2013, அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணியின் வசம்-

arasa athipar vetri kannam (3)arasa athipar vetri kannam (1)2013ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்திற்கான போட்டிகள் யழ். மானிப்பாய் இந்துக்கல்லூhயில் 22.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மானிப்பாய் பொலிஸ் அதிகாரி, மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். முதல் நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு வைபவ ரீதியாக விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணிக்கும் சங்கானை பிரதேச செயலக அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆண்களுக்கான துடுப்பாட்டத்தில்;; சங்கானை பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் மாவட்ட செயலக அணியினரை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது. அத்துடன் பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தில் வேலணை பிரதேச செயலக அணியினை எதிர்த்து ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது.அதனைத் தொடர்ந்து காற்பந்தாட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியினரை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி வெற்றியீட்டியது. இறுதி நிகழ்வாக கயிறு இழுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. பெண்களுக்கான கயிறு இழுத்தலில் கோப்பாய் பிரதேச செயலக அணியும், ஆண்களுக்கான கயிறு இழுத்தலில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியினரும் வெற்றியீட்டிக்கொண்டன. அதன்பின் விருந்தினர் உரை, நன்றி உரை என்பன இடம்பெற்றன. இறுதி நிகழ்வாக இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளுக்கான பரிசில்கள் வழங்கல் இடம்பெற்றது. இதில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணி 2013ஆம் ஆண்டிற்கான வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.