வலிமேற்கில் உள்ளுராட்சிமன்ற துணைவிதிகள் தயாரிக்கும் செயற்திட்டம்-

vali metkil ulluratshi thunaivithikal thayarippu (1)உள்ளுராட்சி மன்ற துணைவிதிகள் தயாரிக்கும் செயற்திட்டம் கடந்த 29.04.2014, 30.04.2014 ஆகிய இரு நாட்கள் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலமைதாங்கி உரையாற்றியபோது, உள்ளுராட்சி நிர்வாகம் என்பது மிக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. ஆரம்பகால வரலாற்றில் ஓவ்வோர் கிராமங்களும் கம்சபா என அழைக்கப்படும் கிராம சபையால் நிர்வகிக்கப்பட்டுள்ளது இக்கம்சபாக்களில் காணப்பட்ட தலைவர்கள் கமிக்க அல்லது காமினி என அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கிராம மட்டத்தில் நல் ஆட்சி நடாத்தியவர்கள் பிற்காலத்தில் நாட்டையும் ஆட்சி செய்துள்ளனர். சிறப்பான ஆட்சிக்கு கிராம மட்ட நிர்வாகமே உதவியுள்ளது. குறிப்பாக இந்த நாட்டில் நல் ஆட்சி 44 ஆண்டுகள் நடாத்திய மன்னன் எல்லாளன் இக்கிராம மட்ட ஆட்சியின் வாயிலாக சிறந்த நிர்வாகத்தினையும் நீதி தவறாத ஆட்சியினையும் நடாத்தியதாக கூறப்படுகின்றது. இதே நிர்வாக கட்டமைப்பின் நடவடிக்கையை ஆங்கிலேய ஆட்சியின் போதும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இன்று இக்கட்டமைப்பானது உள்ளுராட்சி அமைப்பாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இவ் உள்ளுராட்சி அமைப்பால் நடாத்தப்படும் நிர்வாகம் சிறப்பானதாகவும் நியாயமானதாகவும் அமைய வேண்டுமானால் அங்குள்ள துணைச்சட்டங்கள் மிக முக்கியமானதாக அமையும் இத்துணைச் சட்டங்கள் பற்றிய விழிப்புனர்வு மக்கள் மத்தியில் சரியானதக சென்றடைய வேண்டும் இவ்வாறான ஒர் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே இத்துணைச் சட்ங்களால் நன்மைகளை அனுபவிக்க முடியும். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள துணைச்சட்டங்கள் மிக நீண்ட காலத்திற்கு முன் அமையப்பெற்றவை. இன்று நாம் அனைவரும் இணைந்து உருவாக்கும் துணைச்சட்ங்கள் இன்;னும் பல காலம் அமுலில் இருக்க்கூடியது. இவ் விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் தியாகத்துடனும் செயலாற்ற வேண்டும் என்றார்.