வலிமேற்கு தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம்-

arali kilakku (2) arali kilakku (3) arali kilakku (4) arali kilakku (5)யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரினால் முன்னெடுக்கப்படும் 100 பஜனை பாடசாலைத்திட்டம் 18.04.2014 அன்றுமாலை அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தில் ஆரம்பித்து வைககப்பட்டது. இன் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் nஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் உள்ளடங்கலாக பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சுமார் 100 குமேற்பட்ட மாணவர்களுக்கு யாழ்பாணம் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகாணந்தரின் நூல்களை அன்பளிப்பு செய்து பஜனை பாசாலையை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அவர் கருத்து தெரிவிக்கையில் வெறுமனவே எமது பண்பாடு சீர்குலைந்து விட்டது இளைய தலைமுறை வழிதவறிவிட்து என்று கூறுவதில் பயன் ஏதுமில்லை. இச்சூழ்நிலையில் இருந்து எமது இளைய தலைமுறையை காப்பதற்கு நாம் முன்வர வேண்டும் எம் மத்தியில் உள்ள பண்பாட்டு அம்சங்கள் சீரழிக்கப்படுமானால் எமது இனத்தினுடைய இருப்பும் அற்றுப்போகும் நிலை உருவாகும். இந் நிலையில் சழூகத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

வவுனியா வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்-

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். கைகுண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கைதி சுகயீனமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் விளக்கம்-

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்றை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி,எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இதன்போது விளக்கமளிக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திபில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

சுயாதீன ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்-

அண்மையில் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளலான சிவஞானம் செல்வதீபன் இனம் தெரியாத மிலேச்சர்களால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் எனது வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கின்றேன். ஜனநாயகத்தின் துண்களில் ஒன்றாக கருதப்படும் ஊடகத்துறை யாழ்பாணத்தில் மலினப்படுத்தப்படுவது மிக கேவலமான ஒன்றாகவே உள்ளது. இச் செயற்பாடுகள் மக்கள் ஜனநாயகத் தன்மையில் கொண்டுள்ள மிகுதி நம்பிக்கையையும் இழக்கச் செய்யும். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் வழமையான ஒன்றாகவே உள்ளது. இச் செயற்பாடுகளின் பின் இனம் தெரியாத நபர்கள் என்பதும் வழமையான ஒன்றாகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாக ஊடகம் சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் (திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்)

வலி மேற்கில் கல்லறையிலிருந்து கலிலோயா வரை உயிர்ப்பின் பஜனை-

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் காவேரி கலாமன்றம் கிறீஸ்துவுக்கான சிறுவர் ஊழியம் இணைந்து நடாத்திய கல்லறையில் இருந்து கலிலோயா வரை உயிர்ப்பின் பஜனை 19.04.2014 அன்றுமாலை இடம்பெற்றது. இந் நிகழ்வானது முன்னாள் வலிமேற்கு பிரதேச சபையின் செயலரும் காவேரி கலாமன்றத்தின் பொருளாளருமாகிய திரு.எஸ்.புத்திசிகாமணி தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி. மோகன்ராஜ் அவர்களும் முதன்மை விருந்தினராக பரந்தன் சேகர சேகரக் குரு வண இயேசுரட்ணம் ரிச்சட் சோதி சொறுபன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், இறையியல் பேராசிரியர் தேவஅருட்செல்வம் மற்றும் விஞ்ஞான பேராசிரியர் கலாநிதி நித்தி கனகரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வலிமேற்கில் சிகரட் விற்பனை செய்யாத கடைகளுக்கு சான்றிதழ் வழங்குதல்-

யாழ். வலிமேற்கு பிரதேச சபையினது கடந்த மாதாந்த கூட்டம் தவிசாளர் வலிமேற்கு பிரதேச சபை திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றபோது பலசரக்கு கடைகளில் சிகரட் வியாபாரம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாடசாலைகளுக்கு அண்மையில் சிகரட் விற்பனையை தடுத்தல் என்பனவற்றோடு சிகரட் விற்பனை செய்யாத வியாபார நிலையங்களுக்கு பிரதேச சபையால் சான்றிதழ் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் வியாபாரம் செய்வோர் வியாபாரம் செய்யும்வேளை வெற்றிலை பாக்கு சாப்பிட்டவாறு வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்படடதோடு நிலத்தில் வைத்து மீன் விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்-

கிளிநொச்சி பகுதியில் லொறி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுத்திகரித்த தண்ணீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டதில் இவ் விபத்து இன்றுகாலை நேர்ந்துள்ளது. இதுபற்றிய விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்-

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் சிலர் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ரயில்வே திணைக்களத்தில் இருக்க வேண்டிய தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ரயில்வே திணைக்களத்திற்கான தொழில்நட்ப உதவியாளர்களின் எண்ணிக்கை 8,600ல் இருந்து 5,000வரை குறைக்கப்பட்டுள்ளதென இலங்கை சுதந்திர ரயில்வே ஊழியர்கள் சங்க பிரதம செயலர் நதீர மனோஜ் பெர்ணான்டோ கூறியுள்ளார். இதேவேளை, ரயில்வே திணைகளத்திற்கான தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கையை 8,600ஆக தொடர்ந்தும் பேண அனுமதிக்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வெலிகம, பொல்அத்துமோதற பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி, இந்நாட்டு தயாரிப்பு ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 8, மேலும் பல வெடிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்புறுகம பிரதேசத்தைச் சேர்ந்த 33வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலீஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆளுநரின் உறுதிமொழியையடுத்து போராட்டம் நிறைவு-

யாழ். மாநகர சபையில் பதில் தொழிலாளர்கள் கடமையாற்றி கடந்த ஏழு மாதங்களாக வேலையற்று இருக்கும் தொழிலாளர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை துரிதமாக வழங்கக் கோரி ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்றுகாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 5 தொடக்கம் 12 ஆண்டு காலமாக நாங்கள் மாநகரசபையில் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றினோம். திடீரென கடந்தாண்டு 9ம் மாதம் தற்காலிக தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த 9ம் மாதம் 13ம்திகதி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டோம். அப்போது எமது போராட்ட இடத்திற்கு வருகை தந்த தொழில் திணைக்கள அதிகாரிகள் யாழ் மாநகர சபை மேஜர் ஆகியோர் எமக்கு Read more