Header image alt text

வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க வருடாந்த பொதுக்கூட்டம்-

kootturavu sankam 03 kootturavu sankam 04 kootturavu sankamயாழ். வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுசங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தலைவர் திருமதி.சிவநீதன் அம்சமாலிதேவி அவர்கள் தலைமையில் வட்டு கிழக்கு அறிவொளி சனசழூக நிலையத்தில் நேற்றையதினம் (18.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க தலைவர் திரு.கே.சிவகுருநாதன், யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க செயலாளர் ச.பரமாணந்தம். சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க சங்கானை பிராந்திய சபை தலைவர் வீ.செல்வரத்தினம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வை.கைலைநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக து-157 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகஸ்தர் நிரோஜினி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகஸ்தர் விஜிதா, யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க வெளிக்கள உத்தியோகஸ்தர் கௌரிதேவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயற்பாடுகளிற்கு பரிபூரண ஒத்துழைப்பு நல்கிய பெண்களுக்கும் இக் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களுக்கும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது மதாந்த கொடுப்பனவின் ஊடாக அன்பளிப்புகளை வழங்கி ஊக்குவித்தார். திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பதவிக்கு வந்த நாள் முதலாக தனது மாதாந்த கொடுப்பவை சமூக நன்மைக்காக வழங்குவது இங்கு குறிப்பிடக்கூடியது.

சக்கரத்தை முருகமூர்த்தி கோவில் மணிமண்டப திறப்புவிழா-

karanthai 03 karanthai 05 karanthai 06 karanthai 08 karanthai 09 karanthai 10 karanthai 11 karanthaiயாழ். சங்கரத்தை கரந்தை குளவத்தை முருகமூர்த்தி கோவில் நாகலிங்கம் இரத்தினசிங்கம் மணிமண்டபம் திறப்பு விழா 12.04.2014 அன்று ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.இ.வெள்ளியம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வீ.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் திரு.த.குருகுலராஜா அவர்களும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் தெல்லிப்பளை துக்கையம்மன் ஆலய தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் வடமாகாணசபை கல்வி அபிவிருத்தி ஆலோசகர் கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இப் பிரதேசத்தில் ஆலய அறநெறி மாணவர்களின் வளர்ச்சிக்கும் பாலர்பாடசாலை மாணவர்களின் வழர்ச்சிக்கும் இவ்வாறான ஒர் சிறப்பு மிகு மணிமண்டபத்தினை அமைத்தமையை இட்டும் இம் மண்டபத்தினை இப்பிரதேசத்திற்கு அற்பணித்தவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை இப்பிரதேசத்தினுடைய தவிசாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைய சூழலில் சழூகத்திற்காக தன்னலமற்று பணியாற்றிவருபவர்கள் செற்பமாகவே உள்ளனர் இந் நிலையிலும் கல்விப்பணிக்காக பணியாற்றிவருபவர்கள் இன்னமும் மிக குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் இவ்வாறான இப்பணிகளை மேற்கௌ;பவர்களை பாராட்டுவது காலத்தினுடைய மிக முக்கிய தேவை ஆகும். இதேபோன்று தற்போது இங்குள்ள கல்விச்சூழலில் பல தடங்கல் நிகழ்வுகள் நிலைகள் உள்ளன. Read more

சித்தன்கேணியில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்புவிழா-

sithankerny 03 sithankerny 04 sithankerny 05 sithankernyஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்பு விழா நிகழ்வு யாழ். சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரமத்தில் ஆசிரியர் குகபரன் தலைமையில் 12.04.2014 அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (நல்லை ஆதீனம்) அவர்களும் பிரம்மச்சாரி யாக்கிறிட் சைத்தைன்யா (சிம்யா மிசன்) அவர்களும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இதன்போது, இன்று இந்நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இன்று எமது பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றாக வட்டு இந்துக்கல்லூரி திகழ்கின்றது பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற தயாராக உள்ளனர். இவ்வாறான மிகப் பெரிய கைங்கரியத்திற்கு வழிவகுத்தவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆவார். இவரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் இன்று மிகப் பெரிய சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இன்று நாம் ஒரு பொதுத்தேவைக்காக சிறுதுண்டு நிலம் பெறுவது என்பதே இயலாத நிலையில் உள்ளது. Read more

