கல்விழான் காந்திஜி சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-

annar news-annar-யாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலையத்தில் பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 14.04.2014 அன்று திங்கட்கிழமை காந்திஜி சனசமூக நிலையத்தலைவர் திரு அன்னலிங்கம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமண்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரியின் இளைப்பாறிய முன்னாள் அதிபர், சுழிபுரம் ஐக்கிய சங்க இளைப்பாறிய அதிபர், சுழிபுரம் காட்டுப்புலம் அதிபர் திரு.ச.பலகுமார் அவர்களும் கிராமசேவகர் திரு சிறீரஞ்கன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந் நிகழ்வில் காந்திஜி சனசமூக நிலையத் தலைவர் திரு அன்னலிங்கம் அவர்கள் உரையாற்றும்போது, இக் கிராமம் கல்வியில் பின்தங்கி உள்ளது. கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இன்று உலகம் எங்கோ வளர்ந்து விட்டது. இந்த கிராமத்திலலிருந்து இதுவரை ஒருவர் கூட அரச உத்தியோகத்திற்கு செல்லவில்லை. எமது இப் பிரதேச கல்வியில் எமது பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஐங்கரன் அவர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் எமது பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அவர் வழங்கியுள்ளார். அத்துடன் இப்பகுதி மாணவர்கள் இரவு நேரங்களில் கற்பதற்காக தனது மாதாந்த கொடுப்பனவை வழங்கி மின் வசதியை ஏற்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், இந்த பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி வசதியை மேம்படுத்துவதே இப் பகுதி மக்களுக்கு நாம் செய்யும் மிக பெரிய தொண்டு ஆகும். கடந்த கல யுத்தத்தினால் நம் பலவற்றை இழந்துள்ளோம். அவற்றிலிருந்து மீள்வதானால் எம்மிடம் உள்ள ஒரே பாதை கல்வியில் முன்னேறுவது மட்டுமே. இதன் வாயிலாக மட்டுமே எமது எதிர்கால சந்ததிக்கு எமது கடந்தகால நினைவுகளை உரிய முறையில் கொண்டுசெல்ல முடியும். யுத்தம் எமது பலவற்றையும் இழக்க செய்தாலும் எம்மிடம் உள்ள கல்வி எனும் பாரிய சொத்தை எவராலும் காவுகொள்ள முடியாது. இன்று பல துறைகளில் எம்மவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு நாமும் முன்னேறுவதற்கு முயற்சிக்கவேண்டும். இப்பகுதி பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளை கல்வியில் உயர்நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஆவல் உள்ளதை நான் நன்கு அறிவேன். கடந்தகால புலமைப்பரிசில் புள்ளிகள் சற்று குறைவாக கிடைத்துவிட்ட நிலையில் இப்பகுதி பெற்றோரது மனக்குமிறலை நான் நேரில் கண்டு கொண்டேன். இதனால் இவ் ஆண்டு முதலாக இவ் சனசழூக நிலையத்தில் மாலை நேரத்தில் புலமைப் பரிசில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். இச் செயற்பாட்டின் வாயிலாக இவ் ஆண்டு ஓர் மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்க முடியும். மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்க வழங்கப்படும் இவ் உதவிகளை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இதேவேளை கல்விக்கான ஊக்குவிப்புக்கள் தொடர்பாக சரியான முறையில் கோரிக்கைகள் முன்வைக்கப்படடவேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் தேவைகளில் வேறுபாடு உள்ளது. சரியான முறையில் இதனை இனங்காண்பதன் வாயிலாகவே மட்டும் சரியான தேவையினை பூர்த்தி செய்ய முடியும். இதேவேளை புலம்பெயர் நாடுகளில் இருந்து இவ்வாறான உதவிகளை வழங்கும் அன்பு நெஞ்சங்களுக்கு இவ் இடத்தில் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இச் செயற்பாடுகள் தொடர வேண்டும். இவ்வாறான சிறு சிறு உதவிகள் வாயிலாக மாணவர்கள் ஊக்கூவிக்கப்பட வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக அழிவாயுத யுத்தத்தில் பல வடுக்களை சுமந்தோம் இன்று நாங்கள் மீண்டும் ஒர் யுத்தத்திற்கு முகம் கொடுக்கின்றோம் அவ் யுத்தம் அறிவாயுத யுத்தம் இவ் யுத்;தத்pல் நாம் வெற்றி பெற வேண்டும் இதற்கான படையணியே எமது மாணவர் படையணி. இப் படையணியை உரிய முறையில் தயார்படுத்த நாம் தயாராக வேண்டும். இதன் வாயிலாகவே உரிய வெற்றியை பெற முடியும். இன்று பிறந்துள்ள ஜய வருடம் ஜய என்பது வெற்றியை குறிப்பது இதன் அறிகுறியாக அறிவாயுதப் போரில் வெற்றிபெற தயாராக புறப்படுவோம். தலைமை உரையில் தலைவர் குறிப்பிடுகையில், இப்பிரதேசத்திலிருந்து இதுவரை ஒருவர் கூட அரச உத்தியோகஸ்தர் இல்லை என குறிப்பிட்டார் அவ் இலக்கை அடை நாம் அனைவரும் ஒன்றுபடடு முயற்கிப்போம் அந்த நாளே இப்பிரதேசத்தின் விடிவு நாள் ஆகும் என்று தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது, எமது பிரதேசத்தினை முன்னேற்றுவதற்கு நாம் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பொறிமுறை கல்வியில் மாற்றத்தினை உருவாக்க வேண்டும் என்பதாகும். கடந்த காலத்தில் வீழ்ச்சியுற்று இருந்த கல்வி முறையானது தற்போது முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகர்ந்து செல்வது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். கலவியில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மாணவர்களுககு உறுதுனையாக பெற்றோரும் ஆசிரியரும் கூடிய அளவான ஒததுழைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான ஒருங்கிணைந்த முயற்சிவாயிலாக மட்டுமே உரிய இலக்கை அடைய முடியும். இதேவேளை பெற்றுக் கொள்கின்ற கற்றல் உபகரணங்களை உரிய தேவைகட்கு உரிய முறையில் பயன்படுத்தி அ;தன் வாயிலாக கல்வியில் மேல்நிலை பெற முயற்சிக்க வேண்டும். கல்வியில் எமது சழூதாயம் உயர்நிலை பெறும்போது மட்டுமே இனிவருங்காலங்களில் பல வியங்களில் சாதனைகளை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார். இந் நிகழ்வுக்கான அனுசரனை சுழிபுரம் பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது லன்டன் வாழ் திரு ரவிசங்கர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது. இந் நிகழ்வில் இப் பிரதேச மாணவர்கள் 66 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.