Header image alt text

குருநாகல் பொத்துஹர ரயில் விபத்தில் 75பேர் படுகாயம்-

pothuherapothuhera 05pothuhera 04pothuhera 02குருநாகல்- பொத்துஹர ரயில் நிலையத்தில் இன்றுகாலை 8.45அளவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் 75பேர் படுகாயமடைந்;துள்ளனர். இவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயில் பொத்துஹெர ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அதிவேக ரயில் அதனுடன் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக வடக்கு பிரதேசங்களுக்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. பளை, வுவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான நெடுந்தூர ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்தவர்களின் பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை இந்த விபத்தே இலங்கையில் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய ரயில் விபத்து எனவும் இந்த விபத்தினால் 10கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரி பி.எல்.பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேடகுழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாணவிகள் மூவரை காணவில்லையென முறைப்பாடு-

muthur missingதிருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று பாடசாலை சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸில் மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பூரைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிந்தா (16), தங்கராசா சங்கீதா (13) மற்றும் அழகராசா சரிதா (12) என்ற மூவரே காணாமற்போயுள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினை காரணமாக காணாமற்போயுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்று காணாமற்போன நிலையில் மீண்டும் வீடு திரும்பியதாக கூறப்படும் 24வயதான பெண்ணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் சந்திப்பு-

northern-untitledவட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது மக்கள் எதிர்நோக்கும் பல பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கிழக்கு மாகாணத்துடன் கருத்தொற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் ஒன்றாக செயற்படுவதற்கான தமது விருப்பத்தை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சந்திப்பு இன்று திருமலையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்;றிருந்தனர்.

இராணுவ வாகனமும், வேனும் மோதி விபத்து, 7பேர் காயம்-

army vehicle accidentarmy vehicle accident (2)--90999இராணுவ கெப் வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாலை 6 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 12ஆம் வளைவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கருவலகஸ்வௌ பொலிஸார் கூறுகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் இராணுவத்தினர் என்றும் ஏனைய இருவரும் மொரட்டுவையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பயணித்த கெப் வாகனமும் மொரட்டுவையிலிருந்து யாழ் பயணித்த வேனும் மோதுண்டதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்கு காரணமென பொலீசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் மே தின நிகழ்வு-

May Day 2014வவுனியாவில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்களும் விவசாய மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களும் இணைந்து நடாத்தும் மேதின நிகழ்வு நாளையதினம் (01.05.2014) நடைபெறவுள்ளது, அரசியல் கட்சிகள் சாராது நடத்தப்படுகிற இந்த மேதின நிகழ்வின்போது காலை 9.30 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகின்ற தொழிலாளர் தின ஊர்வலம் காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபையைச் சென்றடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபையில் மேதின பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

கன்னாட்டியில் கடும் காற்று, மழை காரணமாக இடம்பெயர்வு-

vellam idampeyarvuவவுனியா கன்னாட்டி பிரதேசத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் 27 குடும்பங்களைச் சேர்ந்த 76பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை பெய்த காற்றுடன் கூடிய மழையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் வீடுகளுக்குள் மழை நீர் வந்தமையினால் மக்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபமொன்றில் தங்கியுள்ளனர். அவ்விடத்தை உடனடி நலன்புரி நிலையமாக மாற்றி அவர்களுக்கான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி-

Refugee_Indiaஇலங்கையிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் 10ற்கும் குறைவானவர்களே இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்துக்கு இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளதாக மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கையில் இருந்து வரும் அகதிகளைப் போன்றே, தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக தமிழக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஷ்ட அமைச்சர்களுக்கு 90 சாரதிகள் நியமனம்-

