மத விவகார பொலீஸ் பிரிவின் சேவை ஆரம்பம்-

மதப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலீஸ் பிரிவு நாளை முதல் இயங்கவுள்ளது. மதவிவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்படும் இந்த காவற்துறை பிரிவு, சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் செயற்படும் என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இடம்பெறுகின்ற மதங்கள் சார்பான பிரச்சினைகளை இந்த விசேட பொலீஸ் பிரிவினரே விசாரணை செய்யவுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதற்கான யோசனையை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தார்.

வில்பத்தில் குடியேறியோர்க்கு மாற்றுக் காணிகள்-

unnamedyவில்பத்து சரணாலயத்தில் அனுமதி இன்றி குடியேறியுள்ள 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார், மரிச்சிகட்டு பிரதேசத்தில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கடந்த வாரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் அவர்கள் தற்போது குடியேறியுள்ள சரணாலய பிரதேசத்திலிருந்து, ஒரு மைல் தொலைவில் காணப்படும் 50 ஏக்கர் காணிப் பரப்பில் குடியேற்றவிருப்பதாக கூறப்படுகிறது. மன்னார் மாவட்ட செயலகம் இதனைத் தீர்மானித்துள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் வகையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,

ஐ.நா. பிரதிநிதி இலங்கை வருகை-

ஐக்கிய நாடுகள் சபையின் குடிப்பெயர்வு தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா க்ரீபே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்படி எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி மதல் 26ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திகதி குறித்த உறுதியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவர் இலங்கையில் குடியேற்றங்கள் மற்றும் இடப்பெயர்வுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லிபியாவிலிருந்து இலங்கையர்களை மீளழைக்க நடவடிக்கை-

unnamedxலிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக அங்கிருக்கும் 14 இலங்கையர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். லிபியாவிலுள்ள இலங்கையர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வராத்திற்குள் அவர்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மங்கள ரன்தெனிய மேலும் கூறியுள்ளார்.