நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர் தின நிகழ்வுகள்-
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம், கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டம் இடம்பெற்றுது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் மே தின ஊர்வலம் ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டததில்; ஆரம்பிக்கப்பட்டு பொரளையை வந்தடைந்து நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலமும் கூட்டமும் அம்பாறையில் இடம்பெற்றது. மற்றும் தேசிய சுதந்திர முன்னனியின் மேதின ஊர்வலம் தெமட்டகொட புனித ஜோனஸ் கல்லூரிக்கு அருகில் ஆரம்பிக்கபட்டு தெமட்டகொட பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேதின பேரணி தெஹிவளை எஸ்.டீ.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு ஹெவலோக் நகர் பீ.ஆர்.சீ. விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதேவேளை ஜனநாயக கட்சியின் மேதின ஊர்வலம் கொழும்பு கோட்டை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு பெலவத்தை புத்ததாச மைதானத்தில் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளை நகரில் இடம்பெற்றதுடன் மலைய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் ஹட்டன் நகரில் நடைபெற்றது. இதேவேளை அனைத்து விதமான அடக்கமுறைகளுக்கும் எதிரான ஐக்கிய தொழிலாளர் மேதினப் பேரணி என்ற தொனிப் பொருளில் பல்வேறு தொழிற் சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து நடத்திய மேதின பேரணி கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.