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ் அமைச்சர்கள் 10 பேருக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அமைச்சர் செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள 127 ஊழியர்களில் 90பேர் சாரதிகள் என கூறப்படுகிறது. நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாரதிகள் என்பதனால் செயலகங்களின் ஏனைய செயற்பாட்டுகளுக்கு 37 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்நிலையில், மனிதவள அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மனித வள சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர அறிவு மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் அடங்கிய இணைப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு இந்த காரியாலயத்தை பராமரிப்பதற்கு வருடத்துக்கு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழைச்சேனையில் வெடிபொருள் மீட்பு-

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த வளவினுள் ஜொனி வகை வெடிபொருள் ஒன்றை இன்றுகாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸார் வெடிபொருளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை செயலிழக்கச் செய்வதற்காக குண்டு செயழிளக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரிச் மாநிலத்தில் மே தின நிகழ்வுக்கு ‘புளொட்’ ஏற்பாடு-

ploteசுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதியன்று (01.05.2014) கலந்து கொண்டு நடத்தும் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வினில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் பங்கேற்று உரிமைக்குரல் கொடுக்கவுள்ளனர். இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின்; பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கை பதற்ற சூழ்நிலையில் வைத்திருக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே! போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மேதின நிகழ்வினில் பங்கேற்கவுள்ளனர். 

காலம்: 01.05.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணி

இடம்.. சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில் ஊர்வலம் ஆரம்பித்து BüRKLI Platz  இல் முடிவடையும். 

இந்நிகழ்வில் உரிமைகளுக்காக இணைந்து குரல்தர அனைவரையும் அணிதிரளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினராகிய நாம் அன்போடு அழைக்கின்றோம். நன்றி.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், (புளொட்) சுவிஸ் கிளை.-
தொடர்புகளுக்கு…
076.5838410 – 079.824153 – 079.6249004 – 077.9485214

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் மே தினச் செய்தி-

unnamed8இன்றைய நாள் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன் பேனும் மகத்தான உன்னத நாள். உழைக்கும் தொழிலாளர்களின் கைகளில் தான் இந்த உலகம் தங்கியுள்ளது என்பதை உலகிற்கு தொழிலாளர் ஒன்றுபடுவதன் வாயிலாக பறைசாற்றிய நாள். இந் நன்நாளில் தொழிலாளர்கள் தமது கரங்களை இறுக்கிக் கொள்வதன் வாயிலாக இழக்கப்பட் இன்றும் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களது உரிமைகளை வென்றெடுக்க அடித்தளம் இடமுடியும். இதற்கும் மேலாக பால்நிலை வேறுபாட்டை காரணமாக காட்டி இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலை மாற்றப்படவேண்டும். யுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இன்றும் துன்பப்பட்டு வருகின்ற தொழிலாளர்களின் வாழ்வில் விடிவு ஏற்படவேண்டும். யுத்தத்தால் இழந்து போன எமது தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கும் நிலை அடைய வேண்டும். யுத்தத்திற்கு பிந்திய இன்றைய சூழலில் அரசியலுக்கு அப்பால் தொழில் வழங்கலில் சமநிலை பேணப்பட வேண்டும்.அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாக கொண்ட தொழில் ரீதியான பழிவாங்கல்கள் நிறுதப்படவேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் திட்டமிட்டவகையில் உருவாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.திட்டமிட்டு பறிக்கப்பட்ட எமது வயலும் வயல் சார்ந்த நிலமும் கடலும் கடல் சார்ந்த பகுதியும் மீளவும் எமதாக்கப்படவேண்டும். எங்கள் சுதந்திர வாழ்வதனை முற்றுப்புள்ளி வைத்ததாக எதிரி கருதுகிறான். அதனையே எமது முதற்புள்ளியாக்கி பீனிக்ஸ் பறவைகளாக ஒன்றிணைந்து ஒர் அணியில் உரிமைக்காக திரள்வோம்
(திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் – தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்)

ஊர்காவற்றுறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்கள் வழங்கிவைப்பு-

