புலிகளுடன் தொடர்புடைவர்கள் என அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுதலை

kopi and towவவுனியா நெடுங்கேணியில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும். மற்றும் கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  கொழும்பு தெஹிவளையில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் அதில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் புலிகளை மீண்டும் இலங்கையில் உயிர்ப்பிக்க வெளிநாட்டு புலித்தலைவர்களின் ஆதரவு, ஆலொசனையின் பெயரில் செயற்பட்டவர்கள் எனக் கூறி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுதாக அறிவிக்கப்படும் இவர்கள் முன்நாள் புலி உறுப்பினர்கள் என்றும். இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி பெற்று கிளிநொச்சி கொக்காவில் முகாமில் தொழில் புரிந்து வந்தவர்கள் என்றும். இவர்கள் எப்படி இப்படியானார்கள், கொல்லப்பட்ட இடத்திற்கு எப்படி மூவரும் சென்றார்கள் என்ற பல சந்தேகத்திற்கிடமான கேள்விகளுடன் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் ஊடகவியலாளர் இனந்தெரியாதோரால் தாக்குதல்-

jaffnaயாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு 9 மணியளவில் கடமை முடிந்து தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த வேளை இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தவர்கள் இருவர் புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து இரும்புக் கம்பிகளினால் தாக்கியுள்ளாhகள். தாக்குதலுக்கு உள்ளானவர் அபயக்குரல் எழுப்பியவண்ணம் தப்பிக்க ஓடியபோதும் துரத்தி துரத்தி தாக்கப்பட்டதாகவும். சத்தம் கேட்டு ஊர்மக்கள் விரைந்ததும்   தாக்குதல் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் உடகவியலாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்குள்ளனர்.

352 விபத்துக்கள்: 30 பேர் பலி 780 பேர்வரை கைது-

karadiyanaru accidentகடந்த 10 ஆம் திகதி முதல் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறக்கும் வரையில் நான்கு நாட்களில் 352 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும்.  ஜய வருட பிறப்பிற்கு முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 63 விபத்துகளில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் எனவும். இதே நேரம் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட செயற்றிட்டம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 14 ஆம் திகதி 780 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது

பொதுநலவாயத்திற்கான நிதியை இடைநிறுத்தியது கனடா-

canadaஇலங்கையின் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாகவே பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதியில் பொதுநலவாய அமைப்புக்கு கனடா வழங்க திட்டமிட்டிருந்தது 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை தாம் இடைநிறுத்துவதாகவும். ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இபயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்து கனடா பிரதமர் இதில் கலந்து கொள்ளாமல் மனித உரிமை மீறல் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்ததும். அண்மைய ஜ.நா அமர்வுகளில் இலங்கைக்கு சார்பில்லாமல் கனடா நடந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே.