Header image alt text

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை அதிகரிப்பு-

IPKF muripaduவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை 1983 ஜனவரி 01ஆம் திகதிமுதல் 2009 மே 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணைக் குழுவுக்கு பெருமளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கால நீடிப்புக்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியான ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலத்தையும் 2014 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதி நீடித்துள்ளார். விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 393ஆம்; அத்தியாயம் 04ஆம் உறுப்புரையின் கீழான ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் இதற்கான காலப்பகுதி 1990 முதல் 2009 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 1031 முறைப்பாடுகள் பதிவு-

cafeமேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 1031 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் என்கிற கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரை 982 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 49 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதில் 598 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலும் 360 முறைப்பாடுகள் தென்மாகாணத்திலும் பதிவாகியுள்ளதுடன். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம்307 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே இயக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனையில் குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பம்-

mannar pallimunai kudineerஉலக நீர் தினத்தையொட்டி மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மன்னார் பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம், 49 வீட்டுத்திட்டம், 50 வீட்டுத்திட்டம் மற்றும் கோந்தைப்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை இன்று வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் 150 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். ஆரம்ப நிகழ்வின்போது மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுகர்னராஜா ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் இணைப்பை வழங்கி வைத்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுக்கு பின்னர் வேட்பாளர் பிரசார காரியாலயம், பிரசார பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் அலங்கார காட்சிப்படுத்தல்கள் என்பனவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அவற்றை அகற்றுவதற்கு வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் செயலகம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் தொகுதி மட்டத்தில் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் நாளை நள்ளிரவு வரை நடத்திச் செல்ல முடியும் என்பதுடன், பிரசார பணிகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு-

uma illam 19uma illam 20uma illam 22uma illam 23uma illam 24uma illam 25uma illam 18uma illam 17uma illam 16uma illam 15Uma illam 14uma illam 13Uma illam 10Uma illam 9Uma illam 8Uma illam 7Uma illam 6Uma illam 4Uma illam 3uma illam 2Uma illam 1Uma illam 0uma illam 21தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட நிலையில் காட்சி தருகின்றது. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பு மற்றும் மேற்பார்வையின்கீழ் வவுனியா உமா மகேஸ்வரன் வீதி, கோயில்குளம் பகுதியில் அமைந்துள்ள மேற்படி நினைவு இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி உமாமகேஸ்வரன் சமாதி, வளாகம், உமா மகேஸ்வரன் ஞாபகார்த்த வாசிகசாலை, நினைவில்லத்தின் சுற்றுமதில், பூந்தோட்டம் ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு அழகாக காட்சிதருகின்றது. 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் மேற்படி நினைவில்லத்திலேயே இடம்பெற்று வருகின்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி என்பன இடம்பெறுவதுடன், இரத்ததானம், சிரமதான், அன்னதானம் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை மாணவர்களுக்கு ஜேர்மன் தோழர்கள் உதவி-

vaddukottai (2) vaddukottaisஜேர்மனியில் வசிக்கும் தோழர் ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் ஜெர்மன் தோழர்களின் நிதிப் பங்களிப்பின்கீழ் மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள் கல்விக்கு கைகொடுப்போம் என்ற உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் நிகழ்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்வில் யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வட்டு இந்து நவோதய பாடசாலையின் உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கடந்த 21.03.2014 வெள்ளிக்கிழமை அன்றுமாலை வட்டுக்கோட்டையில் வைத்து இப்பொருட்கள் வழங்கிவைப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள், எமது மாணவர்களின் விளையாட்டுத்துறையை வளர்ப்பது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். இவ்வாறாக விளையாட்டுத் துறையை வளர்ப்பதன் ஊடாக ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க முடியும் என தெரிவித்தார். அத்துடன் இவ் உதவித்திட்டத்தினை முன்னெடுக்கும் ஜேர்மனி வாழ் புலம்பெயர் தோழர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம், கல்விழான் சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-

kalvilan news (2)kalvilan (2)யாழ். சுழிபுரம் கல்விழான் பகுதியில் உள்ள கல்விழான் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை (23.03.2014) அவ் நிலையத் தலைவர் அன்னலிங்கம் தலைமையில் தமழி; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.சபாநாயகம் மற்றும் த.சசிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின் நிலையத்தின் தலைவர் தலைமை உரையாற்றும்போது, ஏற்கனவே எமது பகுதி மாணவர்கள் கல்வியில் உயரவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்.ஈ.சரவணபவன் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் அயராது பாடுபடுகின்றனர். Read more

