வலி மேற்கில் பஜனைப் பாடசாலைத் திட்டம் ஆரம்பித்து வைப்பு- 

N.Ainkaran News (5aN.Ainkaran News (3a

N.Ainkaran News (2a

N.Ainkaran News (1aயாழ். வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்சரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் பஜனைப் பாடசாலைத் திட்டம் கடந்த 27.03.2014 வியாழக்கிழமை அன்று அராலி மத்தி பிரதேசத்தில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டது. வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அவர் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்து மாணவர்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமளித்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான த.நடனேந்திரன். த.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்சரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் பஜனைப் பாடசாலைத் திட்டம் 27.03.2014 அன்றுமாலை 6.30 மணியளவில் யாழ். மூளாய், தொல்புரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் கோவிலிலும் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு ஆலய பரிபாலன சபை உறுப்பினர் பஞ்சாட்சரம் அவர்கள் தலைமை தாங்கினார் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.சசிதரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர். இந் நிகழ்வில் உரையாற்றிய திரு. சசிதரன் அவர்கள், எமது இனத்தினுடைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய நோக்காகக் கொண்டே, எமது சபையினுடைய தவிசாளர் இந்நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றார். இவ்வாறு எமது பிரதேசத்திலுள்ள சகல ஆலயங்களிலும் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதன்மூலம் குறித்த ஒரு நாளிலாவது பெரியார்கள் முன்னிலையில் எமது சிறார்களை எமது மதம் சார்ந்த விடயங்களில் ஈடுபடவைத்து நல்வழிப்படுத்த முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும். வெறுமனவே எமது சழூதாயம் சீரழிந்து விட்டது கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று குறிப்பிடுவதில் பயன் இல்லை இச் செயற்பாடுகளை இலகுவாக்குவதே எமது தவிசாளரது நோக்கமாகும் இந்த நோக்கத்தினை நிறைவு செயய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்குமான விருப்புவாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமசந்திர 1,39,034 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார். ஆளும் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட உதய கம்மன்பில 1,15,638 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், உப்பாலி கொடிகார 47,822 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67,243 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட கே.டி. லால்காந்த 45,460 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டிய 32,918 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் அந்த கட்சி சார்பில் 28,558 வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்திற்கு தெரிவாகியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றதுடன், சண் குகவரதனும் தெரிவானதன் ஊடாக அக்கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (18 ஆசனங்கள்)
1.ஹிருணிகா பிரேசந்திர – 1,39,034
2.உதய கம்மன்பில – 1,15,638
3.உபாலி கொடிகார – 47,822
4.ரொஜர் செனவிரத்ன – 44,011
5.மல்ஷா குமாரதுங்க– 43,324
6.ரசிக மஞ்சுல – 37,125
7.சலோச்சன கமகே – 33,495
8.காமினி திலகசிறி– 31,542
9.மஹேஸ் அல்மேதா– 30,191
10.ஜகத் குமார – 29,499
11.ஹெக்டர் பெத்மகே – 28,766
12. ஜகன வெலிவத – 27,578
13. இசுர தேவப்ரிய – 26,164
14. பிரதீப் உதுகொட– 26,031
15.நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க – 24,942
16. அமல் புஸ்குமார – 24,431
17. சுனில் ஜயமனி – 23,832
18. துஷார பெரேரா – 23,422

ஐக்கிய தேசியக் கட்சி (ஆசனங்கள் 12)
1.எஸ்.எம்.மரிக்கார் – 67,243
2.மஞ்சு ஶ்ரீ அரங்கல – 45,654
3.முஜிபுர் ரஹ்மான் – 42,126
4.நிரோசன் பாதுக்க – 33,846
5.எல்.கருணாரத்ன – 32,911
6.ஏ.பைரூஸ் – 32,542
7.ஶ்ரீநாத் பெரேரா – 27,942
8.ஜயந்த த சில்வா – 24,450
9.சேனக தமயந்த – 23,586
10.அநுராத விமலரத்ன – 21,205
11.உதார ரத்நாயக்க – 20,165
12.ரோட்னி பேஷர் – 19,643

ஜனநாயகக் கட்சி (ஆசனங்கள் 3)
1.சுசில் கிந்தெல்பிட்டிய – 32,918
2.நிமல் ஶ்ரீ பீரிஸ் – 14,822
3.நலின் பிரதீப் உடவல – 13,653

மக்கள் விடுதலை முன்னணி (ஆசனங்கள் 3)
1.கே.டி.லால்காந்த – 45,460
2.லக்ஸ்மன் நிபுணஆரச்சி – 9,528
3.சுனில் வடகல – 8,380

ஜனநாயக மக்கள் முன்னணி (ஆசனங்கள் 2)
1.மனோ கணேசன் – 28,558
2.எஸ்.குகவரதன் – 14,888