குமுழமுனை மகா வித்தியாலயத்தில் ஒளிநூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும்-
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் குமுழ ஒளிநூல் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் நேற்று (09.04.2014) புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை பிரதி தவிசாளர் ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், மேரிகலா ஆகியோரும், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னைநாள் வவுனியா உப நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் விழா மேடைக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.