Plastic kolkalan 1 Plastic kolkalan 4 Plastic kolkalan2யாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் இன்று (29.04.2014) 150க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 30 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய பிளாஸ்ரிக் கொள்கலன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தீவகம் வடக்கு பிரதேசமானது அண்மைக்காலமாக வறட்சியால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் பிரதேசங்களில் ஒன்றாகும். நீர்ப்பற்றாக்குறை என்பதற்கு மேலாக நீரைச் சேமித்து வைக்கக்கூடிய வழிவகைகள் கூட இப்பிரதேசத்தில் அரிதாக உள்ளது. இன்றைய இந்நிகழ்வானது பிரதேச செயலர் திருமதி. எ.அன்ரன் யோகநாயகத்தின் வழிகாட்டலின்கீழ் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வ.தர்சினி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை இன்று (29.04.2014) பிரதேச செயலர். திருமதி. எ.அன்ரன் யோகநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யூ.என்.டீ.பி அமைப்பினரால் நடாத்தப்பட்டது. ஏராளமான பயனாளிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பிரிட்டன் அமைச்சர் அரச சார்பற்ற அமைப்புகள் சந்திப்பு-

Karuththaranku (2)பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், சில அரச சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. அரச சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பயன்மிக்கதாக அமைந்துள்ளதென அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்;. இலங்கையின்; இறுதி யுத்தத்தின்போது சர்வதேச விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து சர்வதேச விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்;டது. அமெரிக்காவின் இப் பிரேரணைக்கு பிரித்தானியா இணை அணுசரணை வழங்கியிருந்தது. இதன்படி, இலங்கையரசு பதில்கூறும் கடப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், மனிதவுரிமைகளை மேற்ப்படுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிஷா தேசாய் பிஸ்வால் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு-

Pisvalஅமெரிக்கா உப ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவில் செயற்படும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களை இன்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுடன் தனியான சந்திப்பு ஒன்றையும் உப செயலாளர் பிஸ்வால் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனிதவுரிமை விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளின்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது-

LTTE arrestபெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித் திரிந்த புலி உறுப்பினர் ஒருவரை இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் இம்மாதம் முதலாம் திகதி வயிற்றுப்புண் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை காவலர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச் சென்றிருந்தார். வவுனியா குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயபாலன் ஸ்டேன்லி ரமேஸ் என்;ற இவரே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகும்போது இவர் சிவப்புநிற சுடிதாரும், தொப்பியும் அணிந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையில்-

Malaysian Flightகாணாமல்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. காணமால்போன மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்குநீரிணை பகுதியில் தமது நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதியிலிருந்து 5000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காணாமல்போன எம்.எச் 370 மலேசிய விமானத்தினை தேடி தமது நிறுவனம் கடந்த மார்ச் 10ஆம்திகதி தனியான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாக ஆஸியின் ஜியோறிசோனன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வலி தெற்கில் இளைஞர் கழகங்களின் வருடாந்த விளையாட்டு போட்டி-

ilaignar kalaka vilaiyaattu potti  (1) ilaignar kalaka vilaiyaattu potti  (2) ilaignar kalaka vilaiyaattu potti  (3) ilaignar kalaka vilaiyaattu potti  (5) ilaignar kalaka vilaiyaattu potti  (6) ilaignar kalaka vilaiyaattu potti  (7) ilaignar kalaka vilaiyaattu potti  (8) ilaignar kalaka vilaiyaattu potti  (9) ilaignar kalaka vilaiyaattu potti  (10)யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களிடையேயான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் யாழ். கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு.எஸ் விஜிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு ரி.பிரகாஷ், யாழ். தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குநர் திரு.ஐ.தபேந்திரன், கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு. ஏ.கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் திரு ஆர்.ஈஸ்வரதாசன், முன்னைநாள் வலிதெற்கு பிரதேச சம்மேளனத் தலைவர் திரு.எஸ்பீஷ்மன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு. எஸ்.சண்முகவடிவேல், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திருஎஸ்.லக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், தொடர்ந்து, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றன. இதனையடுத்து உடுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இ.பிரணவரூபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று, பரிசில்களும்; வழங்கி வைக்கப்பட்டன.

பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வு-

Panippulam Kalvikku Kai koduppom (1) Panippulam Kalvikku Kai koduppom (2) Panippulam Kalvikku Kai koduppom (3) Panippulam Kalvikku Kai koduppom (4) Panippulam Kalvikku Kai koduppom (5)யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டில் பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் தோழர் செல்லத்துரை ஜேகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் தாயக உறவுகளின் கல்வி மேம்பாட்டிற்காக நடாத்தப்படும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்வு நேற்றையதினம் (27.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வானது வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ க.சபாநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. த.சசிதரன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கிராம பிரமுகரான திரு. சூரசங்காரம் மற்றும் பெரும்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. க.சபாநாயகம் அவர்கள் உரையாற்றுகையில், இந்த கிராமம் பல தேவைகளை கொண்டுள்ளது இந்த வகையில் மாணவாகளின் கல்விக்கு வழங்கப்படும் இவ்உதவி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். Read more

சங்கானை வர்த்தக சங்க அனுசரணையுடன் களியாட்ட விழா-

manippay police kaliyaatta nikalvu (1) manippay police kaliyaatta nikalvu (2) manippay police kaliyaatta nikalvu (3) manippay police kaliyaatta nikalvu (4) manippay police kaliyaatta nikalvu (5) manippay police kaliyaatta nikalvu (6) manippay police kaliyaatta nikalvu (7) manippay police kaliyaatta nikalvu (8) manippay police kaliyaatta nikalvu (9)யாழ். சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலைய களியாட்டவிழா நேற்று (27.04.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் கோவிலுக்கு அருகாமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வின்போது மரதன் ஒட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் தேசிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சிவகுமார், பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், விளையாட்டுப் போட்டியினை பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பஹ்ரெயினுக்கு விஜயம்-

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றுகாலை பஹ்ரெயினுக்கு சென்றுள்ளார். பஹ்ரெயின் மன்னரை சந்தித்து ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதிக்கும் பஹ்ரெயின் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. பஹ்ரெயினின் வர்த்தக சமூகம் மற்றும் அந்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வேயில் நெடியவனை தேடும் நடவடிக்கை-

புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் மேலும் கூறுகின்றன. மேலும் நோர்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்கள் அனைத்திலும் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக மேற்படி செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு வசதி-

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு இன்று தனது பணியினை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி இவ் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படவுள்ளது. இந்நிலையில் மத விவகாரங்கள் தொடர்பில் 011 2307674, 011 2307694 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 011 2307688 என்ற தொலை நகல் இலக்கம் மூலமாக முறைப்பாடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை முன்பாக ஆர்ப்பாட்டம்-

vada makana sabaimun aarpattam (1) vada makana sabaimun aarpattam (2) vada makana sabaimun aarpattam (3) வட மாகாணசபை பேரவை செயலகம் முன்பாக மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை வட மாகாணசபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரி மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்தபின் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

தேர்தல் சட்ட மாற்றம் தொடர்பில் பவ்ரல் அவதானம்-

தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் நிறைவுபெற்றதை அடுத்து தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் சட்ட மாற்றம் கொண்டு வருவது குறித்து பெப்ரல் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் வாழ் புலம்பெயர் உறவுகளின் ‘கல்விக்கு கைகொடுப்போம்’ நிகழ்ச்சித் திட்டம்-

arali maththi (12)arali maththi (11)arali maththi (9)arali maththi (8)arali maththi (7)arali maththi (10)arali maththi (2)arali maththi (13)arali maththi (14)arali maththi (5)arali maththi (3)ஜேர்மனி வாழ் தோழர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுகள் வழங்கும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (26.04.2014) காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் காரைநகர் பிரதேசசபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான திரு. க.சபாநாயகம், திரு. ச.சசிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.  