மன்னார் எல்லை பலவந்தமாக கைப்பற்றப்படுவதாக குற்றச்சாட்டு-

வில்பத்து சரணாலயத்தின் வடக்கிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்;து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியே இந்த செயற்பாடுகளுக்கு பின்னால் இருப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது. வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜஸஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டம் அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோபியின் தாயாரும் மற்றொரு பெண்ணும் கைது-

imagesCA5PZGM2பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கூறப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரான செல்வநாயகம் ராசமலர் என்பவரும் அவருடன் தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை-மத்திய அரசு

india maththiya arasuராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 07 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என இந்திய மத்திய அரசு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த தகவலை தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 07 பேரையும் விடுதலை செய்வதற்கு கடந்த மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை நியாயப்படுத்திய தமிழக அரசுக்கு பதில் மனுவின் ஊடாக மத்திய அரசு இவ்விடயத்தினை தெரிவித்திருந்தது. இக் குற்றமானது நன்கு திட்டமிடப்பட்ட, கொலை சதி முயற்சி எனவும் மத்திய அரசு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர்-பவ்ரல்

பொலிஸார் இம்முறை தேர்தலில் பக்கச்சார்பாக செயற்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸார் பக்கசார்பாக செயற்படுகின்றமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட சிலர், பொலிஸாரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சட்டவிரோத பிரசாரங்களை கட்டுப்படுத்தும் பொலிசாரை இம்முறை தேர்தலில் காணமுடியாதுள்ளதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன முற்றாக நிராகரித்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இம்முறை தேர்தலிலும் சிறப்பாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்பாளர்களும், ஆதரவாளர்களுமே சட்டத்திற்கு மாறாக நடந்துகொள்வதாகவும், தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவது பொலிஸாருக்கு மாத்திரம் உள்ள கடமையல்ல என்பதுடன், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது-

G8_Summit-இந்த வருடத்திற்கான ஜி-8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறாது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார். முன்னர் திட்டமிட்டது போல ரஷ்ய நகரான சோச்சியில் இந்த மாநாடு இடம்பெறாது எனவும், உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரேனிலிருந்து க்ரைமியாவை பிரித்தற்கு எதிராக, ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடையினை விதிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹேக்கில் இடம்பெற்ற அணு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டேவிட் கமரோன், பராக் ஒபாமா மற்றும் ஏனைய ஜ7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்-

alagiriமு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த மு.க.அழகிரியிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. ஆனால், அவர் கட்சியையும் தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அறிவித்துள்ளார்.

சுழிபுரம் சிவன் சனசமூக நிலையத்தினர் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் சந்திப்பு-

யாழ். சுழிபுரம் வறுத்தோலை சிவன் சனசமூக நிலையத்தினர் தமது சனசமூக நிலையத்தின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக கடந்த 21.03.2014 அன்று புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை சனசமூக நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அப்பகுதி மக்கள் அன்றாடம் தாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது எடுத்துக் கூறினர். இந்த நிலைமைகளை விரிவாக ஆராய்ந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இதற்குரிய தீர்வினை வெகு விரைவில் முன்னெடுப்பதாக கூறினார். இதேவேளை எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் நண்பர்களின் உதவியுடன் சனசமூக நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முயற்சி எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது 100 பஜனை பாடசாலைத்திட்டம் சுழிபுரம் வறுத்தோலை கிராமத்தில் அமைந்துள்ள கொட்டையடைப்பு பேரன் சிவன்கோவிலில் 21.03.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்து அங்கு வருகை தந்திருந்த 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். கௌரவ த. சித்தார்த்தன் அவர்கள் இங்கு உரையாற்றியபோது, இவ்வாறான பஜனை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என்பதோடு, தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் இத்திட்டத்தினை வரவேற்பதாகவும், இவ்வாறான திட்டங்கள் வாயிலாக எமது சமுதாயத்தின் பல சீரழிவுகள் கட்டுப்படுத்தப்படுவதோடு ஒர் ஆரோக்கியமான சமுதாயத்தினையும் உருவாக்க முடியும் எனவும் கூறினார். மேற்படி பஜனை பாடசாலைத் திட்டமானது தொடர்ச்சியாக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருநாவற்குளம் நூலகத்திற்கு தளபாடங்கள், நூல்கள் வழங்கிவைப்பு-

thirunavatkulam (1)thirunavatkulam (3)

வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற புதிய நூல் நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (22.03.2014) விஜயம் செய்த புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னைநாள் உப நகர பிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க. சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கோயில்குளம் இளைஞர் கழக இணைப்பாடவிதான செயற்பாட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட தளபாடங்கள் மற்றும் ஒருதொகை நூல்களை நூல் நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் சாரணர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இந்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் மாணவர்களின் துல்லியமானதும் ஆக்கபூர்வமானதுமான இந்த செயற்பாட்டினைப் பாராட்டியதுடன், எமது குடியேற்ற கிராமத்தில் உள்ள மாணவ செல்வங்களின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய நூல் நிலையத்தை உருவாக்க திட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், சதீஸ், காண்டீபன், செல்வம், பிரபா, தினேஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச விசாரணை நிலைப்பாட்டில் மாற்றம் – அமைச்சர் நிமல்-

nimal sribalaஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதனை முன்னிட்டு மகிழ்ச்சி அடைய முடியும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா சென்றிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடு திரும்பியுள்ள நிலையில், பிரேரணை குறித்து இந்த ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையை பழிவாங்கும் நோக்கிலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து பிரேரணையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க மற்றும் பிரித்தானிய அழுத்தங்களுக்கு ஏனைய நாடுகள் அடிபணிந்துள்ளதாகவும், ஆனால் எந்தவொரு நாடும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை எனவும் வாக்கெடுப்பின் பின்னரே அதனை அறிந்து கொள்ள முடியும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மருதனாமடத்தில் ஆர்ப்பாட்டம்-

jaffna_student_arpadam_005jaffna_student_arpadam_002jaffna_student_arpadam_001யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று மருதனாமடம் நுண்கலைப் பீட வாளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நுண்கலைப் பீட மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்வதில் பொலீசார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர். எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை-

மூன்று தூக்கிடுதல் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட 10 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் சந்ராரத்ன பல்லேகம் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் பணிபுரியும் சில பணியார்களின் செயற்பாடுகள் காரணமாக அங்கு பணியாற்றுவதில் ஏனையவர்களுக்கு பிரச்சினை நிலை தோன்றியுள்ளதாகவும் ஆணையாளர் சந்ராரத்ன பல்லேகம் மேலும் கூறியுள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை வேட்பாளர் மீட்பு-

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாணசபை வேட்பாளர் ஒருவர் காருக்குள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தபோது மீட்கப்பட்டுள்ளார். குறித்த வேட்பாளரின் மனைவி, தமது கணவர் காணாமற்போயுள்ளதாக இன்றுகாலை மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் இன்றுகாலை குறித்த வேட்பாளரை கண்டுபிடித்துள்ளனர். கை கால்கள் கட்டபட்ட நிலையில் இந்த வேட்பாளர் மத்துகம பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் -அமைச்சர் ராஜித-

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தையின் நிமித்தம், கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் மாத்திரமே நாளை கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடியாது எனவும், நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெறவிருந்த மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 121பேர் கைது-

ajith rohanaதேர்தல் சட்டங்களை மீறிய 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 123 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 38 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 03 அரச வாகனங்களும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாக்களிப்பு தினத்தில், வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கட்சி அல்லது சுயேட்சை குழுக்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, அவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளின் தலைவர்களை தேடி கிழக்கில் சுவரொட்டிகள்-

puli thalaivarkalபுலிகள் இயக்க புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த இருவரின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த இருவரும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என அந்த பிரசுரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போகம்பறை சிறையை சனிக்கிழமை வரை பார்வையிட அனுமதி-

கண்டி, போகம்பறை சிறைச்சாலையை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. போகம்பறை சிறைச்சாலையை மக்கள் பார்வையிடுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கடந்த 15ஆம் திகதி முதல் அனுமதி வழங்கியிருந்தது. இதுவரை, 300,000 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாத்திரம் 84,000 பேர் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 138 வருட வரலாற்றைக் கொண்ட போகம்பறை சிறைச்சாலை 1876ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் 408 கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய வசதியுடன் காணப்பட்டது. இந்த சிறைச்சாலை மூடப்படும் போது 2600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறைச்சாலையிலிருந்த சிறைக்கைதிகள் தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் திறப்புக்கள் கடந்த வருடம் ஏப்ரல் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு-

makalir thinam nallur (1)makalir thinam nallur (2)makalir thinam nallur (3)யாழ். நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் பிரதேசசெயலாளர் செந்தில்நந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் நல்லூர் பிரதேசக பிரிவில் மிக திறமையாக சமுகநலன் திட்டங்கள், அபிவிருத்திப்பணிகளில் கூடிய பங்களிப்புகளைச் செய்த 8 பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜெய்ப்பூர் நிறுவனத் தலைவி ஜெயதேவி கனேசமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிபாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன், யாழ் மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் உதயணி தவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

