வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம்-

pajanai padasalai 01pajanai padasalai 04pajanai padasalai02pajanai padasalai 03யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் வட்டு வடக்கு சித்தன்கேணியிலுள்ள கொத்தன்வளவு ஞானவைரவர் ஆலயத்திலும் சங்கானையிலுள்ள உருத்திரன் வைரவர் ஆலயத்திலும் 25.04.2014 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் புளொட் தலைவரும், மன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அப்பியசக் கொப்பிகளையும் கரிகணன் அச்சகத்தினால் இலவசமாக வெளியீடு செய்யப்பட்ட சுவாமி விவேகாணந்தரின் நூல்களையும் வழங்கிவைத்தனர் இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பொருளாதார தடை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை-ஜோன் ரென்கின்-

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பிரித்தானியா முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது. ஆனால் பொருளாதார தடையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆலோசனை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கைக்கு எதிராக பொருளதார தடையை ஏற்படுத்தும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை. இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானியா இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரி இருந்தது என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேலும் கூறியுள்ளார்.

சித்தன்கேணி கற்பகசோலை சனசமூக நிலையத்தினருடன் கலந்துரையாடல்-

katpakasolai sanasmoka nilaiyam 7katpakasolai sanasmooka nilaiyam 04katpakasolaikatpakaslai sansamooka nilaiyam 05யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பினை ஏற்று வலிமேற்கு பிரதேசத்திற்கு நேற்று (25.04.2014) வெள்ளிக்கிழமை விஜயம் செய்திருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் பளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் வட்டு வடக்கு சித்தன்கேணியிலுள்ள கற்பகசோலை சனசமூக நிலையத்தனருடன் அபிவிருத்தி தொடர்பில் உரையாடியிருந்தனர். இதன்போது அங்குள்ள தேவைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

கூட்டமைப்புடன் தனித்து பேச்சில்லை-அமைச்ச் நிமால் சிறிபால டி சில்வா-

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என நீர்ப்பான முகாமைத்துவ அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பை ஆரோக்கியமாகவே நாங்கள் பார்க்கின்றோம். ஆளும் கட்சி தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரியிருந்தோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம்-

unnamed823.04.2014 புதன்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது இவ் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினரும் வலிமேற்கு பிரதேசத்தை சேர்ந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு பிரதேச சபை வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்கினி ஐங்கரன் அவர்கள் முன்வைத்தார். இப் பிரேரனையின்போது கட்சி பேதமற்ற வகையில் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இத்தீர்மானத்தினை ஆதரித்து உரை நிகழ்த்தி பிரேரனையை ஏகமனதாக நிறைவேற்றினர். இப்பிரதேச மக்களும் இது தொடர்பில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தவிசாளர் குறிப்பிட்டார்.

யாழ். ரயில் பாதையின் பணிகள் ஆகஸ்டுடன் பூர்த்தி-

யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்.மத்திய ரயில் நிலையம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒத்த வடிவமைப்பில முன்பு இருந்ததைப் போன்றே துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்று முழுதாக பூர்த்தியடைந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூளாய் சைவப்பிரகாச வித்தியாசலை வீதி புனரமைப்பு-

moolai saivapragasa vithyalaya veethi (2) moolai saivapragasa vithyalaya veethi (7)யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட மூளாய் பிரதேசத்தில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பயன்படுத்தும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை வீதி பொதுமக்கள் மற்றும் பாடசாலை சமூகம் வீதி திருத்தம் தொடர்பில் பிரதேச சபைக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முழுமையாக திருத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு தரப்பினருக்கு மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை-

யாழ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தை தடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றியத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிப்படைய செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட கூடாது என்று கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடியவனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு ஆணை-

நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கையை விதித்துள்ளது. இலங்கையில் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன்மீது குற்றம் சுமத்தியுள்ளது. நெடியவனை கைது செய்வதற்கான உதவியை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக இலங்கை பொலிஸார் இம்மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர். இதற்கமைய நெடியவனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

கடன் பெறுவதில் இலங்கைக்கு முதலிடம்-உலக வங்கி-

அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற உலக வங்கியின் அவசர கடன் திட்டத்தை பெறும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற அனர்த்தங்கள் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக இந்த கடன்களை வழங்கும் திட்டம் உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர்களை வழங்க அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமைகளின் போது ஏழ்மையான மக்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர். இந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சந்திப்பு-

ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் கட்சியின் கொள்கைகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.