அன்னையர் தினம்

mother

உடையார்கட்டில் வாழ்வாதார உதவி, கணேசபுரம் பாடசாலை வகுப்பறை கட்டுமான உதவி-

Ganesapuram school bavan (1) udaiyarkattu bavanபுலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். மேற்படி தேவிகா தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார். லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியினை பாடசாலையின் அதிபரிடம் அவர் வழங்கிவைத்துள்ளார். மேற்படி வகுப்பறையின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும்; நிலையில் அதனைக் கட்டி முடிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுஜித்ரா துரை சுவாமிநாதன் கிளிநொச்சிக்கு விஜயம்-

sucetra_durai_001இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களை கையாளும் இணைச் செயலாளர் சுஜித்ரா துரை சுவாமிநாதன் நேற்று கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இந்திய நிதி உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை இதன்போது அவர் பார்வையிட்டுள்ளார். சுஜித்ரா துரை சுவாமிநாதன் நேற்று முன்தினம் யாழ் வலிகாமம் பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கு இந்திய நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளார். இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்காக சுமார் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கில் உலக புவி தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி-

Puvi thina Oviya potti (3)Puvi thina Oviya potti (2)யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உலக புவி தினத்தினை முன்னிட்டு இன்று (11.05.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய போட்டியின் போது பல பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் ஆவலுடன் பங்குபற்றியிருந்தனர் இப் போட்டிகள் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தீர்வு கிடைக்கும் வரை தலையீடுகள் தொடரும்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

sureshதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் வரையில், வெளிநாடுகளில் பல்வேறு அமைப்புக்களின் தலையீடுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இன்றுகாலை ஊடகத்திற்கு இதனைக் கூறியுள்ளார். புலம்பெயர்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றார் அவர்.

அதிபர் நியமனங்களை வழங்குவதில் முறைகேடு-

கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மாகாணத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்பங்களில் உரிய கல்வி தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, உரிய கல்வித் தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாடு தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு-

mavai senathirajahபுதிதாக தெரிவாகின்ற இந்திய அரசுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி கூறியுள்ளார்.

சந்தேகநபர்களை கைதுசெய்வது தொடர்பில் பரிசீலனை-

santhekanaparkalai kaithu seiyaதமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வது தொடர்பில் இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கை அரசாங்கம் 424 புலம்பெயர்ந்த தனி நபர்களுக்கு எதிராக தடை விதித்திருந்தது. அவர்களில் 32 பேர் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைதுசெய்து, இலங்கையிடம் ஒப்படைப்பது பற்றி இந்தியா அவதானம் செலுத்துவதாக தெரியவருகிறது. .

மட்டு. டச் கோட்டையை சுற்றுலா தளமாக்கும் ஒப்பந்தம்-

batticalao dutch koattai (2)மட்டக்களப்பு டச் கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவராயலத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி நிலையமும், அமெரிக்க தூதுவராலயமும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.. இதன் நிமித்தம் அமெரிக்க தூதுவராலயத்தின் கலாசாரம் அலுவலகத்தின் அதிகாரியொருவர் நேற்று வருகைதந்து அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்

சாவகச்சேரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

யாழ். சாவகச்சேரியில் நேற்றிரவு 9.30அளவல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடியிலிருந்து கோப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. வெள்ளவத்தையைச் சேர்ந்த 25வயதான இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக ஒப்பந்தம்-

untitledகொழும்பில் இருந்து வடக்குப் பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஜூலை மாதம் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் பி.ஓ.ரி. எனப்படும் நிர்மாணம்-நடைமுறை-மாற்றல் என்ற அடிப்படையின் கீழ் கைச்சாத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வட பகுதி அதிவேக நெடுஞ்சாலையுடன், மலைநாட்டுடனான நெடுஞ்சாலையினையும் இணைப்பது குறித்தும் இந்த ஒப்பந்தத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. தற்போது இலங்கையின் வறுமை 6 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் கூறியுள்ளார்.

