images


தென் ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸின் குழுவினர்  இலங்கை வரவுள்ளனர்

untitledஇலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்க அரசு மற்றும் ஆளும் ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் தலைவர்களுடன் அந்நாட்டின் அழைப்பின் பேரிலேயே ஆலோசனை நடாத்த சென்ற கூட்டமைப்பினர் நேற்று நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாதத் தடைபட்டுள்ள நிலையில், அதை ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தென் ஆப்ரிக்கா முன்வந்துள்ளது என்றும். ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் துணைத் தலைவர் சிரில் ராமஃபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து பல்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர் என்றும். ஒரு மத்தியஸ்தர் என்கிற வகையில் இல்லாவிட்டாலும், அனுசரணையாளர் என்கிற வகையில் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே அவர்கள் செயற்படுவார்கள் எனவும். இலங்கை அரசின் வேண்டுகோளின்படியே அனுசரணையாளர் எனும் பொறுப்பை தென் ஆப்ரிக்கா ஏற்றுள்ளது என்றும், அதை தாங்களும் வரவேற்பதாகவும்;. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வற்ற இயல்பான நிலை திரும்ப வேண்டும் என்பதை தமது தரப்பு தென் ஆப்ரிக்கத் தரப்பிடம் வலியுறுத்தியுள்ளதாகவும். சிரில் ராமஃபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து சென்ற பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விஷயங்கள் தெளிவாகும் எனவும், அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஜூனில் சர்வதேச விசாரணை ஐநா அறிவிப்பு

un manitha urimai peravaiஇலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாகவும். இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான நெறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது என்றும், இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும் என்றும், அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும்  ஐ.நா உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை இலங்கை அரசு நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன. அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 4145 இலங்கையர்கள் கைது –

meenpidi2009 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல கடல் வழியை பயன்படுத்திய 4145 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லப் பயன்படுத்திய 88 டிரேலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற் படைப்பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் சென்ற இலங்கையர்களின் புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினரின் கப்பல்களுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா வழங்கும் இரு கப்பல்கள் இன்னும் 2 மாதங்களில் இலங்கை வந்து சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை கடல் பரப்பை கண்காணிக்கும் விசேட கடற் படைப் பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள், மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சர்வதேச ஆட்கடத்தல் தொடர்வதாக பலரும் பலமுறை ஆதாரங்களுடன் நிரூபித்தும் அரசாங்கம் அடிநிலையில் உள்ள அப்பாவிகளையே கைதுசெய்வதாகவும், தண்டிப்பதாகவும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.