வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச்சங்க வருடாந்த பொதுக்கூட்டம்-

kootturavu sankam 03 kootturavu sankam 04 kootturavu sankamயாழ். வட்டு கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுசங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தலைவர் திருமதி.சிவநீதன் அம்சமாலிதேவி அவர்கள் தலைமையில் வட்டு கிழக்கு அறிவொளி சனசழூக நிலையத்தில் நேற்றையதினம் (18.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க தலைவர் திரு.கே.சிவகுருநாதன், யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க செயலாளர் ச.பரமாணந்தம். சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க சங்கானை பிராந்திய சபை தலைவர் வீ.செல்வரத்தினம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வை.கைலைநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக து-157 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகஸ்தர் நிரோஜினி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகஸ்தர் விஜிதா, யாழ்மாவட்ட சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்க வெளிக்கள உத்தியோகஸ்தர் கௌரிதேவி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயற்பாடுகளிற்கு பரிபூரண ஒத்துழைப்பு நல்கிய பெண்களுக்கும் இக் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களுக்கும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது மதாந்த கொடுப்பனவின் ஊடாக அன்பளிப்புகளை வழங்கி ஊக்குவித்தார். திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பதவிக்கு வந்த நாள் முதலாக தனது மாதாந்த கொடுப்பவை சமூக நன்மைக்காக வழங்குவது இங்கு குறிப்பிடக்கூடியது.

சக்கரத்தை முருகமூர்த்தி கோவில் மணிமண்டப திறப்புவிழா-

karanthai 03 karanthai 05 karanthai 06 karanthai 08 karanthai 09 karanthai 10 karanthai 11 karanthaiயாழ். சங்கரத்தை கரந்தை குளவத்தை முருகமூர்த்தி கோவில் நாகலிங்கம் இரத்தினசிங்கம் மணிமண்டபம் திறப்பு விழா 12.04.2014 அன்று ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.இ.வெள்ளியம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வீ.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் திரு.த.குருகுலராஜா அவர்களும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் தெல்லிப்பளை துக்கையம்மன் ஆலய தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் வடமாகாணசபை கல்வி அபிவிருத்தி ஆலோசகர் கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் இப் பிரதேசத்தில் ஆலய அறநெறி மாணவர்களின் வளர்ச்சிக்கும் பாலர்பாடசாலை மாணவர்களின் வழர்ச்சிக்கும் இவ்வாறான ஒர் சிறப்பு மிகு மணிமண்டபத்தினை அமைத்தமையை இட்டும் இம் மண்டபத்தினை இப்பிரதேசத்திற்கு அற்பணித்தவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை இப்பிரதேசத்தினுடைய தவிசாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைய சூழலில் சழூகத்திற்காக தன்னலமற்று பணியாற்றிவருபவர்கள் செற்பமாகவே உள்ளனர் இந் நிலையிலும் கல்விப்பணிக்காக பணியாற்றிவருபவர்கள் இன்னமும் மிக குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் இவ்வாறான இப்பணிகளை மேற்கௌ;பவர்களை பாராட்டுவது காலத்தினுடைய மிக முக்கிய தேவை ஆகும். இதேபோன்று தற்போது இங்குள்ள கல்விச்சூழலில் பல தடங்கல் நிகழ்வுகள் நிலைகள் உள்ளன. எமது பிரதேசத்திலேயே பல மணவர்கள் மேலதிக கற்றல் செயற்பாடுகளை மேற்கௌ;வதில் பல தடங்கல்களை எதிர்நோக்குகின்றனர். இவர்களின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்கு உதவக்கூடிய வகையில் பெற்றோரது பொருளாதார நிலை இன்று மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. இந் நிலையில் மாணவ்கள் பல தடைகளை கல்விச் சூழலில் எதிர் கொள்கின்றனர். இந் நிலையினை புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் அறிய வேண்டும். இந்த நிலையில் எமது பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு மாணவருக்கு இரண்டு யூரே என்ற வகையில் 100 மாணவர்களுக்கு கல்லிக்கு உதவுவதற்கு புலம்பெயர் நாட்டில் உள்ளவர்கள் முன்வந்து செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை முன்னகர்த்த உதவ வேண்டும். இந்த வகையில் இப்பிரதேசத்தில் இம் மணிமண்டபத்தினை அமைத்து அறநெறி மற்றும் கல்விப்பணிக்கு உதவிய வள்ளலார் இரத்தினசிங்கம் பாலகிருஸ்னன் அவர்களது அளப்பரிய பணியினை போற்றி சமூக ஜோதி என்ற உயரிய கௌரவத்தினை இச் சபையின் முன்னிலையில் வழங்குகின்றேன். இப்பணியினை முன் உதாரணமாக கொண்டு ஏனையவர்களும் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.