இலங்கை பெண்ணை நாடு கடத்த தீர்மானம்-

இலங்கை கடவுச்சீட்டை காணாமல் செய்தமைக்காக, கனடாவில் கடந்த 14 வருடங்களாக வசித்து வந்த பெண் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். தமது 15வது வயதில் கனடாவுக்கு அகதிகயாக சென்ற குறித்த பெண், அங்கு கனேடியர் ஒருவரை திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்றுள்ளார். எனினும் அவருக்கு கனேடிய குடியுரிமையை பெறுவதற்கு இலங்கையில் அவருக்கு வழங்கப்பட்ட கடவுச் சீட்டு தேவைப்பட்டது. ஆனால் அவர் அதனை கனேடிய குடிவரத்திணைக்களம் அல்லது கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் தவறவிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். கனடாவில் தமது குடும்பம் வசிக்கின்ற நிலையில் அவர் மாத்திரம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுகின்றமை, கனேடிய அரசின் கொடூரமான செயல் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தல்கள் திணைக்கள செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்-

தேர்தல்கள் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் அணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி மேற்படி பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

வலி மேற்கில் சிறுவர் மகிழ்வகம் ஆரம்பித்து வைப்பு-

valimetku siruvar makilvagam (1)unnamed2unnamed1unnamedயாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 08.05.2014 வியாழக்கிழமை அன்று சிறுவர் மகிழ்வகம் என்ற நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வானது சுழிபுரம் பாண்டுவட்டை பகுதியிலுள்ள முரளிகிருஸ்னா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு சனசமூக நிலையத்தலைவர் கிருஸ்ணா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று பல்வேறு வகையிலும் சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன இவற்றில் சில மட்டும் வெளியில் தெரிகின்றன பல விடயங்கள் வெளிப்படுவதில்லை. கூடுதலாக இவ்வாறான சம்பவங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்கள் பலர் உளத்தாக்கத்திற்கு உட்படும் நிலையையும் இங்கு குறிப்பிட முடியும். வருமுன் காக்கும் வகையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்;பில் அக்கறை கொண்டவர்களாக சமூகத்தில் இருக்கும் அனைவரும் தொழிற்பட வேண்டும். இந்த வகையில் இவ் சிறுவர் மகிழ்வக நிகழ்வின் ஊடாக சிறுவர்களது தலைமைத்துவம் நற்பழக்கவழக்கங்களை மேம்படுத்தக்கூடிய நிலை உருவாகும் இதேவேளை சிறுவர்களது விடயம் தொடர்பில் பெற்றோருமு; அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாக உள்ளது சிறுவர்கள் எங்கு செல்கின்றனர் எவர்களுடன் பழகுகின்றனர் அவர்களது நடத்தைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றி பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். சிறுவர்களை புகையிலை போன்ற போதை தரும் பொருட்களை கொள்வனவு செய்ய அனுப்புதல் பொருட்கொள்வனவின் பின் மிகுதி பணத்தை சிறுவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள தவறுதல் போன்ற பல விடயங்களில் நாம் விடும் தவறுகள் சிறுவர்களை தவறான பாதைக்கு இட்டுச்சென்று விடுகின்றது. இவ் வியங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இதேபோன்று சிறுவர்கள் முன் தவறான சொற்பத பிரயோகம் பெற்றேர்களுக்கிடையேயான முரண்பாடுகள் அயலவர்களுடனான முரண்பாடுகள் மது மற்றும் போதை தரும் பொருட்களின் பயன்பாடு போன்ற விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் இவ்வாறே சிறுவர்களும் அச்சமான சூழலில் தனித்து இருப்பது மற்றும் தனித்து நடமாடுவது தவிர்க்கப்பட வேண்டும். எமது சிறுவர்களை நாமே பாதுகாக்கும் நோக்குடனேயே இச் செயல்பாட்டை இன்று இங்கு ஆரம்பித்து உள்ளேன். இச் செயற்பாடு எமது பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் நிகழ்த்த உத்தேசித்துள்ளேன் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட சிறிகஜன் பல நிகழ்ச்சிகளின் ஊடாக மாணவர்களுக்கான பல செயற்பாடுகளை மேற்கொண்டு விழிப்புணர்வை வழங்கினார்.