  ஜ. நா. நவநீதம்பிள்ளை, இலங்கை ஜனாதிபதிக்கு  த.வி.கூ. ஆனந்தசங்கரி கடிதம்- 

imagesCAMXH5OLஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர், நவநீதம்பிள்ளை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், திரு. வீ.ஆனந்தசங்கரி தனித்தனியாக இரண்டு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். நவநீதம்பிள்ளைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் தீர்மானம் – திருத்தத்துக்கான வேண்டுகோள்  ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் அணியில் ஒரு கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நான் செயற்படுகின்றேன். ஆனால் தமிழ் மக்கள் சம்பந்தமான எந்த விடயத்திலும் என்னுடன் கலந்தாலோசிக்காமல் அரசியலில் அனுபவமற்ற சிலருடன் இணைந்து சிலர் மட்டும் தனித்து தீர்மானித்து செயற்படுகின்றனர். Read more

அமெரிக்க பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு-

imagesCA4LGNKJஅமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள பிரேரணைக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பிரதமர் டேவிட் கெமரூன் இதனைத் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இந்த கருத்தை வெளியி;டடுள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த காலங்கள் தொடர்பாக பொறுப்புக்கூற தவறியுள்ள அதேநேரம், மறுசீரமைப்பு விடயங்களிலும் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளதற்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசார குறுந்தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை-

Mதொலைபேசிகளூடாக தேர்தல் பிரசாரம் தொடர்பில் குறுந்தகவல்கள் அனுப்பும் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தொலைத் தொடர்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரால் சட்டவிரோத பிரசாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷா பலப்பிட்ட தெரிவித்துள்ளார். இந்த வியடம் தொடர்பில் கையடக்க மற்றும் நிலையான தொலைப்பேசிகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் தனிப்பட்ட ரீதியில் குறுந்தகவல் ஊடாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது-

imagesCA5PZGM2யாழில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக் கோட்டையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து, சந்தேகநபர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நாளை மறுதினம் இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை-

fishermen talksஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் கொழும்பில் நடத்துவதற்கு இந்திய மீனவர் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்திய மீனவர் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மீனவர் பேச்சுவார்த்தைக்கு 18 இந்திய மீனவர் பிரதிநிதிகளும் 11 அதிகாரிகளும் பங்கேற்றவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதே அளவான பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இலங்கை மீனவர் சங்கங்களில் இருந்து பங்கேற்கவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

படகு அகதிகளை மெனஸ்தீவில் தங்கவைக்க ஏற்பாடு-

manus_island1படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருகின்ற அகதிகள் எதிர்வரும் காலங்களில் மெனஸ் தீவில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி எபட் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பசுபிக் திட்டத்தின் கீழ், மெனஸ் மற்றும் பப்புவா நியுகினி ஆகியவற்றில் முகாம்களை அமைத்து, அங்கு செல்லும் அகதிகள் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து மெனஸ் தீவுக்கு உடனடியாக மாற்றப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்று ரொனிஎபட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பு நாடுகளே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் – ஐ.நா-

farhan hagஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கும் என ஐ.நா சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்றைய நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கும். ஏற்கனயே சட்டத்தரணி யாசீம் சூகா தயாரித்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா சபை உள்ளக ஆய்வினை மேற்கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் நிலையிலிருந்து விலக முடியாது என்ற நிலைப்பாட்டில் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் உறுதியாக இருக்கிறார் என ஐ.நா சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை-

aus green partyஇம்முறை அமெரிக்கா முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கவில்லை என்றால், அது மனித உரிமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய துரோகமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹனன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை கோரும் பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது என்று, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்திருந்தார். அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு எதிராகவும், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை பிரித்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இதனையடுத்தே லி ரிஹனன் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது-

imagesCA5PZGM2வவுனியா சிறீராமபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான இவர்கள் கடந்த சில வருடங்களாக வவுனியாவில் வசித்துவந்தனர். வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா நகர்ப்பகுதியில் லோகநாதன் என்ற குடும்பஸ்தர் நேற்றிரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு சிறீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி, அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் மன்னாரில் கைது-

மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடற்படையினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்தவேளை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வடமாகாணம் எங்கும் பெருவாரியாக சோதனைகளும், தேடுதல்களும் இடம்பெற்றும் வரும்நிலையில், கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலீசார் கூறியுள்ளனர்.

