ஆசிய நாடுகளில் சித்திரவதை வாழ்வில் யதார்தமாக உள்ளது தடுக்கப்படவேண்டும்.- சர்வதேச மன்னிப்புச்சபை

aiஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட ஆசிய நாடுகளில், சித்திரவதை வாழ்வில் யதார்தமாக உள்ளதெனவும் இதற்கு எதிராக நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமெனவும்  சித்திரவதை என்பது ஆசிய நாடுகளில் பரவலாக  காணப்படுகின்றது. இந்த பிரச்சினை ஒரு சர்வாதிகார நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. இது இந்த பிராந்தியம் முழுவதற்கும் உரியதாக உள்ளது எனவும்  ஆசிய நாடுகளில் சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தமது பொறுப்பை பேச்சுடன் நிறுத்திவிட கூடாது எனவும் சர்வதேச ஓப்பந்தங்களில் கையொப்பமிடுவது முக்கியமானதே. ஆனால் அது மட்டும் போதுமானது அல்ல. அதை செயல் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளில் ஒப்புதல்; வாக்குமூலம் பெறவும், செயற்பாட்டாளர்களை செயற்படவிடாமல் தடுக்கவும், சித்திரவதை பயன்படுத்தப்படுகின்றது.  மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளில் சித்திரவதையில் இருந்து தப்பிக்கொள்ள கப்பம் கொடுக்க முடியாத ஏழைகளிடம் பணம் பெற்றுக்கொள்ள சித்திரவதை பயன்படுத்தப்படுகின்றது. கடந்த 5 வருட காலத்தில் உலகில் குறைந்தபட்சம் 141 நாடுகளில்  சித்திரவதையும் வேறு மோசமான வழிகளும் பயன்படுத்தப்படுவதாகவும்.  பல ஆசிய – பசுபிக் நாடுகளில் சித்திரவதையின் பயன்பாடும் வேறு கொடூரமான மனித தன்மையற்ற அல்லது கேவலப்படுத்தும் தண்டனைகள் சாதாரணமானவை எனவும், அவை உயர்மட்ட குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனையை எனவும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக் பணிப்பாளர் ரிச்சர்ட் பெனர்ட் ‘சித்திரவதையை நிறுத்து’ எனும் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்து வைத்த சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.

ஐ.நாவில் 1984 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு  30 வருடங்கள் கழிந்த பின்னரும்  குறைந்தபட்சம் 23 ஆசிய, பசுபிக் நாடுகளில்  தற்போதும் சித்திரவதை  இடம்பெறுகிறது என சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு கூட்டமைப்பு நிராகரிப்பு

1719856666tna3இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம். நல்ல பல சந்தர்பங்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையாளராக பேச்சுவார்த்தைகளை தொடங்க தென் ஆப்ரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையே அமைச்சரின் முன்னெடுப்பு என்றும். நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத அமைச்சரால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் என்ன பங்காற்ற முடியும். நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமாக ஒரு தீர்வு எட்டப்படாவிட்டால் அரசில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியத் தேவை ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதையும்   கூட்டமைப்பினர் விமர்சித்துள்ளனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழும் மக்கள் எங்கே செல்வார்கள்? -தலைமன்னார்

imagesமன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்டேசன்  பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கை விக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்விடம் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என்றும் புகையிரத நிலைய நிர்வாகத்தினால் அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் புகையிரத காணியில் அனுமதியில்லாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றிக்கொள்ளுதல் எனும் தலைப்பில் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவ்விடத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என கருதப்படும் குறித்த பகுதியில் சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் உள்ளது. குறித்த பகுதியில் உள்ள 22 வீடுகளில் பல வீடுகள் நிரந்தரமான வீடுகள், தற்காலிக கொட்டில்கள் சிலவற்றிலும் மக்கள் வாழ்கின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களினால் ஏற்கெனவே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புகையிரத தலைமையகத்தினால் தலைமன்னார் ஸ்டேசன் கிராம அலுவலகர் ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த 22 பேருக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 40 தொடக்கம் 45 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்து வருகின்ற குறித்த காணியிலிருந்து எங்களை எழும்பிச் செல்லுமாறு கூறினால் நாங்கள் எங்கு செல்வது என அந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.