தாதியர்தினம்

892645146Nurses-Day

முன்கூட்டிய வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள்-

mun koottiya vaakkaalar idaappuவாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வாக்காளர் இடாப்பு திருத்தம் டிசம்பர் 31ம் திகதியே நிறைவு செய்யப்படுகின்ற போதும் இம்முறை இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் வாக்காளர் இடாப்பு திருத்தம் 5 மாதங்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 31ம் திகதி நிறைவு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது. இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை-

untitledமுல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தைக் கண்ட இவர்களின் பிள்ளைகள் இவ்விடயம் தொடர்பாக அயலவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். அயலவர்கள் பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய பொலீசார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தென்னிலங்கை செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினருடன் சந்திப்பு-

1719856666tna3யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற இச் சந்திப்பின்போது, இலங்கை முழுதும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ அடக்குமுறைகள், ஜனநாயக விரோதச் செயற்பாடுளுக்கு எதிராக வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களும் தென்னிலங்கை அமைப்புக்களும் இணைந்து செயற்படுவது பற்றியும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்ப அரசியல் ரீதியான ஒத்துழைப்பை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

மீனவர் பேச்சுவார்த்தையின்போது இந்தியா தரப்பால் யோசனை முன்வைப்பு-

meenavar pechchuvaarthaiyinpothuஇந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இணக்கம் எட்டப்பட வேண்டும் என இந்திய மீனவர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்த 19 மீனவர்களும் 8 அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர். மற்றும் இலங்கை மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 20 உறுப்பினர்களும் 10 அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்து சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது எனினும் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லை எனவும் இந்திய அரசாங்கத்தினால் இதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேலியகொடை நகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை-

07787களனி, பேலியகொடை நகர சபை உறுப்பினர் ஒருவர், தளுகம பழைய கண்டி வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். நகர சபை உறுப்பினரான சாமின் சந்தருவன் என்பரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேலியகொடை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப் பத்திரம் பெறுமாறு அறிவுறுத்தல்-

meenpidi padaku anumathi perumaaruமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி படகுகளுக்குமான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளாத மீனவர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டொமினிக்கோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக காமினி மத்துரட்ட நியமனம்-

கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு காமினி மத்துரட்ட நியமிக்கப்பட்டுள்ளார், கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தன பொலிஸ் ஊக்குவிப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய காலி பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மாஅதிபரல் காமினி மத்துரட்ட இன்றையதினம் முதல் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்படவுள்ளார்.