வட்டுக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு மக்கள் பதற்றம்-

vaddukottai army roundயாழ். வட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்று காலைமுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காலை 5 மணிமுதல் இராணுவத்தினர் மாவடி, சங்கரத்தை, வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களை சுற்றிவளைத்துள்ளனர். இப் பிரதேசத்திலிருந்து யாரும் வெளியே செல்லக் கூடாதென்றும், அதே போன்று யாரும் உள்ளே வரக்கூடாதென்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதன்போது பிரதேசத்திலுள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரதேசத்தின் இளைஞர்கள் 300 பேருக்கும் அதிகமானோர் அரசடி மைதானத்திற்கு அழைத்துச்சென்று இராணுவ அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை வைத்திருந்த இராணுவத்தினர், அந்நபர் கிளிநொச்சியிலிருந்து தப்பிவந்தவர் எனவும், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது எனவும் கூறியுள்ளனர். அந்த நபரை தேடியே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பின்போது 25ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதி காக்கும் படையினர் குறித்தும் முறைபாடு பதிவு-

IPKF muripaduஇந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக கிழக்கு மாகாணத்திலும் மூன்று முறைபாடுகள் பதிவாகியிருப்பதாக, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் எச்.டபிள்யு.குணதாசவை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மடக்களப்பில் தற்போது விசாரணை நடத்தி வரும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, செங்கலடியில் விசாரணை மேற்கொண்டபோது, இந்த முறைபாடுகள் பதிவாகியுள்ளன. இதன்போது 250 புதிய முறைபாடுகள் கிடைத்தாகவும், அவற்றில் மூன்று முறைபாடுகள் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆணைக்குழு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விசாரணை நடத்தியபோதும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிரான முறைப்பாடு பதிவாகியிருந்தது. எனினும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசாரணைக்கான காலகட்டத்தினுள், இந்திய அமைதிகாக்கும் படையினரின் விடயம் உள்ளடங்காத நிலையில், இம்முறைபாடுகள் தொடர்பில் தம்மால் ஏதும் செய்ய முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 108பேர் கைது-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரை கிடைத்துள்ள முறைபாடுகளுக்கமைய 108பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த இரு மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 115 முறைபாடுகள் பொலிஸாருக்குப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலேயே இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 34 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் மூன்று அரச வாகனங்களாகும். தேர்தல் தொடர்பான சட்டங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்வாங்கப் போவதில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, மாகாண சபை தேர்தலுடன் தொடர்புடைய 20 மனித உரிமைமீறல் சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியுள்ளதாகவும்,. தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கு இடமளிக்காமை மற்றும் விளையாட்டு மைதானங்களை ஒதுக்கிக் கொடுக்காமை போன்ற காரணிகள் தொடர்பில் இந்த முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்-ஹெல உறுமய-

Jathika Hela Urumayaதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டியது அவசியம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யாததன் காரணமாகவே, இன்று மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் அனைத்து வரப்பிரசாதங்களையும் பயன்படுத்தி இந்த தமிழ் பிரிவினைவாத நாசி வாதிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கின்றனர். புலிகளின் பல தலைவர்கள் இன்று சர்வதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நிஷாந்த சிறி வர்ணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க-

ranilகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு பதில் கூறமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்க்கட்சி தயாராகவுள்ளது. எனினும், இதற்கு முன்னதாக அரசாங்கம் தமது பங்கை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா கூறுவதை கேட்க வேண்டும் என்றோ அல்லது பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் கெமொரோன் கூறுவதை கேட்க வேண்டும் என்றோ தாம் கூறவில்லை. எனினும், இந்நாட்டு மக்கள் கூறுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்போது அமெரிக்காவோ, அல்லது வேறு எந்த நாடுகளோ குற்றங்களை சுமத்த முடியாது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் 17வது அரசியல் யாப்பு திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்போது, எதிர்கட்சியான நாம், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் அரசசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரமுடியும். இதன்போது எட்டப்படும் இணக்கத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று அங்கு இலங்கையுடன், இணக்கத்துடன் இணைந்து செயல்படுமாறும் கோர முடியும் என்றார் அவர்.