இந் நிகழ்வின் தலைவர் ஆனைமுகன் அவர்கள் உரையாற்றும்போது, இன்றைய காலத்தினுடைய தேவையை உணர்ந்து மேற்கௌ;ளப்படும் இவ் உதவி போற்றத்தக்கது. ஜேர்மனியிலிருந்து செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இச் செயற்பாடு ஏனையவர்களுக்கு ஒர் முன் உதாரணமாக அமைய வேண்டும். இவ் உதவிகளை எமது பிரதேசத்திற்கும் பெற்றுத்தந்த அண்ணண் சித்தார்த்தன் அவர்களுக்கு இந்த இடத்திலே நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என குறிப்பிட்டாh. அத்துடன் எமக்கு இங்கு பாரிய தேவைகள் உள்ளன குறிப்பாக எமது இந்த பிரதேசத்திற்கு முன்பள்ளி மிக அவகியமான ஒன்றாகும் அதனை அமைப்பதற்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் தொடர்ந்து புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் Read more

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களுக்கு அஞ்சலி, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

karainagar (14)karainagar (15)karainagar (1)karainagar (17)karainagar (6)karainagar (16)karainagar (11)karainagar (2)karainagar (5)மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (25.04.2014) வெள்ளிக்கிழமை பி;ற்பகல் 4.00 மணியளவில் யாழ். அராலி மத்தி ஊரத்தி கிராமத்தில் உள்ள அம்பாள் கடற்தொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர் திரு.நா.ஜெயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ந இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் – சுடரொளி பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான ஈ. சரவணபவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்;தார்தன் மற்றும் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் திரு எஸ்.ஜெ.செபரட்ணம் மற்றும் சுரேஸ் கல்விநிலைய இயக்குனர் திரு.எஸ்.சின்னையா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக, மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது Read more

மத விவகார பொலீஸ் பிரிவின் சேவை ஆரம்பம்-

மதப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலீஸ் பிரிவு நாளை முதல் இயங்கவுள்ளது. மதவிவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்படும் இந்த காவற்துறை பிரிவு, சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் செயற்படும் என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இடம்பெறுகின்ற மதங்கள் சார்பான பிரச்சினைகளை இந்த விசேட பொலீஸ் பிரிவினரே விசாரணை செய்யவுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதற்கான யோசனையை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தார்.

வில்பத்தில் குடியேறியோர்க்கு மாற்றுக் காணிகள்-

unnamedyவில்பத்து சரணாலயத்தில் அனுமதி இன்றி குடியேறியுள்ள 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார், மரிச்சிகட்டு பிரதேசத்தில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கடந்த வாரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் அவர்கள் தற்போது குடியேறியுள்ள சரணாலய பிரதேசத்திலிருந்து, ஒரு மைல் தொலைவில் காணப்படும் 50 ஏக்கர் காணிப் பரப்பில் குடியேற்றவிருப்பதாக கூறப்படுகிறது. மன்னார் மாவட்ட செயலகம் இதனைத் தீர்மானித்துள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் வகையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,

ஐ.நா. பிரதிநிதி இலங்கை வருகை-

ஐக்கிய நாடுகள் சபையின் குடிப்பெயர்வு தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா க்ரீபே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்படி எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி மதல் 26ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திகதி குறித்த உறுதியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவர் இலங்கையில் குடியேற்றங்கள் மற்றும் இடப்பெயர்வுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லிபியாவிலிருந்து இலங்கையர்களை மீளழைக்க நடவடிக்கை-

unnamedxலிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக அங்கிருக்கும் 14 இலங்கையர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். லிபியாவிலுள்ள இலங்கையர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வராத்திற்குள் அவர்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மங்கள ரன்தெனிய மேலும் கூறியுள்ளார்.

தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு-

unnamed0unnamedunnamed5unnamed1unnamed2unnamed3unnamed4தந்தை செல்வாவின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றுகாலை 9.30அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் நினைவுப் பேருரையை ஓய்வுநிலை நீதிபதி திருநாவுக்கரசு அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சிறீதரன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ அரசியல் செயலர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தழிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், பிரதேசசபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், தந்தை செல்வாவின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

 வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம்-

pajanai padasalai 01pajanai padasalai 04pajanai padasalai02pajanai padasalai 03யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் வட்டு வடக்கு சித்தன்கேணியிலுள்ள கொத்தன்வளவு ஞானவைரவர் ஆலயத்திலும் சங்கானையிலுள்ள உருத்திரன் வைரவர் ஆலயத்திலும் 25.04.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் புளொட் தலைவரும், மன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்பியசக் கொப்பிகளையும் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகாணந்தரின் நூல்களையும் வழங்கிவைத்தனர் இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பொருளாதார தடை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை-ஜோன் ரென்கின்-

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பிரித்தானியா முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது. ஆனால் பொருளாதார தடையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கைக்கு எதிராக பொருளதார தடையை ஏற்படுத்தும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை. இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானியா இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரி இருந்தது என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேலும் கூறியுள்ளார்.

சித்தன்கேணி கற்பகசோலை சனசமூக நிலையத்தினருடன் கலந்துரையாடல்-

katpakasolai sanasmoka nilaiyam 7katpakasolai sanasmooka nilaiyam 04katpakasolaikatpakaslai sansamooka nilaiyam 05யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பினை ஏற்று வலிமேற்கு பிரதேசத்திற்கு நேற்று (25.04.2014) வெள்ளிக்கிழமை விஜயம் செய்திருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் பளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் வட்டு வடக்கு சித்தன்கேணியிலுள்ள கற்பகசோலை சனசமூக நிலையத்தனருடன் அபிவிருத்தி தொடர்பில் உரையாடியிருந்தனர். இதன்போது அங்குள்ள தேவைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

கூட்டமைப்புடன் தனித்து பேச்சில்லை-அமைச்ச் நிமால் சிறிபால டி சில்வா-

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என நீர்ப்பான முகாமைத்துவ அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம்-

unnamed823.04.2014 புதன்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது இவ் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினரும் வலிமேற்கு பிரதேசத்தை சேர்ந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு பிரதேச சபை வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்கினி ஐங்கரன் அவர்கள் முன்வைத்தார். இப் பிரேரனையின்போது கட்சி பேதமற்ற வகையில் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இத்தீர்மானத்தினை ஆதரித்து உரை நிகழ்த்தி பிரேரனையை ஏகமனதாக நிறைவேற்றினர். இப்பிரதேச மக்களும் இது தொடர்பில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தவிசாளர் குறிப்பிட்டார்.

யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி-

யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்.மத்திய ரயில் நிலையம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒத்த வடிவமைப்பில முன்பு இருந்ததைப் போன்றே துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்று முழுதாக பூர்த்தியடைந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூளாய் சைவப்பிரகாச வித்தியாசலை வீதி புனரமைப்பு-

moolai saivapragasa vithyalaya veethi (2) moolai saivapragasa vithyalaya veethi (7)யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட மூளாய் பிரதேசத்தில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பயன்படுத்தும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை வீதி பொதுமக்கள் மற்றும் பாடசாலை சமூகம் வீதி திருத்தம் தொடர்பில் பிரதேச சபைக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முழுமையாக திருத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு தரப்பினருக்கு மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை-

யாழ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தை தடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிப்படைய செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட கூடாது என்று கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடியவனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு ஆணை-

நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கையை விதித்துள்ளது. இலங்கையில் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன்மீது குற்றம் சுமத்தியுள்ளது. நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர். இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

கடன் பெறுவதில் இலங்கைக்கு முதலிடம்-உலக வங்கி-

அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற உலக வங்கியின் அவசர கடன் திட்டத்தை பெறும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக இந்த கடன்களை வழங்கும் திட்டம் உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர்களை வழங்க அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமைகளின் போது ஏழ்மையான மக்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர். இந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சந்திப்பு-

ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் கட்சியின் கொள்கைகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.