வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனை பாடசாலைத்திட்டம் 

chulipuram periya thampiranchulipuram periya tampiranchulipuram periyathampiran 02chulipuram periya tampiran2

யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 100 பஜனைப் பாடசாலைத் திட்டமானது நேற்று முன்தினம் 18.04.2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், சுமார் 50ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யாழ் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் நூல்களை அன்பளிப்புச் செய்து பஜனை பாசாலையை ஆரம்பித்து வைத்தார்.

siththankerny amman kovilsiththankerny amman kovil3siththankerny amman kovil5இதேவேளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரினால் முன்னெடுக்கப்படும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் நேற்று முன்தினம் மாலை யாழ். சித்தன்கேணி அம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள், சுமார் 50ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யாழ் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் நூல்களை வழங்கி பஜனைப் பாசாலையை ஆரம்பித்து வைத்தார்.

சண்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கலந்துரையாடல்-

1யாழ். சுழிபுரம் பெரியபுலோ சண்ஸ்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினருடன் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பனருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 14.04.2014 அன்றுமாலை கலந்துரையாடியிருந்தார். இதன்போது சண்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பல்வேறு தேவைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் கலாநிதி கண்ணண் மற்றும் விளையாட்டுக் கழக போசகர் ஆனந்தி உட்பட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வலிமேற்கு பிரதேச சபையில் அட்டவணைப்படுத்தாத பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு கடந்த 17-18.04.2014 வியாழக்கிழமை அன்றுவரையில் யாழ். வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுவதில் தென்னாபிரிக்கா உறுதி-

இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதில் தென்னாப்பிரிக்கா உறுதியாக இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்துக்கு பொறுப்பாக தென்னாப்பிரிக்க அரசாங்கம் நியமித்துள்ள தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் மத்தமேலா சிரேல் ரமபோசா விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார். ஏற்கனவே இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்றம் மற்றும் நகர சபைத் தேர்தல்கள் எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தரப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

iranaimadu neer unnaviratham.....கிளிநொச்சி விவசாயிகளால் இன்றுகாலை தொடக்கம் கரைச்சி பிரதேசசபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வழங்கிய உறுதிமொழிகளினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்தில் தமது கோரிக்கைகளைப் புறந்தள்ளி கிளிநொச்சி மக்களையும் யாழ் மக்களையும் முரண்படவைக்கும் செயற்பாடுகளில் நீர்வழங்கல் அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் இரணைமடுக்குளத்தைச் சார்ந்த 22 உப-பிரிவு விவசாய அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கில் வீதி புனரமைப்பு-

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட செட்டியார்மடம் துணைவி சந்தியை இணைக்கும் ஏறத்தாழ 1.5கிலோமீற்றர் நீளமான வீதியானது பல காலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்தது. மேற்படி வீதியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் அதேவேளை விவசாய தேவைக்கும் உரிய ஒன்றாக உள்ளது. அண்மையில் இந்த வீதி புனரமைக்கப்பட்டமையானது தமக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், தமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போரை வெளியேற்ற நடவடிக்கை-

அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போரை வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச காணிகளில் பலவந்தமாக தங்கியிருப்போர் தொடர்பில் ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். பலவந்தமாக தங்கியிருப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இதுவரை குறித்த இடங்களிலிருந்து வெளியேறாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அரச காணிகளை கைப்பற்றியிருப்போர் தொடர்பில் கிராமசேவை அதிகாரிகள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படும் என அமைச்சர் தென்னகோன் மேலும் கூறியுள்ளார்.

பஸ்களில் மும்மொழிக் கொள்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு-

போக்குவரத்துசபை பஸ்களில் மும்மொழிக் கொள்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரச மொழிகள் ஆணைக்குழு குற்றச்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிபதியின் ஊடாக தெளிவூட்டப்பட்டுள்ளதை அடுத்து அதற்கான அறிக்கையை வழங்குவதற்கு போக்குவரத்து சபைக்கு இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே கைதானார்-பொலீஸ் பேச்சாளர்-

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக பொலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கான பணத்தை புலிகளே இப் பெண்ணுக்கு வழங்கியுள்ளனர். அது தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.