சிறீநகர் முன்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-
வவுனியா பூந்தோட்டம் சிறீநகர் தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளியினரின் வேண்டுகோளிற்கு இணங்க புளொட் முக்கியஸ்தரும், வவுனியா முன்னைநாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரண தொகுதிகள் இன்று (13.05.2014) கையளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஓவியன், நிகேதன், காண்டீபன், செல்வம் ஆகியோரும், சிறீநகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினரும், சிறீ துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலருமான திரு எஸ்.தர்மகுலசிங்கம், சிறீநகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர் சதீஸ், மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி திருமதி. ஸ்ரீரஞ்சன், பொருளாளர் திருமதி சாந்தகுமாரி, தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளி தலைவி திருமதி ஜீவகேஸ்வரி, செயலாளர் திருமதி ஜான்சி, முன்பள்ளி ஆசிரியை செல்வி நிரோஜினி, பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள், எமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலம் அமைவது முன்பள்ளியில் இருந்து, எனவே மாணவச்செல்வங்கள் நல்ல முறையில் தமது ஆரம்பக் கல்வியை பெற்று நாட்டின் வளமான சிற்பிகளாக மிளிர வேண்டும் என கேட்பதுடன், ஆசிரியர்களும் மாணவர்களில் அதீத அக்கறை எடுத்து பெற்றோர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதும் யாவரும் அறிந்ததே. இது தொடர்ந்து எமது சமுகத்தில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார். சிறீ துர்க்கை அம்மன் ஆலய பரிபாலனசபை செயலாளர் திரு தர்மகுலசிங்கம் உரையாற்றும்போது எமது வேண்டுகோளிற்கு இணங்க இந்த உதவிகளை ஒழுங்கமைத்த புளொட் முக்கியஸ்தர் மோகன் அண்ணா அவர்களிற்கும் லண்டன் தோழர் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களுக்கும் எமது நன்றிகள் என்று தெரிவித்தார். மாதர் சங்க தலைவி திருமதி ஸ்ரீரஞ்சினி உரையாற்றும்போது, எமது கிராமத்தில் வறுமைகோட்டிற்கு உட்பட்ட பலர் இருப்பதனால் பல காலங்களாக அபிவிருத்திகள் அற்ற கிராமம்போல தோற்றமளிக்கிறது, எனவே சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் எமது கிராமத்திற்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.