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்-தருஸ்மான்-

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இன்னர் பிரஸ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணை வெற்றிகரமானது என்று கருத முடியுமா? என்று தருஸ்மனிடம் வினவியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கம்போடிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் அது படிப்படியாக கிடைத்துள்ளது என்று அவர் மறைமுகமாக இதன்போது பதிலளித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமூக தீர்வு காணப்படும் – ராஜ்நாத் சிங்-

xஇலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதே தமது நோக்கம் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலின் ஆறாம்கட்ட வாக்குப் பதிவு அடுத்த வாரம் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப்போவதில்லை. அயோத்தியில் இராமல் கோயில் கட்டப்படவுள்ளது, தமிழக மீனவர்கள் மாத்திரமல்லாது இந்திய மீனவர்கள் அனைவரது நலனையும் கருத்திற்கொண்டு தேசிய மீனவர் நல ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இம்முறை மக்களவைத் தேர்தலில் தமது கட்சி 300ற்கும் மேற்பட்ட ஆசங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடும். நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார். புதிய அரசை உருவாக்க அ.தி.மு.க, தி.மு.க அல்லது வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது என பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸியில் இலங்கை அகதிகளின் உரிமை மறுப்பு-

australiaஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவிதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையான அகதிகள் என்பதை நிரூபித்து அகதி அந்தஸ்தினை பெற்றுக்கொள்ள சட்டரீதியான மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச நிபுணர்களின் இணையத்தளம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் அங்குள்ள அகதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடை விதித்திருந்தது. இதன்மூலம் அகதிகளின் பாதுகாப்பு வீசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அகதிகள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடற்படையினரால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை – பாதுகாப்பு அமைச்சு-

கடற்படையினர் முகாம்கள் அமைத்தமையால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் கடற்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டமை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இக் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய நிராகரித்துள்ளார். முள்ளிக்குளம் மற்றும் மரிச்சுக்கட்டி ஆகிய பகுதிகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்த காரணத்தினால் ஒரேயொரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இடம்பெயர்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அந்த குடும்பம் வில்பத்து வனப் பகுதியில் குடியேறவில்லை என அவர் கூறியுள்ளார். கடற்படையினர் தமது காணிகளை சுவீகரித்தமையால் வில்பத்து வனப்பகுதியில் குடியேறியுள்ளதாக முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், கடற்படையினர் குறித்த முஸ்லிம் குடும்பங்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பி.பி.சி செய்தியாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு-

imagesபி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு செய்திகளுக்கு பொறுப்பான ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெவுலனுக்கு அரசாங்கம் வழங்கிய இரண்டு வருடத்திற்கான வீசா அனுமதி நீடிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் காலவதியாகவும் அவரது வீசா அனுமதியை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருந்த போதிலும், வரகக 3மாத வீசாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதேவேளை, மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் வீசா அனுமதி முடிவடைந்த பின்னர், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் 2,700 தற்கொலைகள்-

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கடந்த வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பான தகவலே அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கதிர்காமம் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு-

yகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வேன் ஒன்று வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்றுகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 3 பெண்களும் 2 ஆண்களுமே பலியாகியுள்ளனர். சம்பவத்தில் 7வயது சிறுவன் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கண்டி, அம்பதென்ன பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு இலக்காகியுள்ளனர்.

அமெரிக்க விளையாட்டுத்துறை தூதுவர்கள் விஜயம்-

அமெரிக்காவின் இரண்டு விளையாட்டுத்துறை தூதுவர்கள் இலங்கை;கு விஜயம் செய்யவுள்ளனர். தாமிக்கா வில்லியம்ஸ் மற்றும் எட்னா கெப்பெல் ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அமெரக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 21ம் திகதிமுதல் 25ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் கொழும்பு காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்தித்து, பல்வேறு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

மாங்குளத்தில் குண்டு மீட்பு-

மாங்குளம் திரிபுரம் பகுதியிலுள்ள காணியொன்றின் கிணற்றிற்கு அருகில் ஆர்.பி.ஜி. ரக குண்டொன்று மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வளவின் உரிமையாளர் கொடுத்த தகவலிற்கமைய அவ்விடத்திற்கு இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று அக்குண்டை வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்ததாக மாங்குளம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 64வயது மூதாட்டி கைது-

கிளிநொச்சியில் 64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்மாவதி எனும் மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மூதாட்டியை வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அண்மைக்காலமாக புலிகளை மீள் உருவாக்க முயற்சி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் பல பொதுமக்களை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.