வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் பஜனை பாடசாலை திட்டம்-

pajanai padasalai (1)

யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்களின் பஜனைப் பாடசாலைத்திட்டம் இன்று (08.04.2014) செவ்வாய்க்கிழமை யாழ். சித்தன்கேணி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பல மாணவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்-

வலிமேற்கு பிரதேச சபையில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு-

ulaga neer thinam (1)ulaga neer thinam (2)உலக நீர் தினம் இன்று (08.04.2014) செவ்வாய்க்கிழமை வலிமேற்கு பிரதேச சபையில் உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது,

இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது,

இன்று நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுள் நீர்ப் பிரச்சனை மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. சுத்தமான குடிநீரை பெறுவதற்கு நாம் மிக கஸ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர்; புத்தகங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடம் ஆபிரிக்கா என்றும் அங்கு நீரை பெறுவதற்கு பல மைல் துரம் நடக்கவேண்டி உள்ள நிலை இருப்பதையும் புத்தகங்களில் பார்த்தோம். ஆனால் இன்று அவ் நிலைமையை நாம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. மிக மோசமான வகையில் நீர்ப் பிரச்சனையை நாம் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.


இயற்கையின் தாக்கம் ஒரு புறம் இருக்க மனித நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்த நிலை தொடரும் ஆனால் சூழல் அகதிகள் என்ற நிலை ஏற்படுத்தப்படும். நீர் இல்லாத நிலையில் நாம் வாழும் இப் பிரதேசத்திலிருந்து நாம் வெளியேறவேண்டிய நிலை உருவாகும். உலகினுடைய நாகரீகங்கள் யாவும் நீர் நிலைகளுக்கு அருகிலேயே உருவாகியுள்ளது.

அக்காலப் பகுதியில் நீரை உரிய முறையில் தேக்கி வைத்து அதன் வாயிலாகவே மனிதர்கள் நிலைபெற்றனர். சிகிரியாவை ஆண்ட காசியப்பன் தனது தந்தையாகிய தாதுசேனனிடம் செல்வத்தை வழங்குமாறு கேட்டபோது அருகிலுள்ள கலா வாவிகக்கு அழைத்து சென்று வாவியின் நீரை தனது கைகளால் அள்ளி இதுவே செல்வம் என குறிப்பிட்டார். இந்த அளவிற்கு அக்காலத்தில் நீரின் தன்மை காணப்பட்டது. இதிலும் ஒரு முக்கிய விடயம் ஓடும் நீரை அள்ளிக்காட்டாது குளத்து நீரை அள்ளி அதன் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்ட விடயம் நீரின் சேமிப்பு மிக அவசியமான ஒன்று ஆகும.;

இந்த வகையில் நோக்கும்போது நாம் எத்தனை பேர் எமது பிரதேச குளங்களை பற்றி சிந்தித்திருக்கின்றேம். நிலத்தடி நீரை பெறுவதற்கு நாம் பல முயற்ச்சி எடுக்கின்றோம் ஆனால் பெறுகின்ற நீரை சேமித்து வைக்கக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்வதில்லை. நாள் ஒன்றிற்கு எத்தனை ஆயிரம் லீட்டர் நீரை வீனாக்குகின்றோம். ஓரு கிராமத்திற்கு ஒரு குளம் அமைக்க முயற்ச்சிக்க வேண்டும் மக்கள் தாமாக முன்வந்து குளங்களை ஆழமாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் இந் நிலை உருவாகும் போது நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இயலும்.

முன்னைய காலங்களில் குளங்களில் தாமரை அல்லி போன்ற தாவரங்கள் காணப்பட்டது. இது இயற்கையாகவே நீரின் ஆவியாக்கத்தினை கட்டுப்டுத்தக்கூடியது. இவற்றை நாம் மேற்கொள்ளும் போது எமது பிரதேநத்தினை நாமே பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். வெறுமனே நீர் பற்றாக்குறை நீர் மாசடைகின்றது என்று கூறுவதில் அர்த்தமில்லை இதற்கான மாற்று நடவடிக்கையை ஏற்படுத்துவதற்கு தயாராக வேண்டும்.

ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை புனரமைப்பு செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த வகையில் எமது பிரதேசத்தில் நீர் விநியோக பணிகளில் ஈடுபட்ட வேள்ட் விசன் நிறுவனத்தினருக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்களது உயர்வான சேவையினால் எமது பிரதேசத்திற்கு இரு நீர் வினயோகத்திட்டங்கள் கிடைக்கப்பட்டது. இவ்வாறே மக்களுக்கு நீர் வினயோகம் மேற்கொள்ளத்தக்கதான இரு நீர்த்தாங்கிகளும் கிடைக்கப்பட்டது. இதன் வாயிலாக நாளாந்தம் சராசரியாக 30 ஆயிரம் லீட்டர் நீர் விநியோகம் நடைபெறுகின்றது. எமது பிரதேச மக்களின் தேவைகளை நாம் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் தற்போது காணப்படுகின்றது. எதிர் வரும் காலங்களில் சங்கானை பகுதிக்கும் நீர் விநியோக திட்டம் ஆரம்பிக்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற இவ் நீர் தினத்தின் கருப்பொருளாக ‘நீர் இன்றியமையாது உலகு’ என்பது அமைந்திருந்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் மேற்கு வேள் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.ஐ.மைக்கல் அவர்களும் தென்மராட்சி வேள்ட் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.அ .கி.றொசைறோ அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இந் நிகழ்வின் வரவேற்புரையை பிரதேச சபை செயலாளர் திருமதி உருத்திர சாம்பவன் அவர்கள் நிகழ்த்தினர். தொடர்ந்து ஆசியுரையை யாழ்ப்பாணம் சிம்மியாமிசன் ஐக்கிறீட் சைத்தன்யா சுவாமிகளும் தென் இந்திய திருச்சபையின் போதகர் வன செபஸ்டியன் அன்டனி அவர்களும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மருத்துவத்றை தலைவர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமார் அவர்கள் நீரால் பரவக்கூடிய நோய்களும் தடுப்பு முறைகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார், தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக சழூகவியலி துறை சிரேஸ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் அவர்கள் சமூக சொத்தாக நீர் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்,

தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பிரதீபா விபுலன் நீர் தொடர்பான பிரச்சனைகளும் நீர் முகாமைத்துவமும் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இளைப்பாறிய பொதுச்சுகாதார பரிசோதகர் சுத்தமான நீர் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.