவர் கைலாசபிள்ளை அவர்களால் இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. சோமசுந்தரம் அவர்கள் மேற்படி கட்டிடம் அமைப்பதற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், இக்கட்டிடம் அமைப்பதற்கான அனுசரணையை திரு. கைலாசபிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார். மேற்படி கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கலாநிதி நீலகண்டன், இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவர் மகாலிங்கம், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சிவாச்சாரியார்களும் ஆசியுரை வழங்கினார்கள். பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.