சித்தன்கேணியில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்புவிழா-

sithankerny 03 sithankerny 04 sithankerny 05 sithankernyஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரம திறப்பு விழா நிகழ்வு யாழ். சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆச்சிரமத்தில் ஆசிரியர் குகபரன் தலைமையில் 12.04.2014 அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (நல்லை ஆதீனம்) அவர்களும் பிரம்மச்சாரி யாக்கிறிட் சைத்தைன்யா (சிம்யா மிசன்) அவர்களும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இதன்போது, இன்று இந்நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இன்று எமது பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றாக வட்டு இந்துக்கல்லூரி திகழ்கின்றது பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். இன்னும் பல ஆயிரம் மாணவர்கள் பலன் பெற தயாராக உள்ளனர். இவ்வாறான மிகப் பெரிய கைங்கரியத்திற்கு வழிவகுத்தவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் ஆவார். இவரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் இன்று மிகப் பெரிய சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இன்று நாம் ஒரு பொதுத்தேவைக்காக சிறுதுண்டு நிலம் பெறுவது என்பதே இயலாத நிலையில் உள்ளது. மிகப்பெரிய ஒர் பகுதியை கல்விக்காக அதிலும் இந்து மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணம் செய்தமை என்றும் சழூகத்தினால் மறக்கமுடியாத ஒன்றாகும், இவ்வாறான என்றும் மாறாத நிலைபெறக்கூடிய சேவை செய்தவர்களது சேவையை என்றும் போற்றும் அதேவேளை அவர்களது பணிகளை மீளவும் மீளவும் நினைவுபடுத்துவதனுடாக அவர்களது பெருமை மட்டுமல்லது அவர்கள் போல் பணிசெய்பவர்களின் அல்லது செய்யத் துடிப்பவர்களை மேலும் தூண்டக்கூடிய வகையில் அமையக்கூடியதாய் அமையும். இதேவேளை இவ்வாறாக மிகப்பெரிய பணியினை செய்பவர்களை நினைவு கூறுவது அதனிலும் மிக முக்கிய அம்சமாகும். இன்று எம்மில் பலர் இவ்வாறான மகான்களின் பணியினை மறந்த நிலையில் உள்ளமையும் மனதிற்கு வேதனையான விடயம் ஆகும். சித்தர்கள் வாழ்ந்த புனித பூமியாகிய சித்தனகேணியில் சித்தர்கள் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்தப்பகுதியில் கேணிகளை அமைத்துள்ளனர். கடந்து விட்ட ஒரு காலத்தில் காலத்தினால் செய்யப்பட்ட மகத்தான பணியினை நிறைவேறறிய ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணநாவலர் பணியினை இன்று நினைவுகூர்ந்து அவரது ஆன்மீக பயணத்தினையும் அறநெறிப் பயணத்தினையும் செவ்வனவே தொடர வழிவகை மேற்கொண்ட இவ்வூர் சபாரத்தினம். திருச்சிற்றம்பலம் அவர்களின் சேவையை போற்றுகின்றேன். அவரது தன்னலம் அற்ற சேவையை பாராட்டி இந் நிகழ்வில் அவருக்கு அறநெறிக்காவலன் எனும் உயரிய கௌரவத்தினை வழங்குகின்றேன். இவ்வாறே இம்மண்டபத்தினை உரிய முறையில் அறநெறி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்த காலங்களில் பயன்படுத்த வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.