இலங்கை இறுதி யுத்தத்தில் இந்தியப் படை பங்கேற்றது.-
இந்திய நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று சட்டத்தரணியான டெல்லியைச் சேர்ந்த ராம்சங்கர் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய படையினரை 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும். இலங்கையில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை சீக்கியர் ஒருவர் வழி நடத்தியதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இவங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இந்திய உயர்நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரிய பயணிகள் கப்பல் கடலில் மூழ்கின்றது.
476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்களுடன் பயணித்த தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று பயணிகளுடன் தென்கொரிய கடலில் நேற்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் 180 பணியாட்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி 100பேரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கப்பலில் 900பயணிகளையும் 130 கார்களையும் ஏற்றிச் செல்லமுடியம்.
இலங்கை ஹட்டன் பகுதியில் விபத்து
ஹட்டன்- டிக்கோயா பிரதான வீதியில் செவ்வாய்கிழமை(15) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 26பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் 23 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். இவ்விபத்தானது, ஹோல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியும், ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதியதிலேயே இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களில் நெடுஞ்சாலைகளில் ரூ.133 இலட்சம் இலாபம் .-
2014, ஏப்ரல் 13, 14 ஆம் திகதி இந்த இரண்டு நாட்களிலும் தென் அதிவேக நெடுஞ்சாலையில் 42 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன. இதன் மூலமாக 90 இலட்சம் ரூபாவும், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த 22 ஆயிரம் வாகனங்கள் ஊடாக 43 இலட்சம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில்; ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் 133 இலட்சம் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
நிஷா பிஸ்வால்-சொல்ஹெய்ம் சந்திப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைப்பற்றி முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹொயிமுடன் பேசியுள்ளார். மோதல் நடந்த காலத்தில் ஷொல்ஹொயிம் சமாதான தூதுவாகவும் மத்தியஸ்தராகவும் செயற்பட்டவர். அவர் தற்போது இலங்கை விடயங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றார். உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிஸ்வால் முதல் தடவையாக பெப்ரவரியில் இலங்கைக்கு வந்தார். இந்த சந்திப்பின் பின்னர் பிஸ்வால் தனது டுவிட்டர் செய்தியில் இலங்கைப்பற்றி பேசத் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்ததாக கூறினார். இலங்கையில் ஜனநாயகத்தையும் சகல இனங்களின் உரிமைகளையும் ஆதரிக்கும் முக்கிய பாத்திரத்தை அமெரிக்கக வகிப்பதாக செல்வொயிட் பில்வாவுடனான சந்திப்பின் பின்னர் கூறியுள்ளார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை செயற்படுத்தல் தொடர்பில் அமெரிக்காவின் முனைப்பை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது
ஆளில்லா நீமூழ்கி மூலம் தேடுதல்
காணாமல் போன மலேசியன் விமானத்தை கண்டறியும் முகமாக தானாகவே இயங்கக் கூடிய ரோபோ நீர்மூழ்கி முலம் இந்து சமுத்திரத்தில் முதலாவது சுழியோடும் நடவடிக்கை இடம் பெற்றள்ளது, சிறிய நீர்மூழ்கியால் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் மேற்பரப்புக்கு வந்தது. நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு பின்னடைவு அல்ல என்றும்.. ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடந்த வாரம் கண்டறியப்பட்ட சமிக்ஞைகள் அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி பதிவு கருவியில் இருந்துதான் வந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் அந்த சிறிய நீர்மூழ்கி மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமெரிக்க கடற்படையினர் கூறியுள்ளனர்.