மன்னாரில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம்-

mannar sathyakiraka porattam (4)mannar sathyakiraka porattam (3)mannar sathyakiraka porattam (2)mannar sathyakiraka porattam (1)மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மன்னார் பொதுவிளையாட்டரங்கு மைதானத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் மோசடிகள், மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமை, இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள்குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுகின்றமை, நில அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும், மனிதப் படுகொலைகளுக்கு பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், காணாமற் போனோரை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும்; என வலியுறுத்தியும் இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், அரியநேந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், குருகுலராஜா, பா.டெனிஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மதகுருமார், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் எனப் பலரும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஊர்காவற்துறையில் சர்வதேச நீர் தினம் அனுஷ்டிப்பு-

oorkaavatturai  neer thinam (12)oorkaavatturai  neer thinam (7)oorkaavatturai  neer thinam (11)oorkaavatturai  neer thinam (9)சர்வதேச நீர் தினம் யாழ். ஊர்காவற்துறை பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்டன் யோகநாதன் அவர்களின் தலைமையில் 21.03.2014 இன்று நடைபெற்றது இந் நிகழ்சியில் வளவாளர்களாக வைத்தியக் கலாநிதி சிவராஜா மற்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந் நிகழ்வில் பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்டன் யோகநாதன் அவர்கள் உரையாற்றும்போது, தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேசம் மிக கடுமையான நீர் பற்றாக்குறையை தற்சமயம் எதிர்கொண்டிருப்பதாகவும், இவ்வாறான நிலையில் வருடந் தோறும் இப்பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வைப் பெற சமுக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந் நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச சபை செயலாளர், பொது சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது- 

newzealandஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று கோரப்பட்டால், அதற்கு அவுஸ்திரேலியா பெரும்பாலும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப்பை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு விடயங்களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவசியமில்லை. எனவே சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் அமெரிக்க பிரேரணையின் இறுதிவடிவத்தை கண்ட பின்னரே இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமென ஊடகத் தகவல்-

imagesஅமெரிக்காவினால் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்த முறையும் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்கி அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த கடந்த ஐந்து வருடங்களாக இனப்பிரச்சினை தீர்வு குறித்து இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்களை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகின்றபோதும், இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரேரணையில் இலங்கையின் சிறுபான்மை மக்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரேரணையின் நான்காம் சரத்தில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு, இம்முறையும் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்க இந்தியா தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை திறந்து வைப்பு-

இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை இன்று ஹோமாகம வட்டரெக்க பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தோற்றாத கைதிகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இந்த பாடசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்கு முறையான கல்வியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறைகைதிகளுக்கான இந்த பிரத்தியேக பாடசாலையில் 4 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் 900 முறைப்பாடுகள் பதிவு-

cafeமாகாண சபைத் தேர்தல் சட்டமீறல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தமது அமைப்பிற்கு இதுவரை சுமார் 900 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மற்றும் அரச வளங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 614 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த சமரசிங்க முஸ்லிம் நாடுகளுக்கு விளக்கமளிப்பு-

mahinda samarasinheமனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்தசமரசிங்க ஜெனீவாவில் வைத்து, முஸ்லிம் நாடுகளின் ஒழுங்கமைப்புக்கு, இலங்கை தற்போதைய சூழ்நிலை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் உள்ள பெலேய்ஸ் டெஸ் நேசன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மனித உரிமைகள் விடயங்களில் இதுவரையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவரால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை நீண்டகாலமாக பல்லின சமூகமாக இருப்பதாகவும், இங்கு மதங்களுக்கு இடையிலான பிரிவினைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ புனிதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஐ.டியினால் ஒருவர் கைது-

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் யாழ். வடமராட்சி கரணைவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம், முசிலம்பிட்டி இந்திய வீட்டுத் திட்டப்பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவர்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்பிராந்தியத்தினுள் நுழைய சீனாவுக்கு இந்தியா மறுப்பு-

indiaகாணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்தியா நிராகரித்துள்ளது இந்திய பாதுகாப்பு தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, காணாமல்போன மலேசியா விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் 2ஆவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இத்தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 239பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. Read more