ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களுக்கு அஞ்சலி, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

karainagar (14)karainagar (15)karainagar (1)karainagar (17)karainagar (6)karainagar (16)karainagar (11)karainagar (2)karainagar (5)மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (25.04.2014) வெள்ளிக்கிழமை பி;ற்பகல் 4.00 மணியளவில் யாழ். அராலி மத்தி ஊரத்தி கிராமத்தில் உள்ள அம்பாள் கடற்தொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர் திரு.நா.ஜெயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ந இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் – சுடரொளி பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான ஈ. சரவணபவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்;தார்தன் மற்றும் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் திரு எஸ்.ஜெ.செபரட்ணம் மற்றும் சுரேஸ் கல்விநிலைய இயக்குனர் திரு.எஸ்.சின்னையா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக, மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது திரு உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் நினைவுப்பேருரையினை இளைப்பாறிய அதிபர் சி.சிவஞானபோதன் அவர்கள் நிகழ்த்தினார். இந் நிகழ்வினை தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றன. 

இதனைத் தொடர்ந்து ஜேர்மனி வாழ் தோழர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் உறவுகளுக்காக கல்விக்கு கை கொடுப்பேம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இக் கிராமத்தைச் சேர்ந்த 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேசத்தின் சிறந்த பெண் ஊடகவியலாளர் விருது செல்வி செ.மல்லிகா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ் விருதினை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் வழங்கினார். இவ்வாறே இக் கிராமத்தின் ஆற்றல் மிகு பெண்மணிக்கென வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளரால் வழங்கப்படும் விருது இக் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் ஞானம்மா அவர்களுக்கு நாடாளுமற்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களால் வழங்கப்பட்டடது. இதேவேளை இந்நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் இந்து சமயம் சார் அறநெறி நூல்களும் வழங்கப்பட்டது

இந் நிகழ்வில் வலிமேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது, இந் நிகழ்வில் கலந்து கொள்வதில் உறவுப்பாலமகவே கருதுகின்றேன் அமரர் ரூபன் அவர்களை ஒரு ஊடகவியலாளனாக மிக நீண்ட காலமாக நான் நன்கு அறிவேன். அக்காலப்பகுதியில் அவர் ஆற்றிய சேவை மிக முக்கியமான ஒன்றாகும் அமரரது இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழ் சழூகத்திற்கே ஒர் பேரிளப்பாகும். அக்காலப்பகுதியில் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கான அச்சுறுத்தல் தாக்குதல்களுக்கு மத்தியில் சேவையாற்றினார் இன்றும் கூட ஊடகத்துறைக்கான தாக்குதல்களும் மிரட்டடல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை பலரும் அறிவர். இவ் ஊடகங்களே எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை உலகிற்கு காட்டியது மட்டுமல்லாது தமிழ் மககளை விழிப்படைய செய்து ஒன்றுபடுத்த உதவியது என்று குறிப்பிட முடியும். இன்று ஊடகத்தினை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக குறிப்பிடும் அதேவேளை மிக மிலேச்சத்தனமான தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்படுவது தமிழ் மக்கள் ஜனநாயக சூழலில் கொண்டிருந்த இம்மியளவு பற்றையும் சிதைத்து விடுகின்றது.

ஊடக துறைமீது எமக்கு எதிரானவர்கள் மிக மோசமாகவே நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது. இது மட்டுமல்லாது இன்று யாழ்ப்பாணத்திலே தழிராட்சி மகாநாட்டில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவிடம் அமைக்கப்பட்டுளது இவ் நினைவிடம் எமது கடந்தகால நினைவை இன்றைய சழூதாயத்திற்கு வழங்கி வருகின்றது அவ்வாறே தமிழ் மக்களின் துயரினை தமது எழுத்துக்களால் காட்டி அதற்கு பரிசாக தமது உயிரை கொடுத்த ஊடகவியலாளர்களுககு நினைவிடம் அமைக்கப்பட வேண்டும்.

அவ் நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஊடக தினத்தில் மலர் அஞ்சலி செலுத்த வெண்டும். இவ்வாறான நிலையில் தான் ஊடகவியலாளர்களின் பணியின் சிறப்பு வெளிஉலகிற்கு தெரியவரும். இதேவேளை புலம்பெயர் உறவான ஜேர்மனி வாழ் ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில மணவர்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படுவது போற்றத்தக்க ஒன்றாகும் இது மிக சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இனறு யுத்தத்தினால் நாம் சகலவற்றையும் இழந்து வாழ்கின்றோம். எமது இனம் மீண்டும் எழுச்சி பெற ஒரே வழி கல்வி ஒன்றே ஆகும். இவ்வாறான சிறு உதவி வழங்கப்படும் பட்சத்தில் அதன் வாயிலாக கல்லிக்கான பகுதித் தேவைகளை நிறைவேற்ற முடியும். இவ் உதவிகளை முன் உதாரணமாக கொண்டு ஏனைய புலம் பெயர் உறவுகளும் உதவ முன்வர வேண்டும் இது காலத்தினுடைய கட்டய தேவை ஆகும் என குறிப்பி;டார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்று நாம் வெறுமனே அரசினுடைய உதவிகளை நம்பி எங்களது கல்வியை மேம்படுத்த முடியாது. அது போதுமானதும் அல்ல இன்றும்கூட வட மகாகாண சபையினுடாக பல நடவடிக்கைகளை செய்வதில் பல சவால்களை எதிhநோக்க வேண்டியுள்ளது

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்கு நாம் தயாரக உள்ள போதிலும் பல தடைகளும் எம் முன்னெ காணப்படுகின்றது. இதேவேளை ஜேர்மனியிலுள்ள தோழர் செல்லத்துரை ஜெகநாதனின் இச் செயற்பாட்டை வாழ்த்துகின்றேன. இச் செயற்பாடு வாயிலாக பெறப்படும் உதவிகளை மாணவர் சழூகம் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்

இவ்வாறு சரியாக பயன்யடுத்தி பயனடையும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் இவ்வாறான உதவிகளைப் பெற்றுகொள்ள முடியும். இன்று எமது பிரதேசங்களில் கல்விக்கான தேவைகள் மிக அதிகமாக உள்ளது. இவ்வாறான இத்தேவைகளை சழூகத்திலுள்ள பலரும் அறிந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இச் செயற்பாடுகளில் அதிக அக்கறை உடையவர்களாக செயற்படுவது மிக முக்பகிய விடயம் ஆகும். இதே வேளை மாணவர்களுக்கான உதவிகள் தொடர்பில் சழூகத்தினர் எவ்வாறான உதவிகள் தேவை என்பதை இனங்காண வேண்டும் என குறிப்பிட்டார்

தொடர்ந்து உரையாற்றிய பிரதம விருந்தினர் நாடளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள், இன்று மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் மிக அவசியமானவை இவற்றை சழூகத்தில் உள்ளவர்கள் உரிய முறையில் மேற்கௌ;ள வேண்டும் இவ்வாறான கல்விக்குரிய உதவித்திட்டங்கள் பலவற்றையும் நான் மேற்கொண்டு வருகின்றேன்

இவ்வாறான உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கும் தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டதோடு. அமரர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது எழுத்துக்களை இரசித்து படிததுள்ளேன் அவரது இழப்பு இச் சழூகத்திற்கு மட்டும் அல்ல ஊடகத்துறைக்கே இழப்பாகும் வலிமேற்கு தவிசாளர் குறிப்பிட்டதுபோல் இன்று ஊடகத்துறை பாரிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கௌ;கின்றது என குறிப்பிட்டார்